சென்னை : விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் டாப் ரேட்டிங் சீரியல்களில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த சீரியல் கிட்டதட்ட 3 ஆண்டுகளுக்கு மேலாக ஒளிபரப்பாகி வருகிறது. விஜய் டிவியில் பிரைம் டைமில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் பல காலமாக டாப் ரேட்டிங்கில் இருந்து வந்த சீரியலும் இது தான். இதற்கு காரணம் கூட்டு குடும்பம், அண்ணன்-தம்பி பாசத்தை மையப்படுத்திய கதை, கதாபாத்திரங்களின் யதார்த்தமான நடிப்பு ஆகியன தான்.
ரசிகர்களின் பெரும் ஆதரவை பெற்று வந்த இந்த சீரியலில் ஆரம்பத்தில் முல்லை கேரக்டரில் நடித்து வந்த விஜே சித்ரா தற்கொலை செய்து கொண்ட பிறகு புதிய முல்லையாக காவியா அன்புமணி மாற்றப்பட்டார். இதனால் டல் அடிக்க துவங்கிய இந்த சீரியல் பிறகு அடுத்தடுத்த அதிரடி திருப்பங்கள், கதையின் போக்கில் ஏற்பட்ட மாற்றம் ஆகியவற்றின் காரணமாக மீண்டும் நம்பர் ஒன் இடத்தை தக்க வைத்தது.
இந்த சீரியலில் ஆரம்பத்தில் கண்ணனின் மனைவியாக வரும் ஐஸ்வர்யா கேரக்டரில் விஜே தீபிகா நடித்து வந்தார். இந்த காம்போவும் ரசிகர்களை கவர்ந்தது. ஆனால் திடீரென தீபிகா இந்த சீரியலில் இருந்து விலகியதால், ஐஸ்வர்யா கேரக்டரில் சாய் காயத்ரி நடிக்க துவங்கினார். சீரியலில் இருந்து விலகினாலும் கண்ணன் கேரக்டரில் நடிக்கும் விக்ரம், தீபிகா இருவரும் நிஜ வாழ்க்கையிலும் தங்களின் நட்பை தொடர்ந்தனர். இவர்கள் இருவரும் சேர்ந்து இன்ஸ்டாகிராமில் பதிவிடும் ரீல் வீடியோக்கள் லைக்குகளை அள்ளின. இவர்கள் இருவரும் மீண்டும் ஜோடி சேர்ந்து நடிக்க வேண்டும் என ரசிகர்கள் பலர் தொடர்ந்து கமெண்ட் செய்து வந்தனர்.
இப்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் ஐஸ்வர்யா கேரக்டர் கர்ப்பமாக இருப்பதாக கதை சென்று கொண்டிருக்கிறது. ஒரே சமயத்தில் தனம், முல்லை, ஐஸ்வர்யா மூவரும் கர்ப்பமாக இருக்க, அவர்களை அவர்களின் கணவன்மார்கள் விழுந்து விழுந்து கவனிப்பதும், குடும்ப பொறுப்பு முழுவதையும் மீனா தனி ஆளாக சமாளிப்பதும், அண்ணன் மற்றும் தம்பிகள் இருவரும் தனியாக சம்பாதிக்கும் நிலையில் தனக்கென சம்பாத்தியம் இல்லாததால் மனைவி மீனாவின் விருப்பத்தை நிறைவேற்ற முடியவில்லையே என குற்ற உணர்ச்சியில் ஜீவா இருப்பதாக கதை சென்று கொண்டிருக்கிறது.
அடுத்து என்ன நடக்கும், ஜீவா தனியாக தொழில் துவங்குவாரா, ஜீவா தனது மாமனார் ஜனார்த்தனின் பேச்சை கேட்டு வீட்டை விட்டு சென்று விடுவாரா என ரசிகர்கள் ஆர்வமாக எதிர்பார்த்துக் கொண்டிருக்கையில், யாரும் எதிர்பாராத விதமாக பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இருந்து விலகுவதாக ஐஸ்வர்யா கேரக்டரில் நடிக்கும் சாய் காயத்ரி அறிவித்துள்ளார். இது பற்றி அவர் தனது இன்ஸ்டாகிராம் போஸ்டில், கதையில் அடுத்து வரும் மாற்றங்களில் வரும் காட்சிகளில் நடிக்க எனக்கு விருப்பம் இல்லை. அது என்னுடைய நடிப்பு வாழ்க்கையில் எதிர்காலத்தை சரியாக இருக்காது என எனக்கு தோன்றியதால் பாண்டியன் ஸ்டோர்கஸ் சீரியலில் இருந்து விலகுவதாக முடிவு செய்துள்ளேன். என்னுடைய உணர்வை புரிந்து கொண்டு எனது முடிவிற்கு சம்மதம் தெரிவித்த விஜய் டிவி நிர்வாகத்திற்கு எனது நன்றி. எனக்கு ஆதரவு அளித்த ரசிகர்கள் அனைவருக்கும் நன்றி என குறிப்பிட்டுள்ளார்.
இனி ஐஸ்வர்யா கேரக்டரில் சாய் காயத்ரிக்கு பதிலாக விஜே தீபிகாவே மீண்டும் நடிக்க உள்ளார். இந்த கேரக்டர் மாற்றத்தை விட, சீரியலில் இருந்து விலகுவதற்காக சாய் காயத்ரி கூறி உள்ள காரணம் ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. இவர் நடிக்க முடியாது என விலகுகிறார் என்றால், சீரியலின் கதையில் அடுத்து அப்படி என்ன மாற்றம் வரப் போகிறது? நடிப்பு வாழ்க்கைக்கு சரியாக வராது என ஒரு நடிகை சொல்கிறார் என்றால் அப்படி என்ன மோசமான காட்சிகளை வைக்க போகிறார்கள்? என்பது போன்ற பல கேள்விகளை ரசிகர்கள் கேட்டு வருகின்றனர்.
தமிழ்நாட்டு மக்களின் ஒரே சின்னம் விசில்.. தவெகவுக்கு முதல் வெற்றி.. விசில் போடுவோம் - விஜய்
திருச்சி, பெரம்பலூர்உள்ளிட்ட 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.. வானிலை மையம் கொடுத்த தகவல்
விசில் கொடுத்தாச்சு.. கப்பு முக்கியம் பிகிலு.. மாமல்லபுரத்தில் ஆலோசனை.. ஆயத்தமாகும் விஜய்!
திமுக ஆட்சியில் கஞ்சா மயமான தமிழ்நாடு.. பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தாக்கு!
NDA கூட்டணியைப் பார்த்து செல்வப்பெருந்தகைக்கு குளிர் ஜூரம் ஏற்பட்டுள்ளது: அண்ணாமலை
2026 தேர்தலுக்கான விசில் ஒலித்தது-தவெக சின்னம் குறித்து பிரவீன் சக்ரவர்த்தி நெகிழ்ச்சி பதிவு!
திருப்பூரில் பரபரப்பு... கவிஞர் வைரமுத்து பங்கேற்ற நிகழ்ச்சியில் காலணி வீச்சு
தவெகவுக்கு விசில் சின்னம்: தேர்தல் ஆணையம் அதிரடி அறிவிப்பு!
மத்தியில் பிரதமர் மோடி தலைமையில் ஆட்சி..தமிழ்நாட்டில் அதிமுக ஆட்சி: எடப்பாடி பழனிச்சாமி திட்டவட்டம்
{{comments.comment}}