சென்னை : மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ ஈவிகேஎஸ் இளங்கோவன் தற்போது கொரோனாவிலிருந்து மீண்டுள்ளார்.
ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ.,வாக சமீபத்தில் பொறுப்பேற்றுக் கொண்ட காங்கிரஸ் மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன், கடந்த சில நாட்களுக்கு முன் ஏற்பட்ட லேசான நெஞ்சு வலி காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனையில் லேசான கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பது கண்டறியப்பட்டது. இதனை அடுத்து ஈவிகேஎஸ் இளங்கோவன் அவசர சிகிச்சை பிரிவிற்கு மாற்றப்பட்டார்.
இருப்பினும் அவர் நலமுடன் இருப்பதாகவும், அவரது உடல்நிலை சீராக உள்ளதால் இரண்டு நாட்களில் குணமடைந்து, வீடு திரும்புவார் என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்திருந்தது. இந்நிலையில் தற்போது அவருக்கு லேசான மூச்சு திணறல் ஏற்பட்டது. ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு நுரையீரலில் கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பது தெரிய வந்தது. இதனால் அவருக்கு செயற்கை சுவாசம் வைக்கப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில் அவருக்கு ஏற்பட்டிருந்த கொரோனா பாதிப்பு அகன்றுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. விரைவில் அவர் டிஸ்சார்ஜ் ஆவார் என்றும் தகவல்கள் கூறுகின்றன. அவரது முகநூல் பக்கத்திலும் இளங்கோவன் மருத்துவமனையில் நலமுடன் இருப்பது போன்ற புகைப்படமும் வெளியாகியுள்ளது.
சிந்தனைச் சிதறல்.. உறவுகள் அறியாத நேரத்தில் தொலைந்திடும் வேளையில்!
சென்னை பல்லவன் இல்லத்தில் புதிய தலைமைச் செயலகம்? அரசு தீவிர பரிசீலனை
Short story: யசோதா
ராஜினாமா செய்த எம்எல்ஏ.,க்கள் தேர்தலில் மீண்டும் போட்டியிட தடை விதிக்க முடியாது
தமிழகப் பள்ளிகளுக்கு காலாண்டு தேர்வு விடுமுறை அறிவிப்பு: சிறப்பு வகுப்புகளுக்கு தடை
இடைத்தேர்தலில் தவெக.,வுக்கு ஜி.கே.வாசன் ஆதரவு...காலியாகிறது அதிமுக கூடாரம்
சபரிமலை ஐயப்பன் கோயிலில் 55.72 சவரன் தங்கக் கிரீடம் திருட்டு: அதிர்ச்சித் தகவல்கள் அம்பலம்!
தலையங்கம்: தேர்தல் ஆணையம் செல்ல வேண்டிய பாதை!
அறிந்த பழமொழிகளும், அறியாத அர்த்தங்களும்.. கல்லைக் கண்டால் நாயைக் காணோம்!
{{comments.comment}}