100%  இந்தி மொழி சுற்றறிக்கை.. திரும்ப பெற  சு. வெங்கடேசன் எம் பி கோரிக்கை

Mar 24, 2023,01:03 PM IST
சென்னை : தென்னக ரயில்வேயில் 100 சதவீதம் இந்தி மொழியை அமலாக்கம் செய்ய முடிவு செய்திருப்பதாக தென்னக ரயில்வே மேலாளர் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையை திரும்பப் பெற வேண்டும் என மதுரை எம்.பி., சு.வெங்கடேசன் அறிக்கை வெளியிட்டுள்ளார். 

மத்திய அரசுக்கு உட்பட்ட தென்னக ரயில்வே துறையில் 100 சதவீதம் இந்தி மொழியை அமலாக்க செய்ய உள்ளதாக தென்னக ரயில்வே மேலாளர் சமீபத்தில் சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டார். தமிழக எம்பி., கள் அனைவருக்கும் இது தொடர்பான சுற்றறிக்கை அனுப்பி வைக்கப்பட்டது. இந்நிலையில் எம்பி வெங்கடேசன் இது குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.



அவர் தனது அறிக்கையில், தென்னக ரயில்வேயின் 169 ஆவது  அலுவல் மொழி அமலாக்க குழு கூட்ட சுற்றறிக்கையைப் பார்த்தேன். அதில் "உடல் நலம் " பற்றிய ஒரு வழிகாட்டி நூல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. மகிழ்ச்சி. ஆனால் அக்கூட்டத்தில் 100  சதவீத இந்தி மொழி அமலாக்கம் தொடர்பான பயிற்சி தரப்பட்டதாக அந்த சுற்றறிக்கை கூறுகிறது. 

" உடல் நலம்" போன்றே "தேச நலம்" கருத்தில் கொண்டு அங்கு அலுவல் மொழி விதிகளை அங்கு விவரித்து இருக்கலாம். அலுவல் மொழி அமலாக்க குழு அந்த விதிகளை வாசிக்க வேண்டும். "100 சதவீத இந்தி" என்று அலுவல் மொழி விதிகளே கூறவில்லை. ஆகவே தான் அது மாநிலங்களை நான்காக பிரித்துள்ளது. எங்கு இந்தி கட்டாயம், எங்கு தெரிவு, எங்கு கட்டாயமில்லை, எங்கு அலுவல் மொழிகளே பொருந்தாது என்று அது கூறுவதை தென்னக ரயில்வே அலுவல் மொழி ஆய்வுக் குழு அறிந்திருக்க வேண்டும். இதில் நானகாவது வகையில் தமிழ்நாடு வருகிறது. அலுவல் மொழி விதிகளில் இருந்து 100 சதவீதம் விதி விலக்கு தரப்பட்டுள்ளது. விதிகளில் உள்ள இந்த 100 சதவீதத்தை விட்டு உங்கள் மனதில் உள்ள ஆசைகளையெல்லாம் 100 சதவீதம் நிறைவேற்ற முயற்சிக்க கூடாது. மொழி பன்மைத்துவமே தேசத்தின் "உடல் நலத்திற்கு" உகந்தது. 

தென்னக ரயில்வே தமிழில் செய்ய வேண்டியவை நிறைய இருக்கிறது. "தேஜஸ்" என்று பெயர் சூட்டுவதை விட அழகான தமிழில் ஆயிரம் பெயர்கள் உள்ளன. தமிழ் மக்களுக்கான சேவைக்கு நிறைய செய்ய வே���்டியுள்ளது. ஆகவே உடல் நலத்திற்கு எதை சாப்பிடலாம்? எதை சாப்பிடக் கூடாது? என்று வழிகாட்டல் அக் கூட்டத்தில் தரப்பட்டுள்ளது போல அலுவல் மொழி விதிகள் "எதை செய்ய சொல்லி இருக்கிறது? எதை செய்யக் கூடாது?" என்பதையும் தென்னக ரயில்வே பயில்வது நல்லது. 

தென்னக ரயில்வே பொது மேலாளர் உரிய முறையில் அலுவல் மொழி ஆய்வுக் குழுவை அறிவுறுத்த வேண்டும். அதன் சுற்றறிக்கையை திரும்பப் பெற வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

சமீபத்திய செய்திகள்

news

எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!

news

கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!

news

இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?

news

உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?

news

விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி

news

கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்

news

Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்

news

ருத்ர தாண்டவம் (சிறுகதை)

news

உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!

அதிகம் பார்க்கும் செய்திகள்