கனாக் கண்டேனடி!

Oct 22, 2026,10:52 AM IST

-கவிதை மழை அ. நவஜோதி அருண்


உச்சி 

வானில்

நிலவின்

நேரம்... 


எச்சமிருக்கும்

உன்

நினைவுகளின்

ரீங்காரம்


மொட்டை

மாடி, 

மழிக்காத

தாடி


இளையராஜா

பாடலே.. 

உயிர்  நாடி


நகருதே... 

கடிகாரமணி

கேளடி

கண்மணி.. 




இரவின்

ராகமாய்

உன்னினைவே

சொர்க்கமாய்


பூத்துக்

குலுங்குதடி

இருளின்

மடி


இன்னும்

உறங்காது

சிந்தனையும்

நீதானடி


கனவெல்லாம்

நீயாக.... 

நீமட்டுமே

கனவானாய்


இராத்திரியின்

நீளம் குறைத்த

ராட்சசியே


திகட்டவில்லை

திகட்டவே

இல்லை

இல்லை... 


உன் ஞாபகப்

புதையலில்

நானாக.... 


என்

எண்ணப்

பாதையெலாம்

நீயாக.... 


மனம்

முழுக்க, 

சிறகடித்துத்

திரிகிறாய்


தெவிட்டாத

கனியாகி

நினைவினிலே

தொங்குகிறாய்


எப்போதும்

உறக்கம்

வரவே... 

காத்திருக்கிறேன். 


அப்போதும்

உறங்காமல்

உன்னையே

நினைக்கவே!


(கவிதை மழை அ. நவஜோதி அருண்குமார், கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்தவர். கவிதைகள் எழுதி வருபவர். இசையில் நாட்டம் கொண்டவர்.  சமூக அக்கறையுடன் கூடிய படைப்புகளைக் கொடுத்து வருகிறார்)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

அதிகம் பார்க்கும் செய்திகள்