கடவுளே காப்பாத்து.. காங்கிரசிற்காக காலையிலேயே கோவிலுக்குப் போன பிரியங்கா!

May 13, 2023,11:12 AM IST
சிம்லா : கர்நாடக சட்டசபை தேர்தலில் காங்கிரசின் வெற்றிக்காக சிம்லாவில் உள்ள அனுமன் கோவிலில் காங்கிரஸ் தலைவர் பிரியங்கா காந்தி காலை முதல் பிரார்த்தனை செய்து வருகிறார்.

கர்நாடக சட்டசபை தேர்தல் ஓட்டு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடந்து வருகிறது. காங்கிரஸ் பெரும்பான்மைக்கும் அதிகமான இடங்களில் முன்னிலையில் உள்ளதால் தற்போதே வெற்றியை உறுதி செய்து விட்டார்கள் அக்கட்சியினர். இருந்தாலும் யாருக்கு எத்தனை இடங்கள் கிடைக்க போகிறது என ஆர்வத்துடன் காத்திருக்கிறார்கள்.



இந்நிலையில் கர்நாடகா மற்றும் நாட்டு மக்களின் அமைதி மற்றும் வளத்திற்காக வேண்டிக் கொள்வதற்காக சிம்பாவின் ஜக்கு பகுதியில் உள்ள அனுமன் கோவிலுக்கு காலையிலேயே சென்றுள்ளார். பிரியங்கா தியானம் செய்து, வழிபடும் போட்டோ மற்றும் வீடியோக்கள் சோஷியல் மீடியாவில் வேகமாக பரவி வருகிறது.

கர்நாடக சட்டசபை தேர்தலில் ஓட்டு எண்ணிக்கை துவங்கிய ஒரு மணி நேரத்திலேயே காங்கிரஸ் பெரும்பான்மை அளவை விட இடங்களில் முன்னிலையில் இருக்க துவங்கியது. பாஜக, மதசார்பற்ற ஜனதா தளத்தை விட காங்கிரஸ் மிக அதிகமான சீட்கள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளது.  இதனால் காங்கிரசின் வெற்றி ஏறக்குறைய உறுதியாகி விட்டது என்றே சொல்லலாம்.

224 இடங்களைக் கொண்ட கர்நாடக சட்டசபையில் 130 க்கும் அதிகமான இடங்களை நிச்சயம் கைப்பற்றுவோம் என காங்கிரஸ் தலைவர் முழு நம்பிக்கையுடன் தெரிவித்து வருகின்றனர். ஒருவேளை காங்கிரஸ் வெற்றி பெறும் பட்சத்தில், அடுத்ததாக மிகப் பெரிய சவால் ஒன்று காத்துக் கொண்டிருக்கிறது. சித்தராமைய்யா, டி.கே.சிவக்குமார் இருவரில் யாரை அக்கட்சி முதல்வர் வேட்பாளராக அறிவிக்க போகிறது என்பது தான். 

தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பில் 10 க்கு இரண்டு கருத்து கணிப்புக்கள் கர்நாடகாவில் காங்கிரஸ் வெற்றி பெறும் என கூறி இருந்தன. அதே சமயம் 7 கருத்து கணிப்புக்கள் தொங்கு சட்டசபையே அமையும் என கூறி இருந்தன. கருத்து கணிப்புக்கள் சரியாக இருக்க போகின்றனவா அல்லது பொய்யாக போகின்றனவா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

சமீபத்திய செய்திகள்

news

முதல்வர் ரிவ்யூ கூட்டம் நடத்தவில்லை; Reels தான் எடுத்துள்ளார்! - மு.க.ஸ்டாலின் கடும் தாக்கு

news

ஜெம் வீரமணி போக்சோ வழக்கு: சாந்தி மற்றும் கணவருக்கு ஜாமீன் வழங்க காவல்துறை எதிர்ப்பு

news

மின்சாரத் துறை அமைச்சர் நிர்மல் குமார் கலந்து கொண்ட விழாவில் மின்தடை

news

தென்தமிழ்த் தலையங்கம்: உலகம் இதற்கு முன்பு எதைப் பார்த்தெல்லாம் பயந்திருக்கிறது?

news

"2027 உலகக் கோப்பையே எனது கடைசி ஆட்டம்" – விராட் கோலி நெகிழ்ச்சி

news

இத்தாலியில் பள்ளி மாணவிகள் புர்கா அணிய தடை: அமைச்சரவை ஒப்புதல்

news

சினிமா படப்பிடிப்புக்கான அனுமதியை இனி ஆன்லைனில் பெறலாம்: தமிழக அரசு அறிவிப்பு

news

அப்பா மாதிரி நாமளும் ஆகணும்!

news

இரயில் சினேகம்.. ஒரு நிமிடக் கதை (21)

அதிகம் பார்க்கும் செய்திகள்