மணிப்பூரில் ராகுல் காந்தியின் காரை தடுத்து நிறுத்திய போலீஸ்

Jun 29, 2023,04:37 PM IST
இம்பால் : மணிப்பூர் சென்ற காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் காரை போலீசார் பாதி வழியிலேயே தடுத்து நிறுத்தி உள்ளனர். 

மணிப்பூரில் சமீபத்தில் நடந்த கலவரத்தில் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறுவதற்காக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, இரண்டு நாள் பயணமாக இன்று காலை மணிப்பூர் புறப்பட்டுச் சென்றார். மணிப்பூரின் சுரசாந்பூர் செல்வதற்காக ராகுல் திட்டமிட்டிருந்தார்.



ஆனால் சுரசாந்பூருக்க செல்லும் வழியில், பிஷ்னுபூர் செக் போஸ்ட் அருகிலேயே ராகுலின் காரை போலீசார் தடுத்து நிறுத்தினர். இது பற்றிய காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் கூறுகையில், ராகுலை வரவேற்க சாலையின் இரு புறங்களிலும் மக்கள் காத்திருந்தனர். ஆனால் போலீசார் எங்களை தொடர்ந்து செல்ல அனுமதிக்கவில்லை. அவர்கள் எதற்காக எங்களை தடுத்தார்கள் என்றே தெரியவில்லை என தெரிவித்துள்ளார்.



வன்முறையில் அதிகமாக பாதிக்கப்பட்ட இரண்டு இடங்களுக்கும், இம்பால் மற்றும் சுரசந்பூர் பகுதியில் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களையும் சந்திக்க ராகுல் திட்டமிட்டிருந்தார். அங்குள்ள உள்ளாட்சி நிர்வாகிகளையும் சந்தித்து பேச அவர் திட்டமிட்டிருந்தார்.

சமீபத்திய செய்திகள்

news

ஷ்ரேயாஸ் ஐயருக்கு என்ன தான் ஆச்சு?...குழப்பத்தில் கிரிக்கெட் ரசிகர்கள்

news

விவசாயிகள் வயிற்றில் அடிக்கும் அரசு...திமுக மீது விஜய் தாக்கு

news

வாக்குரிமைப் பறிப்பைத் தடுப்போம்... வாக்குத் திருட்டை முறியடிப்போம்... முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

news

திருவள்ளூருக்கு ஆரஞ்சு...சென்னை உள்ளிட்ட 8 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்

news

2026 தேர்தலிலும் திமுக.,வுக்கு தான் வெற்றி...முதல்வர் ஸ்டாலின் நம்பிக்கை

news

ஒரே நாளில் 30,000 ஊழியர்களை வேலையை விட்டு தூக்கிய அமேசான்

news

தங்கம் நேற்றைய விலையை தொடர்ந்து இன்றும் குறைவு... அதுவும் சவரனுக்கு ரூ. 1,200 குறைவு!

news

தேர்தலுக்கு தயாராகும் தேர்தல் கமிஷன்...இன்று முதல் பயிற்சி ஆரம்பம்

news

மக்களே உஷார்...இன்று இரவு கரையை கடக்கிறது மோன்தா புயல்

அதிகம் பார்க்கும் செய்திகள்