- எஸ். ஷர்மிளா, துபாய்
உனக்குள் ஒருவன் தீப்பொறியாய் எரிகிறான்
உன் அமைதிக்குள்
புயலாக வீசுகிறான்
சொல்லாத வார்த்தைகள் அனைத்தையும் சுமந்து
பேசாமல் இருந்தாலும்
பேச வைக்கிறான்
உன் தோல்விகளில்
தோள் கொடுக்கிறான்
உன் பலவீனத்தை
பலமாக மாற்றுகிறான்
அவன் கண்களில்
தோல்வி இல்லை

ஒவ்வொரு வீழ்ச்சியிலும் வெற்றியை விதைக்கிறான்
ஓடினால் பின்னே
துரத்தி வருகிறான்
உன் பாதைக்கு வழி
காட்டுகிறான்
அவன் மட்டும் உறுதியாக நம்புகிறான்
உனக்குள் இருக்கும்
தீயை அணைக்காதே
அதுவே உன்னை உருவாக்கும் உண்மையான நீ
(கவித்துளி கற்பனையின் ஊற்று கவிதையின் காற்று வழங்கும் சிறப்புக் கவிதைப் போட்டியில் கலந்து கொண்ட கவிதை. கவிஞர் எஸ்.ஷர்மிளா, ஆசிரியர், துபாய். மதுரக் குரல் மங்கை, கற்கண்டுக் குயில் இனியாள் என்றும் புகழப்படுகிறார் கவிஞர் எஸ். ஷர்மிளா)
அன்பில் மகேஸ் பொய்யாமொழி ரெய்டு: மற்றுமொரு அரசியல் பழிவாங்கல்.. மு.க.ஸ்டாலின்
ஆல் இன் ஆல் இறையன்பு.. ஐஏஎஸ்ஸுக்குள் மறைந்திருக்கும் இலக்கியவாதி!
ஆவியைப் பத்தி சொல்லுங்க.. எங்கே நைஸா ஓடப் பாக்கறீங்க.. வாங்க இங்க..!
MS Subbulakshmi: மகாராணி மீனாட்சியின் மதுரையில் அவதரித்த.. கர்நாடக இசையின் ராணி!
இது லண்டனா இல்லை சென்னையா.. விஜய்யைப் பார்க்க கூடிய பெரும் கூட்டம்.. சந்திப்பு ரத்து!
ரெஸ்ட்டில் இருக்கிறேன்.. உடல்நலம் குறித்து விசாரித்த அனைவருக்கும் நன்றி.. மு.க.ஸ்டாலின்
பட்டினப்பாக்கத்தில் தலைமை செயலகம் கட்டினால்...என்ன அதிமுக ஜெயக்குமார் இப்படி சொல்லிட்டார்?
மதுரை அரசாளும்.. மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்.. 17 ஆண்டுகளுக்குப் பிறகு!
முதல்வர் விஜய் குறித்து அவதூறு பேச்சு: சேகர்பாபு, ஆ.ராசா மீது வழக்குப்பதிவு
{{comments.comment}}