ஜிசா, எகிப்து: எகிப்து நாட்டின் ஜிசா நகரில் உள்ள உலகின் மிகப் பெரிய, பிரமிடு மீது ஏறி விளையாடிக் கொண்டிருந்த நாய் அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.
எகிப்து நாட்டில் ஏராளமான பிரமிடுகள் உள்ளன. அதில் மிகப் பெரிய பிரமிடு ஜிசா பிரமிடுதான். கிரேட் பிரமிடு என்றும் இதைச் சொல்வாரா்கள். வானுயர்ந்து நிற்கும் இந்த பிரமிடு கட்டப்பட்டு கிட்டத்தட்ட 45000 வருடங்கள் ஆகிறது. பாரோ மன்னன் குஃபுவின் சமாதிதான் இந்த பிரமிடு ஆகும். அந்தக் காலத்தில் கிட்டத்தட்ட 26 வருடங்கள் செலவழித்து இந்த பிரமிடைக் கட்டி முடித்தனராம். ஆதிகாலத்து உலகின் ஏழு அதிசயங்களில் ஒன்று இந்த ஜிசா பிரமிடு. மற்ற 6 அதிசயங்களும் இப்போது இல்லை. இது மட்டும்தான் மிஞ்சி நிற்கிறது. யுனெஸ்கோவால் பாரம்பரியச் சின்னமாகவும் இது அறிவிக்கப்பட்டு பராமரிக்கப்படுகிறது.
இப்படிப்பட்ட பிரமிடை தூரமாக நின்று பார்த்தாலே மலைப்பாக இருக்கும். அப்படிப்பட்ட பிரமிடு உச்சி வரை போய் விளையாடினால் எப்படி இருக்கும்.. நினைக்கவே கிறுகிறுன்னு வருதுல்ல. ஆனால் அந்த ஏரியாவைச் சேர்ந்த 2 நாய்களுக்கு இதெல்லாம் ஜூஜிபி மேட்டராம். அந்தக் கதைதான் இப்போது பரபரப்பாக பேசப்பட்டும், பகிரப்பட்டும் வருகிறது.
மார்ஷல் மோஷர் என்பவர் பிரமிடு உள்ள பகுதியில் பாரா கிளைடிங் செய்துள்ளார். அப்போது பிரமிடு உச்சியில் யாரோ நடமாடுவது போல அவருக்குத் தெரிந்துள்ளது. இதையடுத்து தனது கேமராவை ஜூம் செய்து பார்த்துள்ளார். அப்போதுதான் அங்கு ஒரு நாய் விளையாடிக் கொண்டிருப்பது தெரிய வந்து ஆச்சரியமடைந்தார்.
உடனடியாக அந்த அரிய காட்சியை வீடியோவாக எடுத்துக் கொண்டார். அதை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் பகிரவே அது படு வேகமாக வைரலாகி விட்டது. பலரும் இந்தக் காட்சி குறித்து ஆச்சரியம் தெரிவித்துள்ளனர். ஏஅதில் சிலர் எகிப்து நாட்டு கடவுள் அனுபிஸ் மறு உருவம்தான் நீங்கள். அதனால்தான் இந்த நாய் உங்களது கண்ணில் பட்டுள்ளது என்று கூறி கிண்டலடித்துள்ளனர்.
அந்த நாய் பத்திரமாக இறங்கி வந்து விட்டதா என்று கவலை தெரிவித்திருந்தனர். அதற்கும் ஒரு வீடியோவைப் போட்டுள்ளார் மோஷர். நாய் வேகமாக கீழே இறங்கி வரும் வீடியோவையும், அந்த நாயுடன் இன்னொரு நாயும் இருக்கும் இன்னொரு படத்தையும் அவர் போட்டுள்ளார். அதில் இந்த இரண்டு நாய்களுமே அடிக்கடி மேலே போய் விளையாடுவது வழக்கம் என்று அங்கிருந்தோர் கூறியதாக தெரிவித்துள்ளார்.
ஜிசா பிரமிடானது கிட்டத்தட்ட 454 அடி உயரமாகும். இவ்வளவு உயரத்தில் உள்ள பிரமிடை அடிக்கடி இந்த நாய்கள் ஏறி இறங்கி விளையாடுகின்றன என்பது ஆச்சரியமாகத்தான் உள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
காற்றழுத்த தாழ்வு பகுதி.. நாளை உருவாகிறது..எங்கெல்லாம் கனமழை பெய்யும் தெரியுமா? வானிலை மையம் தகவல்!
ஐஏஎஸ் அதிகாரி பீலா வெங்கடேசன் காலமானார்.. கொரோனா காலத்தில் திறம்பட பணியாற்றியவர்!
3 ஆண்டுகளுக்கான தமிழ்நாடு அரசின் கலைமாமணி விருதுகள் அறிவிப்பு!
விஜய் செய்வது வெறுப்பு அரசியல்... மக்களிடம் அது எடுபடாது: திருமாவளவன்
குடியாத்தம் அருகே மிளகாய்ப் பொடி தூவி காரில் கடத்தப்பட்ட 4 வயது சிறுவன் மீட்பு!
பழங்குடியினருக்கு சாதி சான்றிதழ் வழங்க மறுப்பது சமூக அநீதி: டாக்டர் அன்புமணி ராமதாஸ்!
தீபாவளிக்கு விஜய் குரலில் தளபதி கச்சேரியா.. ஜனநாயகன் ஃபர்ஸ்ட் சிங்கிள் எப்ப ரிலீஸ்?
அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்.. போலீஸ் சோதனையில் புரளி என கண்டுபிடிப்பு
வானத்தில் கார்மேகமாய் நீயே.. கண்ணா!!!
{{comments.comment}}