Dettol போட்டு உங்க முகத்தை  கழுவுங்கள்.. காங்கிரசை வெளுத்த நிர்மலா சீதாராமன்

Feb 11, 2023,10:46 AM IST
புதுடில்லி : ஊழல் பற்றி பேசுவதற்கு முன் காங்கிரஸ் தலைவர்கள் தங்களின் முகத்தை Dettol போட்டு கழுவிக் கொள்ள வேண்டும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் லோக்சபாவில் பேசி உள்ளது பரபரப்பை கிளப்பி உள்ளது.



நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. பிப்ரவரி 01 ம் தேதி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த பட்ஜெட் மீதான விவாதம் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த விவாதத்தின் போது எதிர்கட்சி உறுப்பினர்களின் கேள்விகளுக்கு நேற்று பிரதமர் நரேந்திர மோடி பதிலளித்தார். இதைத் தொடர்ந்து இன்று நிர்மலா சீதாராமன், எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதிலளித்து பேசினார்.

காங்கிரஸ் உறுப்பினர்கள் பலர் மத்தியில் ஆளும் மோடி தலைமையிலான மத்திய அரசு மீது ஊழல் குற்றச்சாட்டுக்கள் பலவற்றை முன் வைத்தனர். இதற்கு பதிலளித்து பேசிய நிர்மலா சீதாராமன், ஊழல் பற்றிய பேசுவதற்கு முன் காங்கிரஸ் தலைவர்கள் தங்களின் முகங்களை டெட்டால் போட்டு கழுவிக் கொள்ள வேண்டும். ஊழலை பற்றி யார் பேசுவது? இறக்குமதி பொரட்களின் மீதான விலை உயர்ந்த போது பிரதம் மோடி தலைமையிலான மத்திய அரசு, பெட்ரோல் மீதான கூடுதல் வரியை, 2022 ஜூன் மற்றும் 2021 நவம்பர் என இரண்டு முறை குறைத்தது. 

இது பொது மக்களின் விலை உயர்வு சுமையை குறைத்தது. எரிபொருட்கள் மீதான வரியை நாங்கள் குறைத்த போது காங்கிரஸ் ஆளும் மாநிலங்கள் எதிர்த்தன. காங்கிரஸ் ஆட்சி செய்யும் இமாச்சல அரசிடம் போய் கேளுங்கள், மத்திய அரசு இறக்குமதியை குறைத்த பிறகும், சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு டீசல் மீதான வாட் வரியை ரூ.3 உயர்த்தியது என கேளுங்கள். ஊழல் என்பது காங்கிரசின் டிஎன்ஏ.,விலேயே உள்ளது என காங்கிரஸ் கட்சியை கடுமையாக விமர்சித்தார்.

காங்கிரசின் டிஎம்ஏ.,விலேயே ஊழல் உள்ளது என நிர்மலா சீதாராமன் பேசியதற்கு எதிர்க்கட்சி எம்பி.,க்கள் எதிர்ப்பு தெரிவித்து, கூச்சலிட்டனர். ராஜஸ்தான் முதல்வர் அசோக் ஜெலட் கடந்த ஆண்டு பட்ஜெட் உரையை இந்த ஆண்டு வாசித்ததையும் விமர்சித்து நிர்மலா சீதாராமன் பேசினர். நிர்மலா சீதாராமன் பேச்சிற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சி எம்பி.,க்கள் வெளிநடப்பு செய்தனர். இதனால் லோக்சபாவில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது.

சமீபத்திய செய்திகள்

news

எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!

news

கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!

news

இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?

news

உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?

news

விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி

news

கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்

news

Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்

news

ருத்ர தாண்டவம் (சிறுகதை)

news

உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!

அதிகம் பார்க்கும் செய்திகள்