திடீரென மொட்டை தலையுடன் வந்து ஷாக் கொடுத்த தனுஷ்

Jul 04, 2023,09:54 AM IST
சென்னை : தனுஷ் தற்போது கேப்டன் மில்லர் படத்தில் நடித்து வருகிறார் என்பது அனைவருக்கும் தெரியும். இந்த படத்தின் ஷூட்டிங் பல்வேறு இடங்களில் நடத்தப்பட்டு வந்தது. இந்த படத்திற்காக நீண்ட தலைமுடி, நீளமான தாடி என வித்தியாசமான கெட்அப்புடன் வலம் வந்து கொண்டிருந்தார் தனுஷ்.

இந்த படத்தை முடித்த பிறகு சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் டி 50 என்ற தனுஷின் 50 வது படம் பெரிய பட்ஜெட்டில் தயாராக உள்ளது. இதில் த்ரிஷா, எஸ்.ஜே.சூர்யா, அமலா பால், காளிதாஸ் ஜெயராம் உள்ளிட்ட பலர் நடிக்க உள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க உள்ளார். விரைவில் இந்த படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாக உள்ளது. 



இந்நிலையில் தனது பெற்றோர், மகன்கள் மற்றும் நெருங்கிய உறவினர்களுடன் திருப்பதிக்கு சென்ற தனுஷ் மொட்டை அடித்து, தாடி எடுத்து வித்தியாசமான கெட் அப்பில் சாமி தரிசனம் வந்துள்ளார். தனுஷ் மற்றும் அவரது மகன்கள் இருவரும் மொட்டை தலையுடன் இருக்கும் போட்டோக்கள் சோஷியல் மீடியாவில் வெளியாகி செம வைரலாகி வருகிறது. 

இதனால் இது டி 50 படத்திற்கான கெட் அப்பா என பலரும் கேட்டு வருகின்றனர். டி 50 படம் துவங்கப்படுவதற்கு சில நாட்களே உள்ள நிலையில் தனுஷ் இந்த புதிய கெட் அப்பிற்கு மாறி உள்ளதால் அனைவரும் இவ்வாறு கேட்டு வருகின்றனர். ஆனால் இது டி 50 படத்திற்கான கெட் அப் எதுவும் இல்லையாம். திருப்பதி பெருமாளிடம் வேண்டுதலுக்காக தனுஷ் முடி காணிக்கை செலுத்தியதாக சொல்லப்படுகிறது.

சமீபத்திய செய்திகள்

news

ஜெம் கிரானைட்ஸ் வீரமணி வழக்கில் லஞ்சம் வாங்கிய அதிகாரிகள் யார்? விசாரிக்க சிறப்பு குழு அமைப்பு!

news

"நிர்வாக அறிவு இருக்கிறதா?" – தவெக அரசை கடுமையாக விமர்சித்து மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை!

news

குற்றவாளிகள் ஒருவரையும் விடக்கூடாது: ஜெம் கிரானைட்ஸ் வீரமணி விவகாரத்தில் முதல்வர் அதிரடி உத்தரவு

news

ஜெம் கிரானைட் வீரமணி விவகாரம்: தவெக-திமுக இடையே முற்றும் மோதல்

news

ஆளுக்கு 8 ஓட்டு.. 9 மாத மழலை எடுத்துக் கொடுத்த சீட்டு.. கலகலப்பாக முடிந்த பள்ளித் தலைவர் தேர்தல்!

news

நடிகை அம்பிகா மீது சகோதரி ராதா பரபரப்பு புகார்: ரூ.46 கோடி மோசடி செய்ததாக போலீசில் புகார்

news

வங்கக்கடலில் தீவிரமடையும் காற்றழுத்த தாழ்வுப்பகுதி: இந்திய வானிலை மையம் எச்சரிக்கை!

news

ஏகாந்தம்.. அழகிய முழு நிலவொளியில் ஆனந்த ராகம் பாடி!

news

Short Story: காணாமல் போன கண்ணன்

அதிகம் பார்க்கும் செய்திகள்