விஜய்யின் தளபதி 67 டைட்டில்.. தாறுமாறாக ஹிட்டாகும் டைட்டில் அறிமுக வீடியோ!

Feb 04, 2023,02:53 PM IST
சென்னை : வாரிசு படத்திற்கு பிறகு விஜய்யின் அடுத்த படமான தளபதி 67 படத்தை இயக்குகிறார் டைரக்டர் லோகேஷ் கனகராஜ். இந்தப் படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் தயாரிக்க உள்ளதாக சமீபத்தில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டது. 



விஜய்- லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவான மாஸ்டர் பிளாக்பஸ்டர் வெற்றி பெற்றதால், தளபதி 67 படம் பற்றிய எதிர்பார்ப்பு எகிறி வருகிறது. படத்தில் வேறு யாரெல்லாம் இருக்கிறார்கள், என்ன கதை என அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கையில் யாரும் எதிர்பாராத விதமாக படத்தின் டைட்டில் பற்றிய ப்ரோமோ வீடியோ ஒன்றை செவன்ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் வெளியிட்டுள்ளது. 

இதில் சாக்லேட்கள் குவித்து வைக்கப்பட்டுள்ள டேபிள், அதன் அருகில் கொக்கோ விதைகளை சரிபார்க்கும் விஜய், ஒரு பக்கம் சாக்லேட் தயாரிப்பதாகவும், மற்றொரு பக்கம் பெரிய வாள் ஒன்றை பட்டறையில் இரும்பை உருக்கி விஜய்யே தயாரிப்பது போதும் காட்டப்படுகிறது. மற்றொரு பக்கம் இரவு நேர மலைப்பாதையில் அணிவகுத்து வரும் கார்கள் என த்ரில்லிங், அதிரடி நிறைந்ததாக இந்த இன்ட்ரோ வீடியோ அமைக்கப்பட்டுள்ளது. 

இந்த வீடியோவின் இறுதியில் உருக்கிய சாக்லேட் கலவைக்கும் நீளமாக வாளை, தோய்த்து எடுத்து வாளில் உள்ள சாக்லேட்டை ருசி பார்க்கும் விஜய், Bloody sweet என வசனம் பேசுகிறார். தளபதி 67 படத்திற்கு "லியோ" என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. காபி, சாக்லேட் தயாரிப்பு கம்பெனியின் பின்னணியில் படத்தின் கதை அமைக்கப்பட்டுள்ளது என்பதை படத்தின் டைட்டில் மற்றும் டைட்டில் இன்ட்ரோ வீடியோ உறுதி செய்துள்ளது. 

த்ரில்லிங், ஆக்ஷன் நிறைந்ததாக இந்த படம் அமைந்துள்ளது என்பது உறுதியாகி உள்ளது. வீடியோவின் இறுதியில் நாணயம் ஒன்று சுழன்று வர அதில் லியோ என எழுதப்பட்டு, சிங்க முகமும் காட்டப்படுகிறது. லியோ என்ற சொல்லுக்கு காபி என்று மட்டுமல்ல சிங்கம் என்று ஒரு அர்த்தமும் உள்ளது. எதை அர்த்தப்படுத்தி படத்திற்கு இந்த டைட்டில் வைத்துள்ளார்கள். எந்த அர்த்தத்தை மையப்படுத்தி கதை இருக்க போகிறது என்பது போக போகத் தான் தெரியும்.

வழக்கமாக விஜய் படங்களில் பாதி ஷூட்டிங் முடிக்கப்பட்ட பிறகு, விஜய்யின் பிறந்தநாளில் தான் படத்தின் டைட்டில், ஃபர்ஸ்ட்லுக் ஆகியவற்றை வெளியிடுவார்கள். மாஸ்டர், பீஸ்ட், வாரிசு படங்களுக்கு இந்த முறை தான் கடைபிடிக்கப்பட்டது. ஆனால் லியோ படத்திற்கு படத்தின் மற்ற நடிகர், நடிகைகள் பற்றிய அப்டேட் முழுவதுமாக வெளியாவதற்கு முன்பே டைட்டிலை, அதுவும் வீடியோவாகவே வெளியிட்டு உள்ளார்கள். இதனால் இந்த படம் பற்றிய எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் பல மடங்கு அதிகரித்துள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

ஜனநாயகக் கடமையாற்ற வேண்டிய நாள்.. உங்கள் வாக்கை தவறாமல் பதிவு செய்யுங்கள்!

news

யாசகத்தோழி!

news

வெளியில் புன்னகைத்து.. உள்ளுக்குள் கனன்றுகொண்டிருக்கும்.. நெருப்புக் குழம்பிற்குச் சொந்தக்காரி!

news

பஹல்காம் பரிதாபம்.. சிந்தூரைப் பார்த்து சினம் கொண்டவனை சிந்தூர் சாய்த்தது!

news

சிந்தனைச் சிதறல்.. ஒருவருக்கு தவறெனத் தோன்றுவது மற்றவருக்கு சரியெனத் தோன்றுகிறது!

news

Fermented rice: பழைய சோறு.. வெயில் வந்தாலே.. இதுவும் நம்மை நாடி வந்து விடும்!

news

Housewives எல்லாம் சும்மா இல்லைங்க.. அவர்கள் பாராட்டப்படாத உழைப்பாளிகள்!

news

Deepa Ravi Poem: உன் அருகில் நான் அமர்ந்தால்.. என் மனமோ!

news

World Earth Day: உயிர்க்கோளம் பூமி .. இறைவன் நமக்கு கொடுத்த வரம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்