பத்தாம் வகுப்பு மாணவர்களே.. இம்புட்டு விஷயம் உங்களுக்கு இருக்கு.. ரிலாக்ஸா இருங்க!

Mar 11, 2026,02:43 PM IST

- மயிலாடுதுறை த.சுகந்தி,M.Sc,B.Ed,B.A (Hindi)


பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் தொடங்கியுள்ளன. முதலில் தேர்வு எழுதும் செல்லக் குட்டிகளுக்கு வாழ்த்துகள்.. சரி பத்தாம் வகுப்பு தேர்வு எழுதும் மாணவர்களுடன் சில சிறப்பு தகவல்களைப் பகிர்ந்து கொள்ளலாம் வாங்க.


பத்தாம் வகுப்பில் நல்ல மதிப்பெண் பெற்றால் மேல்படிப்பை எளிதாக தொடர முடியும்.


பத்தாம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்றால் நாம் விரும்பிய பாடப்பிரிவினை பெற முடியும்.


நாம் முதல் குரூப்பில் சேர்ந்தால் நாம் விரும்பிய பாடத்தை தேர்வு செய்து உயர்கல்வி பெறுவதற்கு வழியாக இருக்கும்.


எதிர்காலத்தில் என்ன ஆக வேண்டும் என்பதை கருத்தில் கொண்டு மேல்நிலைப் படிப்பு படிக்கும் போது உங்களுக்கு பிடித்த பாடத்தை தேர்வு செய்து படிக்கவும் .




பெற்றோரின் விருப்பத்திற்காக படிக்காமல் உங்களின் விருப்பத்திற்கு, உங்களுக்கு நன்றாக தெரிந்த பாடத்தை தேர்வு செய்து படிப்பது நல்லது .


மேல்படிப்பு படிப்பதற்கு கட்டண சலுகைகள் கிடைக்கும் . 


மாநில அல்லது மாவட்ட அல்லது பள்ளி அளவில்  முதல் மூன்று இடங்களை பெற்று பரிசுகளை பெறலாம். 


பாலிடெக்னிக் (Diploma) படிப்புகள் அல்லது ஐ.டி.ஐ (ITI) தொழிற்பயிற்சி சேர்வதற்கு  வாய்ப்பு இருக்கிறது. இந்த 

 படிப்புகளில் சேர்வதற்கும் அதிக மதிப்பெண் பெற்றால் கட்டண சலுகை கிடைக்கும்.


காவல்துறை (Police) துறை, இராணுவம் (Army) போன்ற பாதுகாப்பு துறை, அரசு அலுவலகங்களில் உதவி பணி,

வங்கி மற்றும் தனியார் நிறுவனங்களில் அடிப்படை பணி பெறுவதற்கு கல்வித் தகுதி பத்தாம் வகுப்பு என்பதால் நன்றாக படித்து தேர்வு எழுதி நல்ல மதிப்பெண் பெறுவதற்கு  முயற்சி செய்ய வேண்டும். 


பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் மிக உயர்ந்த மதிப்பெண் பெற்றால் போட்டித் தேர்வு இல்லாமல் மத்திய அரசு பணியான அஞ்சல் நிலையத்தில் பணிபுரிய வாய்ப்பு இருக்கிறது என்பதை உணர்ந்து அதிக மதிப்பெண் பெற முயற்சி செய்யுங்கள்.


பத்தாம் வகுப்பு தானே என்று அலட்சியம் இல்லாமல் நன்றாக படித்து தேர்வில் அதிக மதிப்பெண் பெற அனைத்து மாணவர்களுக்கும் வாழ்த்துக்கள்.


ஏட்டு சுரைக்காய் கறிக்கு உதவாது என்பதை உணர்ந்து பத்தாம் வகுப்பு முடித்த பிறகு கணினி வகுப்பு(Computer class),தட்டச்சு வகுப்பு (type writing class), Hindi போன்ற ஏதேனும் மொழியினை கற்றுக்கொள்ள முயற்சி செய்யலாம். பதினொன்றாம் வகுப்பு படித்துக் கொண்டு மேலே உள்ள வகுப்பிலும் கலந்து கொள்ள முயற்சி செய்யலாம்.


பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் போது முழு கவனத்துடன் படித்து நல்ல மதிப்பெண் பெற முயற்சி செய்யுங்கள்.


(த.சுகந்தி, மயிலாடுதுறையைச் சேரந்தவர். அருள் தமிழ் இலக்கியம்,மயிலாடுதுறை அமைப்பை நடத்தி வருகிறார். ஆத்திச்சூடி 109, நாலடியார், திருக்குறள்  போன்ற தொகுப்பு நூல்களில் சிறுகதை ஒன்று எழுதி உள்ளார். பாரதியார் நவீன ஆத்திச்சூடி எழுதி மகாகவி பாரதி விருது பெற்றுள்ளார். திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டு மையத்தில் தலைமை ஒருங்கிணைப்பாளராகவும் இருக்கிறார்)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

சிறு துறும்பாக இருந்தாலும்.. துச்சமாக எண்ணாதீர்கள்!

news

துபாய் விமான நிலையம் அருகே ஈரான் ட்ரோன் தாக்குதல்: இந்தியர் உட்பட 4 பேர் காயம்

news

பயணங்கள் முடிவதில்லை.. Respect your journey

news

மீண்டும் வாழ ஒரு வாய்ப்பு கிடைத்தால்.. If I had life to live over again

news

தமிழகம் முழுவதும் தொடங்கிய SSLC பொதுத்தேர்வு: 9 லட்சம் மாணவர்கள் பங்கேற்பு

news

தூக்கத்தில் வருவது கனவல்ல, உங்களைத் தூங்கவிடாமல் செய்வதே கனவு.. சொன்னது யாரு?

news

பெண்ணாக இருப்பதே பெருமை.. The Pride of Being a Woman (Short Story)

news

பத்தாம் வகுப்பு மாணவர்களே.. இம்புட்டு விஷயம் உங்களுக்கு இருக்கு.. ரிலாக்ஸா இருங்க!

news

சிறிய கசிவும் கப்பலை மூழ்கடிக்குமா? .. கேட்டதுமே குழம்புதுல்ல.. வாங்க தெரிஞ்சுக்குவோம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்