கடலுக்குள் சென்று பார்க்க ஆர்வமா?

Mar 17, 2026,03:36 PM IST

- மயிலாடுதுறை த.சுகந்தி,M.Sc,B.Ed


கடலுக்குள் சென்று பார்க்க ஆர்வமா? வாங்க இன்றைய நாளை பற்றி தெரிந்து கொள்வோம்.  முப்படைகளில் ஒன்றான கப்பல் படையின் சிறப்புகளை தெரிந்து கொள்வோம்.


National Submarine Day – தேசிய நீர்மூழ்கிக் கப்பல் தினம்


தேசிய நீர்மூழ்கிக் கப்பல் தினம் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 17 அன்று கொண்டாடப்படுகிறது. இந்த நாள் கடற்படையில் உள்ள நீர்மூழ்கிக் கப்பல்களின் முக்கியத்துவத்தை நினைவுகூர்ந்து பார்ப்பதற்காக கொண்டாடப்படுகிறது.

 

நீர்மூழ்கிக் கப்பல் என்பது கடலுக்குள் பயணம் செய்யும் ஒரு சிறப்பு கப்பல் ஆகும். இது நீரின் அடியில் நீண்ட நேரம் செயல்படக்கூடியதாக இருக்கிறது.  கடற்படையில் பாதுகாப்பு பணிகளில் இது முக்கிய பங்கு வகிக்கிறது.


நீர்மூழ்கிக் கப்பல் (Submarine) என்பது நீருக்கு அடியிலும், மேற்பரப்பிலும் செல்லக்கூடிய ஒரு சிறப்பு வகை போர்க்கப்பல் அல்லது ஆய்வுக்கலம் ஆகும். இவை பாலஸ்ட் டேங்குகளை (Ballast tanks) பயன்படுத்தி நீரின் அடர்த்திக்கு ஏற்ப மூழ்கவும், மிதக்கவும் செய்கின்றன.




எதிரி நாட்டின் நடவடிக்கைகளை கண்காணிக்க உதவுகிறது. நீர்மூழ்கிக் கப்பல்கள் மிகவும் மேம்பட்ட தொழில்நுட்பத்தால் உருவாக்கப்படுகின்றன. இதில் ரேடார், சோனார் போன்ற கருவிகள் பயன்படுத்தப்பட்டுள்ளது. கடலடியில் ஆய்வு செய்வதற்கும் இதைப் பயன்படுத்துகிறார்கள்.


டீசல்-மின்சாரம் மற்றும் அணுசக்தி மூலம் இயங்கும் நீர்மூழ்கி கப்பல்கள் உள்ளன. ரஷியன் டைபூன் வகுப்பு (Typhoon class) போன்றவை ராட்சத அளவிலானவையாக காணப்படுகின்றன. நீர்மூழ்கிக் கப்பலில் பணிபுரிவோர் மிகுந்த பயிற்சி பெற்றவர்களாக காணப்படுகிறார்கள். அவர்கள் கடலுக்குள் பல நாட்கள் தங்கி பணியாற்றுகிறார்கள்.


உலக நாடுகள் பலவும் நீர் மூழ்கிக் கப்பல்களை பயன்படுத்துகிறார்கள். இது நாட்டின் பாதுகாப்பை வலுப்படுத்த உதவுகிறது. மாணவர்களுக்கு கடற்படை பற்றிய விழிப்புணர்வு அளிக்கப்படுகிறது. இந்தியாவில் கொச்சியில் தயாரிக்கப்பட்ட ‘மாஹே’ போன்ற நீர்மூழ்கி எதிர்ப்பு போர்க்கப்பல்கள் பயன்பாட்டில் உள்ளன. மேலும் ரஷ்யாவுடன் இணைந்து அணுசக்தி நீர்மூழ்கித் திட்டங்களும் உள்ளன .

 

நீர்மூழ்கிக் கப்பல்களின் வரலாற்றையும், வளர்ச்சியையும் இன்றைய நாளில் தெரிந்து கொள்வோம். கடல் ஆராய்ச்சிக்கு பெரிதும் நீர் முழிக்க கப்பல்கள் உதவுகின்றன என்பதை தெரிந்து கொள்வோம். கடற்படையில் உளவு பார்க்க, எதிரி கப்பல்களைத் தாக்க மற்றும் கடலோரக் கண்காணிப்பிற்கு முக்கியமாகப் பயன்படுத்தப்படுகின்றன என்பதை தெரிந்து கொள்வோம். 


கடல் பாதுகாப்பில் கடற்படை வீரர்கள் செய்த சேவையை நினைவுகூர்ந்து அவர்களின்  தைரியத்தை பாராட்டுவோம்.


(த.சுகந்தி, மயிலாடுதுறையைச் சேரந்தவர். அருள் தமிழ் இலக்கியம்,மயிலாடுதுறை அமைப்பை நடத்தி வருகிறார். ஆத்திச்சூடி 109, நாலடியார், திருக்குறள்  போன்ற தொகுப்பு நூல்களில் சிறுகதை ஒன்று எழுதி உள்ளார். பாரதியார் நவீன ஆத்திச்சூடி எழுதி மகாகவி பாரதி விருது பெற்றுள்ளார். திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டு மையத்தில் தலைமை ஒருங்கிணைப்பாளராகவும் இருக்கிறார்)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

திமுக, அதிமுக, பாஜக கூட்டணி... வீரமணி விவகாரத்தில் ஸ்டாலினுக்கு கேள்வி.. முதல்வர் விஜய் விளாசல்

news

மதுராந்தகம் இடைத்தேர்தல் 2026 பிரச்சாரம்.. முதல்வர் விஜய் பேச்சு எப்படி இருந்தது?

news

Good Evening Friends: மாலை நேர ஸ்நாக்ஸ் 'மொறு மொறு துணுக்கு'!

news

தை பொறந்தது அத்தை அத்தை.. உந்தன் மடி என்றும் மெத்தை மெத்தை!

news

என்னைப் பார் யோகம் வரும்.. கழுதைக்கும் யோகத்துக்கும் என்னங்க சம்பந்தம்?

news

தேர்தல் கமிஷனர் பதவி விலகாவிட்டால் அக்., 2 முதல் நாடு தழுவிய போராட்டம்: கரப்பான் ஜனதா கட்சி Warning!

news

Puzzle: அந்தாதி வினா விடை.. வர்றீங்களா விளையாடலாம்?

news

Nellai Special: வாழை இலை விருந்தும்.. நாவில் கரையும் திருநெல்வேலி சொதிக்குழம்பும்!

news

ஜெம் வீரமணி போக்சோ வழக்கு: விசாரணைக்காக சிறப்பு புலனாய்வு குழு (SIT) அமைப்பு

அதிகம் பார்க்கும் செய்திகள்