பெற்றோர்களே உஷார்.. செல்போன் வெடித்து 8 வயது சிறுமி பலி.. கேரளாவில் பயங்கரம்!

Apr 25, 2023,01:16 PM IST
திருச்சூர் : கேரளாவில் மொபைல் போன் வெடித்து 8 வயது சிறுமி பலியான சம்பவம் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது. 

கேரள மாநிலம் திருச்சூரை அடுத்த திருவில்வமலா பகுதியை சேர்ந்தவர் ஆதித்யஸ்ரீ. இவர் மொபைல் போனில் கேம்ஸ் விளையாடிக் கொண்டிருந்த போது திடீரென மொபைல் போன் வெடித்து சிதறி உள்ளது. இதில் படுகாயம் அடைந்த சிறுமி, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். 



ஆதித்யஸ்ரீ, திருவில்வமலா பகுதியில் உள்ள பள்ளியில் மூன்றாம் வகுப்பு படித்து வருகிறார். தற்போது பள்ளி தேர்வுகள் முடிந்து, கோடை விடுமுறை விடப்பட்டுள்ளதால் வீட்டில் இருந்த ஆதித்யஸ்ரீ,நேற்று காலை 10.30 மணியளவில் வீட்டில் மொபைல் போனில் வீடியோ கேம் விளையாடிக் கொண்டிருந்துள்ளார். அப்போ���ு இந்த சம்பவம் நடைபெற்றதாக சொல்லப்படுகிறது. 

முகத்துக்கு அருகில் வைத்துக் கொண்டு விளையாடியுள்ளார் இந்த சிறுமி. அவரது முகம், கைகள் கடும் சேதமடைந்துள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து விசாரிக்க தடயவியல் ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது. விசாரைணக்கு பிறகு உரிய நடவடிக்கை எடுக்க உள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இருப்பினும் விளையாடிக் கொண்டிருந்த சிறுமியின் உயிரை மொபைல் போன் குடித்த சம்பவம் கேரளாவில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

மதுராந்தகம், தாராபுரம் சட்டசபைத் தொகுதிகளுக்கு அக்டோபர்6ல் இடைத் தேர்தல்

news

தமிழக சட்டசபையில் காரசார விவாதம்: திமுக.,வின் அமளிக்கு இடையே முதல்வர் விஜய் ஆவேச பதிலுரை

news

முதல்வர் விஜய் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக எம்.எல்.ஏ-க்கள் தர்ணா... வெளிநடப்பு

news

ரீல்ஸ்க்காக மட்டுமே பேச்சு...சபாநாயகர், முதல்வர் மீது உதயநிதி கடும் விமர்சனம்

news

திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை FIR பதிவு

news

மக்கு மக்கு நான் மட்டும் .. ஒனக்கு ரொம்ப தொக்கு தொக்கு!

news

இந்தப் பூ நிலா! ஒரு பொன் நிலா! வா நிலா! என் தேன் நிலா!

news

இனிப்புடன் வந்தார்.. ஆசி பெற்றார்.. முன்னாள் மாணவர் குறித்து நெகிழ்ந்த ஆசிரியர்!

news

சிந்தனைச் சிதறல்.. உள்ளிருந்து முந்தி உந்தும் எந்த ஒன்றும் நம்மை முன்னோக்கி உயர்த்தும்!

அதிகம் பார்க்கும் செய்திகள்