என்னங்க சொல்றீங்க.. தளபதி 68 ல் விஜய்க்கு வில்லன் இவரா?!

May 23, 2023,09:25 AM IST
சென்னை : தளபதி 68 படம் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை ஏஜிஎஸ் என்டர்டைன்மென்ட் நிறுவனம் வெளியிட்டது முதல் சோஷியல் மீடியாவில் விஜய் ரசிகர்கள் இதனை கொண்டாடி வருகின்றனர். இதை கொண்டாடி முடிப்பதற்குள் தளபதி 68 படம் பற்றிய அடுத்த அப்டேட் வந்துள்ளது.

விஜய்யின் 68 வது படமான தளபதி 68 படத்தை வெங்கட் பிரபு இயக்க உள்ளார். யுவன் சங்கர் ராஜா இந்த படத்திற்கு இசையமைக்க உள்ளார். ஏஜிஎஸ் என்டர்டைன்மென்ட் நிறுவனத்தின் 25 வது படமாக தளபதி 68 உருவாக உள்ளது. ஆகஸ்ட் மாதத்தில் இந்த படத்தின் ஷூட்டிங் துவங்கப்பட்டு, 2024 ம் ஆண்டு பண்டிகை நாளில் இந்த படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர்.



இந்நிலையில் தளபதி 68 படத்தில் விஜய்க்கு வில்லனாக நடிக்க வைக்க எஸ்.ஜே.சூர்யாவை, வெங்கட் பிரபு ஏற்கனவே முடிவு செய்து விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. எஸ்.ஜி.சூர்யா தவிர இன்னும் சில பெரிய நடிகர்களும் வில்லன் ரோலில் இந்த படத்தில் நடிக்க இருக்கிறார்களாம். இதற்கான தேர்வு தற்போது நடைபெற்று வருகிறதாம்.

ஏற்கனவே விஜய் நடித்த குஷி படத்தை இயக்கிய எஸ்.ஜே.சூர்யா, அவருடன் நண்பன், மெர்சல், வாரிசு ஆகிய படங்களில் நடிக்கவும் செய்துள்ளார். இன்றைய தேதியில் கோலிவுட்டின் டாப் வில்லன்களில் எஸ்.ஜே.சூர்யா தான் முதலிடத்தில் உள்ளார். ஏற்கனவே வெங்கட் பிரபு இயக்கிய பிளாக்பஸ்டர் படமான  மாநாடு படத்தில் எஸ்.ஜே.சூர்யா, சிம்புவிற்கு வில்லனாக நடித்திருந்தார்.

தற்போது மார்க் ஆன்டனி, கேம் சேஞ்சர், ஜிகர்தண்டா 2 உள்ளிட்ட பல படங்களில் எஸ்.ஜே.சூர்யா வில்லனாக நடித்து வருகிறார். இந்த படங்கள் இந்த ஆண்டில் அடுத்தடுத்து ரிலீசாக உள்ளன. இதற்கிடையில் தளபதி 68 படத்திலும் வில்லன் ரோலுக்கு எஸ்.ஜே.சூர்யாவின் பெயர் பேசப்பட்டு வருவதால் ரசிகர்கள் செம குஷியாகி உள்ளனர்.

விஜய் ரசிகர்களுக்கும் பிடித்த வில்லன் எஸ்.ஜே. சூர்யாதான். அவரை விஜய்யின் ராசியான இயக்குநராகவும், நல்ல நண்பராகவும், விஜய் ரசிகர்கள் பார்க்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகள்

news

ஜெம் கிரானைட்ஸ் வீரமணி வழக்கில் லஞ்சம் வாங்கிய அதிகாரிகள் யார்? விசாரிக்க சிறப்பு குழு அமைப்பு!

news

"நிர்வாக அறிவு இருக்கிறதா?" – தவெக அரசை கடுமையாக விமர்சித்து மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை!

news

குற்றவாளிகள் ஒருவரையும் விடக்கூடாது: ஜெம் கிரானைட்ஸ் வீரமணி விவகாரத்தில் முதல்வர் அதிரடி உத்தரவு

news

ஜெம் கிரானைட் வீரமணி விவகாரம்: தவெக-திமுக இடையே முற்றும் மோதல்

news

ஆளுக்கு 8 ஓட்டு.. 9 மாத மழலை எடுத்துக் கொடுத்த சீட்டு.. கலகலப்பாக முடிந்த பள்ளித் தலைவர் தேர்தல்!

news

நடிகை அம்பிகா மீது சகோதரி ராதா பரபரப்பு புகார்: ரூ.46 கோடி மோசடி செய்ததாக போலீசில் புகார்

news

வங்கக்கடலில் தீவிரமடையும் காற்றழுத்த தாழ்வுப்பகுதி: இந்திய வானிலை மையம் எச்சரிக்கை!

news

ஏகாந்தம்.. அழகிய முழு நிலவொளியில் ஆனந்த ராகம் பாடி!

news

Short Story: காணாமல் போன கண்ணன்

அதிகம் பார்க்கும் செய்திகள்