ஸாரி.. நான் அப்படி பேசியிருக்கக் கூடாது.. மன்னிப்பு கேட்டார் சிங்கப்பூர் சபாநாயகர்!

Jul 11, 2023,02:13 PM IST
சிங்கப்பூர்: சிங்கப்பூர் நாடாளுமன்ற சபாநாயகர், டான் சுவான் ஜின், எதிர்க்கட்சி எம்.பியைப் பார்த்து தகாத வார்த்தையை பிரயோகித்ததற்காக மன்னிப்பு கேட்டுள்ளார்.

சிங்கப்பூர் நாடாளுமன்றத்தில் கடந்த ஏப்ரல் மாதம் இடம் பெற்ற விவாதம் ஒன்றின்போது இந்த சம்பவம் நடந்தது.  அப்போது நடந்த சம்பவத்திற்காக இப்போது மன்னிப்பு கேட்டுள்ளார் சபாநாயகர் டான் சுவான் ஜின்.



கடந்த ஏப்ரல் மாதம் நாடாளுமன்றத்தில் ஒரு விவாதம் நடைபெற்றது. ஆளும் கட்சியைச் சேர்ந்த உறுப்பினர் விக்ரம் நாயர் பேசி முடித்த பின்னர் எதிர்க்கட்சியைச் சேர்ந்த ஜமுஸ் லிம் என்பவரை சபாநாயகர் பேச அழைத்தார். அப்போது "f**** populist" என்ற வார்த்தையை அவர் பயன்படுத்தினார்.

இது சலசலப்பை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் தொடர்பாகத்தான் தற்போது மன்னிப்பு கேட்டுள்ளார் டான் சுவான் ஜின். ஜமுஸ் லிம் எதிர்க்கட்சியைச் சேர்ந்த எம்.பி. ஆவார். இந்த சம்பவம் தொடர்பாக தனது பேஸ்புக்கில் டான் சுவான் ஜின் கூறுகையில், ஏப்ரல் மாதம் நாடாளுமன்றத்தில் ஒரு கூட்டம் நடைபெற்றது. அப்போது நான் பேசியதை சமீபத்தில் கேட்க நேரிட்டது. அதைப் பற்றி வருத்தமடைந்தேன். அந்த பேச்சுக்காக மன்னிப்பு கோருகிறேன். உறுப்பினர் ஜமுஸ் லிம்மிடமும் நான் இதுகுறித்துப் பேச வருத்தம் தெரிவித்துக் கொண்டேன் என்று கூறியுள்ளார் டான் சுவான் ஜின்.

சமீபத்திய செய்திகள்

news

தவெக கூட்டணியில் பங்கேற்க மாட்டோம்: சிபிஐ(எம்) தலைவர்கள் கே.பாலகிருஷ்ணன், பெ.சண்முகம் அறிவிப்பு

news

முதல்வர் விஜய் பேச்சுக்கு எதிர்ப்பு.. தர்ணா செய்த திமுக எம்எல்ஏக்கள் அவை காவலர்களால் வெளியேற்றம்

news

சட்டமன்ற நேரம் வீணடிப்பு...தவெக அரசு மீது எடப்பாடி பழனிசாமி சரமாரி குற்றச்சாட்டு!

news

லண்டனில் அஜித்தின் கார் பந்தயத்தை நேரில் பார்க்கிறாரா முதல்வர் விஜய்? இணையத்தில் தீயாய் பரவும் தகவல்

news

விடுதலை வேண்டா பசி!

news

சிந்தனைச் சிதறல்.. உழைப்புக்கு நம்மை உரமாக்கினால்.. அது நம்மை உயர் தரமாக்கும்!

news

காஞ்சிபுரம் பட்டு வாங்கித் தாரேன் கட்டு!

news

காதல் மொழி காற்றின் வழி!

news

எல்லாம் கூறினேனே பெண்ணே!

அதிகம் பார்க்கும் செய்திகள்