ராம் சரண் மகளுக்கு தங்கத் தொட்டில் பரிசளித்த அம்பானி குடும்பம்...விலை எவ்வளவு தெரியுமா?

Jun 30, 2023,04:30 PM IST
டில்லி : நடிகர் ராம் சரணுக்கு பிறந்துள்ள பெண் குழந்தைக்கு தங்க தொட்டில் ஒன்றை பரிசாக வழங்கி உள்ளது அம்பானி குடும்பம். இதன் மதிப்பு அனைவரையும் வாயடைந்து போக வைத்துள்ளது. அம்பானி குடும்பம்னா சும்மாவா என கேட்டு வைத்துள்ளது.

தெலுங்கு சூப்பர் ஹீரோவான ராம் சரண் மற்றும் உபாசனாவிற்கு திருமணமாகி 10 ஆண்டுகளுக்கு மேல் ஆகி விட்டது. இத்தனை ஆண்டுகளுக்கு பிறகு சமீபத்தில் தான் அவர்களுக்கு பெண் குழந்தை பிறந்தது. இந்த குழந்தைக்கு ஆத்யா என பெயரிட்டுள்ளனர். பெண் குழந்தைக்கு அப்பா ஆகி உள்ள ராம் சரணுக்கு பிரபலங்கள் பலரும் வாழ்த்து கூறி வந்தனர்.



இந்நிலையில் அம்பானி குடும்பம், ராம் சரணுக்கு புதிதாக பிறந்துள்ள குழந்தைக்கு 24 காரட் தங்க தொட்டில் ஒன்றை பரிசாக வழங்கி உள்ளது. இதன் பதிப்பு 10 லட்சம் ஆகும். விலை மட்டுமல்ல இந்த தொட்டிலில் அனைத்தும் சிறப்பு தான். அன்பு மற்றும் ஆசியை வெளிப்படுத்தும் விதமான அடையா சின்னங்களும் உள்ளன. இரு குடும்பத்திற்கும் இடையாயான அன்பு மற்றும் நட்பை பலப்படுத்தும் விதமாக இந்த பரிசை அம்பானி குடும்பம் வழங்கி உள்ளது. 

ராம் சரணுக்கு அம்பானி குடும்பம் அளித்த இந்த தங்க தொட்டில் பரிசு பற்றி தான் பேச்சு தான் மீடியாக்களில் ஹாட் டாப்பிக்காக போய் கொண்டிருக்கிறது. அந்த தொட்டிலில் வேறு என்னவெல்லாம் சிறப்பம்சங்கள் இடம்பெற்றுள்ளது என்பதை தெரிந்து கொள்ள பலரும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

சமீபத்திய செய்திகள்

news

சென்னையில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

news

ஜூன் 22.. முதல்வர் விஜய்யின் பிறந்தநாளில் .. புதிய குடும்ப அட்டைகள் விநியோகிக்க திட்டம்!

news

பிரிட்டனில் 16 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்த தடை

news

தமிழக அரசு குதிரை பேரத்தில் மட்டுமே கவனம் செலுத்துகிறது: கனிமொழி கடும் விமர்சனம்!

news

"இந்திரா காந்தி இருந்திருந்தால் பாஜக-விற்கு தடை விதித்திருப்பார்" - அசோக் கெலாட் சர்ச்சை பேச்சு

news

4 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா விவகாரம்...அதிமுக மனு விசாரணைக்கு ஏற்பு

news

"எங்கே போனது சிங்கப்பெண் அதிரடிப் படை?" - எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம்!

news

சட்டம் ஒழுங்கை பாதுகாக்க முதல்வர் அக்கறை காட்ட வேண்டும்! உதயநிதி ஸ்டாலின் காட்டம்

news

முதல்வர் விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கு: ஆகஸ்ட் 7-ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு!

அதிகம் பார்க்கும் செய்திகள்