தமிழ்நாடு வேளாண் பட்ஜெட் 2023... மதுரை மல்லிக்கு ரூ. 7 கோடியில் தனி இயக்கம்!

Mar 21, 2023,04:31 PM IST
 சென்னை : தமிழக சட்டசபையில் தமிழக நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் நேற்று 2023-2024 ம் நிதியாண்டிற்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இதைத் தொடர்ந்து தமிழக வேளாண் துறைக்கான தனி பட்ஜெட்டை வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார்.

தமிழக வேளாண் பட்ஜெட்டில் வெளியாகியுள்ள முக்கிய அறிவிப்புக்கள் :

தனியார் தொழில் முனைவோருக்கு சலுகைகள், ஊக்கத்தொகை மற்றும் மானியங்கள் வழங்கும் உணவு பதப்படுத்துதல் கொள்கை மறுசீரமைக்கப்படும்.

காவிரி  டெல்டா பகுதி திருச்சி-நாகை இடையே வேளாண் தொழில் பெருந்தடம் அமைக்க ரூ.1000 கோடி ஒதுக்கீடு

மதுரை செங்கரும்பு, சிவகங்கை கவுனி அரிசி, விளாத்திகுளம் மிளகாய், பேராவூரணி தென்னை உள்ளிட்ட 10 பொருட்களுக்கு புவிசார் குறியீடு பெற ரூ.30 லட்சம் நிதி ஒதுக்கீடு.

சாகுபடி பணிகளை காலத்தில் மேற்கொள்ள தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்கள் மூலம் ரூ.14,000 கோடி பயிர் கடன் வழங்கப்படும்.

விழுப்புரம், தஞ்சாவூர், திருவண்ணாமலை, கடலூர் மாவட்டங்களில் பரிவர்த்தனைக் கூடங்கள், உலர் களங்கள், சேமிப்புக் கிடங்குகள் ரூ.22 கோடியில் ஏற்படுத்தப்படும்.

960 ஹெக்டேரில் நுண்ணீர் பாசன கட்டமைப்பு உருவாக்கிடரூ.50 கோடி ஒதுக்கீடு.

இனி ஆண்டு முழுவதும் தக்காளி, வெங்காயத்திற்கு தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்க புதிய திட்டம்

மதுரை மல்லிக்கு ரூ.7 கோடியில் தனி இயக்கம்

வீடு தேடி வரும் அப்டேட் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்காக வாட்ஸ் ஆப் குழு

மக்களிடையே சிறுதானிய உணவுகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த சிறுதானிய திருவிழாக்கள் நடத்தப்படும்.

விவசாயிகளுக்கு 23 லட்சம் மின் இணைப்பு இலவசம்

விவசாயிகளுக்கு வெளிநாட்டில் பயிற்சி

விவசாயிகளுக்கு 10 லட்சம் பனை விதைகள் வழங்கப்படும்

அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும் சிறுதானியங்களின் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் விற்பனை.

வன விலங்குகளிடம் இருந்து பயிர்களை காக்க வனவிலங்கு பாதுகாப்புக் குழு

மண்வளம் குறித்து விவசாயிகள் அறிய அனைத்து விவரமும் கணினி மயமாக்கப்படும்.

சிறந்த விவசாயிகளுக்கு ரூ.5 லட்சத்துடன் நம்மாழ்வார் விருது.

நெல்லுக்கான கொள்முதல் விலை குவிண்டாலுக்கு பொது ரகத்திற்கு ரூ.75, சன்ன ரகத்திற்கு ரூ.100 கூடுதலாக வழங்கப்படும்கத்தை உள்ளிடவும்

சமீபத்திய செய்திகள்

news

Time to Lead: இனி அரசியல் மாறும்.. தலைவர்கள் மாறுவார்கள்.. விஜய் போட்ட புதிய பாதை!

news

வெற்றியை நிர்ணயிக்க போகும் 119 தொகுதிகள்...நொடிக்கு நொடி மாறும் முன்னிலை

news

TVK wins: தவெகவின் இந்த பிரம்மாண்ட வெற்றிக்கு என்ன காரணம்?

news

ஜஸ்ட் மிஸ் ஆனாரா எடப்பாடி பழனிச்சாமி?.. விஜய் ஆதரவு சுயேச்சை வாங்கிய ஓட்டுக்களைப் பாருங்க!

news

அதிர வைத்த எடப்பாடி பழனிச்சாமி வியூகம்.. திமுகவுக்கு 2வது இடம் கூட கிடைக்கலையே!

news

திராவிட மாடலுக்கு இது தோல்வியா?.. தமிழக சட்டசபை தேர்தல் முடிவுகள்...சொல்வது என்ன?

news

சட்டசபையில்.. தவெக விற்கு பெரும்பான்மை கிடைக்கா விட்டால் என்ன செய்வார் விஜய்?

news

மேற்கு வங்கத்தில் ஆட்சியை இழக்கும் மம்தா பானர்ஜி... அதிரடி காட்டிய பாஜக முன்னிலை!

news

அடிச்ச பத்து பேருமே டான்தான்.. தமிழ்நாட்டு அரசியலைப் புரட்டிப் போட்ட விஜய்!

அதிகம் பார்க்கும் செய்திகள்