meenakshi thirukalyanam 2026 மதுரையில் மீனாட்சி திருக்கல்யாணம் 2026 கோலாகலம்

Apr 28, 2026,10:18 AM IST

மதுரை : பாண்டிய நாட்டு அரசியாக முடிசூடிக்கொண்ட மீனாட்சி அம்மனுக்கும், சொக்கநாதப் பெருமானுக்கும் இன்று காலை திருக்கல்யாண வைபவம் கோலாகலமாக நடைபெற்று முடிந்துள்ளது. ஏராளமான பக்தர்கள் இதில் கலந்து கொண்டு மீனாட்சி அம்மனையும், சொக்கநாதரையும் தரிசனம் செய்தனர்.


மதுரை சித்திரை திருவிழா 2026 :


இந்த ஆண்டு ஏப்ரல் 19-ம் தேதியன்று கொடியேற்றத்துடன் தொடங்கிய இந்த ஆண்டுக்கான மதுரை சித்திரைத் பெருவிழா. நாள்தோறும் மாலையில் பல்வேறு வாகனங்களில் மீனாட்சி அம்மனும், சொக்கநாதர் பிரியாவிடை அம்மனுடன் மாசி வீதிகளில் எழுந்தருளினர். மொத்தம் 12 நாட்கள் நடைபெறும் மதுரை சித்திரை திருவிழாவில், ஏப்ரல் 26ம் தேதி மீனாட்சி அம்மனுக்கு பட்டாபிஷேகமும், ஏப்ரல் 27ம் தேதி திக் விஜயமும் நடைபெற்றது. சித்திரை திருவிழாவின் பத்தாம் நாளான இன்று, முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான மீனாட்சி அம்மன் திருக்கல்யாண வைபவம் வெகு சிறப்பாக நடைபெற்றது.


மீனாட்சி திருக்கல்யாணம் 2026 :




ஏப்ரல் 28 ம் தேதியான இன்று காலை 08:35 மணி முதல் 08:59 மணிக்குள் மிதுன லக்னத்தில் மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம் கோலாகலமாக நடைபெற்றது. திருப்பரங்குன்றம் சுப்ரமணிய சுவாமி, தெய்வானை மற்றும் பவளக்கனிவாய் பெருமாள் முன்னிலையில், வேத மந்திரங்கள் முழங்க மீனாட்சி அம்மனின் கழுத்தில் மங்கல நாண் அணிவிக்கப்பட்டது. அப்போது கூடியிருந்த ஆயிரக்கணக்கான பெண்கள் தங்கள் மாங்கல்யச் சரடைப் புதிதாக மாற்றிக் கொண்டு, 'தீர்க்க சுமங்கலி' வரம் வேண்டி வழிபட்டனர்.


பக்தர்களுக்கு செய்யப்பட்ட விரிவான ஏற்பாடுகள்:


கூட்ட நெரிசலைத் தவிர்க்கவும், அனைவரும் தரிசனம் செய்யவும் கோவில் நிர்வாகம் சார்பில் சிறப்பான வசதிகள் செய்யப்பட்டிருந்தன. முன்பதிவு செய்தவர்கள் மட்டுமே கோவிலுக்குள் திருக்கல்யாணத்தை காண அனுமதிக்கப்பட்ட நிலையில், மற்ற பக்தர்களுக்காக மாசி வீதிகள் மற்றும் கோவில் வெளிப்பிரகாரங்களில் ராட்சத எல்.இ.டி திரைகள் வைக்கப்பட்டு நேரலை செய்யப்பட்டது. திருமண வைபவத்தை முன்னிட்டு மதுரை முழுவதும் சுமார் ஒரு லட்சம் பேருக்கு அறுசுவை உணவுடன் கூடிய பிரம்மாண்ட திருமண விருந்து வழங்கப்பட்டது. பல்லாயிரக்கணக்கான காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டு, போக்குவரத்து மாற்றியமைக்கப்பட்டது.


அடுத்து வரும் முக்கிய நிகழ்வுகள்:


திருக்கல்யாண வைபவத்தை தொடர்ந்து, இன்று மாலை சுவாமியும் அம்பாளும் கண்கவர் பூப்பல்லக்கில் எழுந்தருளி வீதி உலா வரவுள்ளனர். விழாவின் உச்சகட்டமாக, நாளை (ஏப்ரல் 29) காலை மாசி வீதிகளில் பிரம்மாண்ட திருத்தேரோட்டம் நடைபெற உள்ளது. அதன் தொடர்ச்சியாக ஏப்ரல் 30ம் தேதி அழகர் மலையிலிருந்து மதுரை நோக்கி வரும் கள்ளழகருக்கு எதிர்சேவையும், மே 01ம் தேதி சித்ரா பவுர்ணமி அன்று கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவமும் நடைபெற உள்ளது. மே 06ம் தேதி கள்ளழகர் அழகர்மலைக்கு திரும்பும் நிகழ்வுடன் மதுரை சித்திரை திருவிழா 2026 நிறைவு பெறும்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

துப்பாக்கி ஏந்திய ராணுவத்தினரின் பெரிய வேன் முன் செல்ல.. (அமர்நாத் யாத்திரை அனுபவங்கள்.. 3)

news

விஜய்யின் திடீர் திருச்செந்தூர் விசிட்...யாருப்பா அந்த ஜோசியர்?

news

meenakshi thirukalyanam 2026 மதுரையில் மீனாட்சி திருக்கல்யாணம் 2026 கோலாகலம்

news

தமிழகச் சட்டசபை தேர்தல் 2026: மே 4 வாக்கு எண்ணிக்கை - வழிமுறைகளை வெளியிட்ட தேர்தல் கமிஷன்

news

புதுச்சேரியில் இருந்து இனி 90 மி.லி., மது கொண்டு வந்தாலும் கைது

news

தமிழகத்தில் சுட்டெரிக்கும் கோடை வெயில்: சுகாதாரத்துறை சிறப்பு ஏற்பாடு

news

புதுச்சேரி பாடத்திட்டத்தில் பிரெஞ்சு மொழி நீக்கம்: திமுக சார்பில் போராட்டம் அறிவிப்பு

news

இதயம் என்னும் கவிதை...!

news

குடவோலை முறை.. உலகத்துக்கே வழிகாட்டிய உத்திரமேரூர் தேர்தல் நடைமுறை!

அதிகம் பார்க்கும் செய்திகள்