என்னது தளபதி 68 ல் விஜய் - அஜித் சேர்ந்து நடிக்கிறாங்களா?.. சூப்பர் அப்டேட்!

May 23, 2023,06:08 PM IST
சென்னை : விஜய்யின் அடுத்த படமான தளபதி 68 படத்தின் அறிவிப்பு சமீபத்தில் வெளியிடப்பட்டது. ஏஜிஎஸ் என்டர்டைன்மென்ட் நிறுவனம் தங்களின் 25 வது படமாக தளபதி 68 படத்தை தயாரிக்க உள்ளது. 

இது ஏஜிஎஸ்- விஜய் கூட்டணி இணையும் இரண்டாவது படமாகும். இதற்கு முன் விஜய் நடித்த பிகில் படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தான் தயாரித்திருந்தது. தளபதி 68 படத்தை வெங்கட் பிரபு இயக்குகிறார். யுவன்சங்கர் ராஜா இந்த படத்திற்கு இசையமைக்க உள்ளார். 2022 ம் ஆண்டு ரிலீசான புதிய கீதை படத்திற்கு பிறகு விஜய் - யுவன்சங்கர் ராஜாவும் தளபதி 68 படத்தின் மூலம் இரண்டாவது முறையாக இணைய உள்ளது.





தளபதி 68 படத்தை வெங்கட் பிரபு இயக்குகிறார் என அதிகாரப்பூர்வமாக வீடியோவுடன் வெளியிட்டது ஏஜிஎஸ் நிறுவனம். இந்த சந்தோஷத்தை தனது நண்பர்களுடன் கேக் வெட்டி கொண்டாடி உள்ளார் வெங்கட் பிரபு. பிறகு செய்தியாளர்களை சந்தித்து, அவர்களின் கேள்விகளுக்கும் பதிலளித்தார்.

சில மாதங்களுக்கு முன் உங்களின் தந்தை கங்கை அமரன், நீங்கள் அடுத்து இயக்க போகும் படத்தில் விஜய் - அஜித் இணைந்து நடிப்பார்கள் என கூறி இருந்தார். இதனால் தளபதி 68 படத்தில் அஜித் நடிக்க வாய்ப்புள்ளது. கெஸ்ட் ரோலிலாவது நடிப்பாரா? என பத்திரிக்கையாளர்கள் கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதிலளித்த வெங்கட் பிரபு, அப்பா அவருடைய விருப்பத்தை வெளிப்படுத்தி உள்ளார். இரண்டு ஹீரோக்களையும் ஒரே படத்தில் பார்க்க வேண்டும் என்பது அவருடைய ஆசை. ஆனால் தளபதி 68 படத்தில் அஜித் நடிக்கவில்லை. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள லியோ  படத்தின் ரிலீசிற்கு பிறகு தான் இந்த படத்தின் அடுத்த அப்டேட்கள் வெளிவரும் என்றார்.

லியோ படம் அக்டோபர் 19 ம் தேதி ரிலீசாக உள்ளது. அது வரை தளபதி 68 படத்தின் அப்டேட்டிற்காக காத்திருக்க வேண்டும். ஆனால் ஏற்கனவே தளபதி 68 படத்தில் வில்லன்களில் ஒருவராக எஸ்.ஜே.சூர்யா நடிக்க போவதாக தகவல்கள் பரவ துவங்கி விட்டது.

சமீபத்திய செய்திகள்

news

ஜெம் கிரானைட்ஸ் வீரமணி வழக்கில் லஞ்சம் வாங்கிய அதிகாரிகள் யார்? விசாரிக்க சிறப்பு குழு அமைப்பு!

news

"நிர்வாக அறிவு இருக்கிறதா?" – தவெக அரசை கடுமையாக விமர்சித்து மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை!

news

குற்றவாளிகள் ஒருவரையும் விடக்கூடாது: ஜெம் கிரானைட்ஸ் வீரமணி விவகாரத்தில் முதல்வர் அதிரடி உத்தரவு

news

ஜெம் கிரானைட் வீரமணி விவகாரம்: தவெக-திமுக இடையே முற்றும் மோதல்

news

ஆளுக்கு 8 ஓட்டு.. 9 மாத மழலை எடுத்துக் கொடுத்த சீட்டு.. கலகலப்பாக முடிந்த பள்ளித் தலைவர் தேர்தல்!

news

நடிகை அம்பிகா மீது சகோதரி ராதா பரபரப்பு புகார்: ரூ.46 கோடி மோசடி செய்ததாக போலீசில் புகார்

news

வங்கக்கடலில் தீவிரமடையும் காற்றழுத்த தாழ்வுப்பகுதி: இந்திய வானிலை மையம் எச்சரிக்கை!

news

ஏகாந்தம்.. அழகிய முழு நிலவொளியில் ஆனந்த ராகம் பாடி!

news

Short Story: காணாமல் போன கண்ணன்

அதிகம் பார்க்கும் செய்திகள்