எங்க அப்பா தான் சிஎம்...இப்பவே துண்டு போடும் சித்தராமைய்யா மகன்

May 13, 2023,10:18 AM IST
மைசூரு : கர்நாடக சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் நிச்சயம் தனிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெறும். எங்க அப்பா தான் முதல்வர் என சித்தராமைய்யாவின் மகன் யதிந்திர சித்தராமைய்யா தெரிவித்துள்ளார்.

கர்நாடகா சட்டசபை தேர்தலுக்கான ஓட்டு எண்ணிக்கை இன்று காலை துவங்கி நடந்து வருகிறது. இதில் துவக்கத்தில் பாஜக முன்னிலையில் இருந்த நிலையில், சிறிது நேரத்திலேயே காங்கிரஸ் முன்னிலை பெற துவங்கியது. பெரும்பான்மைக்கு தேவையான இடங்களை விட அதிக இடங்களில் காங்கிரஸ் முன்னிலையில் இருந்து வருவதால் காங்கிரஸ் கட்சி பெரும்பான்மை வெற்றி கிடைக்கும் என நம்பிக்கையுடன் கூறி வருகிறது.



இந்நிலையில் ஏஎன்ஐ.,க்கு பேட்டி அளித்த கர்நாடக முன்னாள் முதல்வர் சித்தராமைய்யாவின் மகனும், காங்கிரஸ் தலைவடருமான யதிந்திர சித்தராமைய்யா, காங்கிரஸ் தனிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று, ஆட்சியை பிடிக்கும். எங்க அப்பா தான் முதல்வர் ஆவார். பாஜக.,வை ஆட்சியில் இருந்து வெளியேற்ற நாங்கள் என்ன வேண்டுமானாலும் செய்வோம். எங்க அப்பா முதல்வர் ஆக வேண்டும் என்பது தான் என்னுடைய விருப்பம். 

போன முறை அவரது ஆட்சி சிறப்பாக இருந்தது. ஒருவேளை இந்த முறை அவர் முதல்வர் ஆனால், மிக சிறந்த அரசாக அது அமையும். பாஜக ஆட்சியின் போது நடந்த ஊழல், தவறான ஆட்சி அனைத்தையும் அவர் சரி செய்வார் என்றார்.

சமீபத்திய செய்திகள்

news

சர்வதேச மகள்கள் தினம்.. மகாலட்சுமியின் ரூபமே பெண் குழந்தைகள்!

news

மகள் இல்லாக் குறையைப் போக்க வந்த மருமகள்!

news

தென்தமிழ் தலையங்கம்: சுற்றுலா.. மனிதத்தையும் தேசத்தையும் இணைக்கும் பாலம்!

news

World Daughters Day: இரவில் நீலாம்பரியாய் தாயாகி தாலாட்டுபவள் அவள்!!

news

மகாளயபட்சம்.. முன்னோர்களுக்குத் தர்ப்பணம், அன்னதானம் செய்வது சிறப்பு!

news

முதல்வர் ரிவ்யூ கூட்டம் நடத்தவில்லை; Reels தான் எடுத்துள்ளார்! - மு.க.ஸ்டாலின் கடும் தாக்கு

news

ஜெம் வீரமணி போக்சோ வழக்கு: சாந்தி மற்றும் கணவருக்கு ஜாமீன் வழங்க காவல்துறை எதிர்ப்பு

news

மின்சாரத் துறை அமைச்சர் நிர்மல் குமார் கலந்து கொண்ட விழாவில் மின்தடை

news

தென்தமிழ்த் தலையங்கம்: உலகம் இதற்கு முன்பு எதைப் பார்த்தெல்லாம் பயந்திருக்கிறது?

அதிகம் பார்க்கும் செய்திகள்