முடிவை மாற்றிய கோபி... பாக்யலட்சுமி குடும்பமே ஹேப்பி அண்ணாச்சி!

May 06, 2023,03:37 PM IST
சென்னை : பாக்யலட்சுமி சீரியலில் இருந்து விலகும் முடிவை மாற்றிக் கொண்டுள்ளார் கோபி கேரக்டரில் நடிக்கும் சதீஷ். இதனை பாக்யலட்சுமி சீரியல் டீம் மொத்தமும் கொண்டாடி வருகிறது.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் டாப் ரேட்டிங் சீரியல்களில் ஒன்று பாக்யலட்சுமி. இந்த சீரியல் ஏற்கனவே தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட பல மொழிகளில் பல ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வரும் நிலையில் தமிழ் டிவி ரசிகர்களிடமும் இந்த கதை வரவேற்பை பெற்றுள்ளது. ஒரு குடும்ப தலைவியின் கதை என இன்ட்ரோ கொடுத்து துவங்கப்பட்ட இந்த சீரியல் ஒட்டுமொத்த குடும்பத்தை சுற்றியதாக உள்ளது.



இந்த சீரியலில் எத்தனையோ கேரக்டர்கள் நடித்தாலும், வில்லன் கோபி கேரக்டருக்கு தான் ரசிகர்கள் ஏராளம். பாக்யாவிற்கு எதிராக கோபி செய்யும் செயல்களை பார்த்து அவரை ரசிகர்கள் அனைவரும் திட்டி தீர்த்தாலும், மற்றொரு புறம் இரண்டு மனைவிகளை சமாளிக்க முடியாமல் கோபி தவிர்க்கும் போது வெளிப்படும் யதார்த்தமாக நடிப்பையும் ரசித்து, பாராட்டி வருகின்றனர். கோபி கேரக்டருக்காக இந்த சீரியலை பார்ப்பவர்கள் பலர்.

கோபி கேரக்டரில் நடிகர் சதீஷ் நடித்து வருகிறார். தன்னை விமர்சித்து வரும் கமெண்ட்கள் பற்றி வருத்தப்பட்டு ஏற்கனவே பல முறை வீடியோ வெளியிட்ட சதீஷ், சமீபத்தில் தனது சொந்த காரணங்களுக்காக பாக்யலட்சுமி சீரியலில் இருந்து வெளியேற முடிவு செய்திருப்பதாக வீடியோ வெளியிட்டு அனைவருக்கும் அதிர்ச்சி கொடுத்தார். ஆனால் பாக்கியலட்சுமி சீரியலில் எழில் கேரக்டரில் நடிக்கும் விஜே விஷால், டாடி உன்னை அப்படி எல்லாம் விட மாட்டோம் என இன்ஸ்டாவில் போஸ்ட் போட்டிருந்தார்.

கோபி கேரக்டரில் இருந்து சதீஷ் விலகி விட்டால் அடுத்து யார் நடிக்க போகிறார்கள்? யார் நடித்தாலும் சரியாக இருக்காது. அது சீரியலின் டிஆர்பி.,யை பாதிக்கும். இந்த சீரியல் பார்ப்பதையே பலர் விட்டு விடுவார்கள் என பல விதமான பேச்சுக்கள் எழுந்தது. முடிவை மறு பரிசீலனை செய்யும் படி சதீஷிடம் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வந்தது.

ரசிகர்கள், சீரியல் டீம் ஆகியோர் தொடர்ந்து வலியுறுத்தி வந்ததால் தற்போது பாக்யலட்சுமி சீரியலில் கோபி கேரக்டரில் இருந்து விலகும் முடிவை மாற்றிக் கொண்டிருப்பதாக சதீஷ் தெரிவித்துள்ளார். தொடர்ந்து கோபி கேரக்டரில் தானே நடிக்க உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். கோபியின் இந்த மன மாற்றத்தால் ரசிகர்களும், பாக்யலட்சுமி சீரியல் டீமும் செம குஷியாகி உள்ளனர்.

சமீபத்திய செய்திகள்

news

கண்மணியே உன் கா(த)ல் தடம் தேடி..1 (கவிதைத் தொடர்)

news

ஆசிய கோப்பை ஹாக்கி 2025.. 8 வருடங்களுக்குப் பிறகு கோப்பையை வென்று இந்தியா அசத்தல்

news

ரஜினிகாந்துடன் இணைந்து நடிக்கப் போகிறீர்களா.. கமல்ஹாசனே சொன்ன ஹேப்பி நியூஸ்

news

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் செப்டம்பர் 08, 2025... நல்ல காலம் பிறக்குது

news

தர்மம் வெல்ல வேண்டும்... அதிமுக பொறுப்புகளில் இருந்து நீக்கியதில் மகிழ்ச்சியே: செங்கோட்டையன்!

news

செங்கோட்டையன் நீக்கம்.. எடப்பாடி பழனிச்சாமியின் அதிரடியால் பரபரப்பு.. அடுத்து என்ன நடக்கும்?

news

செங்கோட்டையன் அதிமுகவின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கம்: எடப்பாடி பழனிச்சாமி

news

திருச்சியில் இருந்து... தளபதி 2026... விஜய் அரசியல் பிரச்சார சுற்றுப்பயணம் தொடக்கம்!

news

Chennai Metro.. மெட்ரோ ரயில் பயணிகளே.. இந்த முக்கியமான மாற்றத்தை நோட் பண்ணிக்கங்க!

அதிகம் பார்க்கும் செய்திகள்