மனோபாலா திடீர் மரணம்.. திரையுலகினர் அதிர்ச்சி.. கல்லீரல் பிரச்சினை காரணமா?

May 03, 2023,02:20 PM IST
சென்னை :  நடிகரும் டைரக்டருமான மனோபாலா உடல் நலக்குறைவு காரணமாக இன்று காலமான தகவல் திரையுலகினரை மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த தமிழ்நாட்டையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

மனோபாலாவுக்கு கல்லீரல் பிரச்சினை இருந்ததாக கூறப்படுகிறது. மேலும் 15 நாட்களுக்கு முன்பு அவருக்கு இதயப் பிரச்சினை ஏற்பட்டதைத் தொடர்ந்து ஆபரேஷன் மூலம் டென்ட் பொருத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில்தான் அவர் மரணமடைந்துள்ளார்.





அடிப்படையில் இயக்குநராகும் ஆசையில்தான் சினிமாவில் சேர்ந்தார் மனோபாலா. உதவி இயக்குநராக பாரதிராஜாவிடம் சேர்ந்தார். 1979 ம் ஆண்டு புதிய வார்ப்புக்கள் படத்தின் பாரதிராஜாவிடம் அசிஸ்டெட்ன்ட் டைரக்டராக சேர்ந்து தனது சினிமா வாழ்க்கையை துவக்கினார் மனோபாலா.

ஆனால் அதன் பின்னர் இயக்குநராகவும், நடிகராகவும் பரிமளிக்க ஆரம்பித்தார்.  இவர் பெரும்பாலும் காமெடி ரோல்களிலும், சப்போர்டிங் ரோல்களிலும் நடித்துள்ளார். 20 படங்கள் இயக்கியுள்ள மனோபாலாவின் மறைவுக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

நடிகர் ரஜினிகாந்த் விடுத்துள்ள இரங்கல் செய்தியில் மனோபாலா எனது நண்பர். அவரது மறைவு அதிர்ச்சியும், வருத்தமும் அளிப்பதாக தெரிவித்துள்ளார்.

அரண்மனை, கலகலப்பு, தமிழ் படம் போன்ற பல படங்களில் இவரது காமெடி பலரையும் கவர்ந்தது. இந்த ஆண்டு ஜனவரி மாதம் திடீர் உடல் நலக்குறை ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மனோபாலாவிற்கு ஸ்டன்ட் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆன மனோபாலா, ஓய்வில் இருந்து வந்தார். இந்நிலையில் இன்று திடீரென அவர் உயிரிழந்துள்ளார். 

சமீபத்திய செய்திகள்

news

ஜெம் கிரானைட்ஸ் வீரமணி வழக்கில் லஞ்சம் வாங்கிய அதிகாரிகள் யார்? விசாரிக்க சிறப்பு குழு அமைப்பு!

news

"நிர்வாக அறிவு இருக்கிறதா?" – தவெக அரசை கடுமையாக விமர்சித்து மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை!

news

குற்றவாளிகள் ஒருவரையும் விடக்கூடாது: ஜெம் கிரானைட்ஸ் வீரமணி விவகாரத்தில் முதல்வர் அதிரடி உத்தரவு

news

ஜெம் கிரானைட் வீரமணி விவகாரம்: தவெக-திமுக இடையே முற்றும் மோதல்

news

ஆளுக்கு 8 ஓட்டு.. 9 மாத மழலை எடுத்துக் கொடுத்த சீட்டு.. கலகலப்பாக முடிந்த பள்ளித் தலைவர் தேர்தல்!

news

நடிகை அம்பிகா மீது சகோதரி ராதா பரபரப்பு புகார்: ரூ.46 கோடி மோசடி செய்ததாக போலீசில் புகார்

news

வங்கக்கடலில் தீவிரமடையும் காற்றழுத்த தாழ்வுப்பகுதி: இந்திய வானிலை மையம் எச்சரிக்கை!

news

ஏகாந்தம்.. அழகிய முழு நிலவொளியில் ஆனந்த ராகம் பாடி!

news

Short Story: காணாமல் போன கண்ணன்

அதிகம் பார்க்கும் செய்திகள்