- க.யாஸ்மின் சிராஜூதீன்
சிரித்தல் நோயை போக்குமாம்
உடலை பேணி வளர்க்குமாம் ....!!!
சிரித்தலில் உண்டு பலவகையாம்
கடவுள் தந்த உயர் வரமாம்...!!!
சிரிப்பதே தெரியாமல் சிரிக்கனும்
பிறருக்கு தொல்லை தராமல் இருக்கனும்...
இடம் பொருள் ஏவல் அறிந்து
நடக்கனும்...!!!

குழந்தைகளைப்போல சிரிக்கனும்
கள்ளம்கபடமின்றி இருக்கனும் ...!!!
சத்தமாக வாய்விட்டு சிரிக்கனும்
இன்பத்தை பகிர்ந்து மகிழனும்..!!!
அழுது கொண்டே சிரிக்கனும்
குழந்தைகளுக்கு விளையாட்டு
காட்டனும்...!!!
சிரித்துக் கொண்டே அழுகனும்
நம் கஷ்டத்தை நாமே மாற்றனும்..!!!
கேலனின் வகைப்பாடு
அணுகுமுறையும் வகைப்படுத்துதே..
சிடுமூஞ்சி, அழுமூஞ்சி,தூங்குமூஞ்சி,
சிரிமுஞ்சிஎன்றுபெயர்கொண்டதே .!!!
எந்த மூஞ்சி வேண்டும் என்று
நீயே தேர்ந்து எடுத்துக்கொள்...!!!
அயல் நாடுகளில் சிரிக்க கூட
கூடனும்...
குறிப்பிட்ட நேரம் அதுக்கு ஒதுக்கனும்.....!!!
இந்த நிலை நமக்கு
இல்லை ....
மகிழ்ச்சிக் குடும்பம் நமக்கு
இல்லாமல் இல்லை...!!!
கூட்டுக்குடும்பம்,தனிக்குடும்பம்
எதுவானாலும் சிரிப்புச்சத்தம்
கேட்கனும்...!!!
மகிழ்ச்சிப்பூக்கள் பூத்துக் குலுங்கனும்..!!
வாழ்கையின் ஓட்டத்தில்
சிரித்து வாழனும்...
வாய்விட்டுச்சிரித்தால் நோய்விட்டுப்போகுமே...
காசு கொடுத்து வாங்கவேணாமே
மனது மகிழ்ந்தால் போதுமே...!!!
பிறர் துன்பம் கண்டு
சிரித்தல் கூடாதே...!!
பிறர் நகைக்கும்படி
வாழக் கூடாதே..!!!
நீயும் சிரித்திடு,பிறரையும்
சிரிக்க வைத்து வாழ்ந்திடு ...
எல்லையில்லா இன்பம் அடைந்திடு...!!!
சிரித்தல் நமக்கு பொக்கிஷமே
இனிய வாழ்வு தந்திடுமே...!!!
(கவிஞர் க.யாஸ்மின் சிராஜூதீன் இடைநிலை ஆசிரியர். ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி கரடிக்குப்பம். மேல்மலையனூர் ஒன்றியம் விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர். 26.09.2014 முதல் இடைநிலை ஆசிரியராக 11 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். 2 ஆண்டுகளாக கவிதை, சிந்தனை துளிகள், சிறுகதை, வகுப்பறைக்கு பாடங்கள் தொடர்பான பாடல்கள் எழுதி வருகிறார். பிரதிலிபி தளத்தில் கவிதைகளைப் பதிவிட்டு வருகிறார். தொடுவானம் கவிதை குழுமம் நடத்தும் whatsApp வழியாக கவிதை எழுதும் போட்டியில் தொடர்ந்து கவிதை எழுதி வருகிறார்)
திமுக எதிர்ப்பு .. இது மட்டும் போதுமா அதிமுக வெற்றி பெற.. எங்கேயே இடிக்குதே!
உடல்நிலை அக்கறை கூட சமூக சேவையே!
வையம்!
சென்னையில் ஊதிய உயர்வு கோரி போராட்டம்: தூய்மைப் பணியாளர்கள் நூற்றுக்கணக்கில் கைது!
தினம் தினம் புதிய உச்சம்... இன்றும் தங்கம் சவரனுக்கு ரூ.880 உயர்வு... தொடர் அதிர்ச்சியில் மக்கள்!
சென்னையில் ஒரு விழா... உணவு திருவிழா.. ஜாலியா சுத்திப் பாத்துட்டு.. வயிறு முட்ட சாப்பிடுங்க!
ஜன கண மன .. முதன் முதலாக தேசிய கீதம் பாடிய நாள் தெரியுமா?
குரு கோவிந்த் சிங் ஜெயந்தி.. பக்தி கலந்த உற்சாகத்துடன் சீக்கியர்கள் கொண்டாட்டம்
பூவுக்குள் ஒளிந்திருக்கும் கனிக் கூட்டம் அதிசயம்.. அறிவோம்.. உலக அதிசயங்கள்!
{{comments.comment}}