- அ.தாமஸ்
எந்த ஒன்றையும் அப்படியே நம்பிவிடாதீர்கள். ஆபத்திலிருந்து நம்மைக் காக்கும் ஆயுதமே ஐயம். ஐயம் கொள்வது அவலம் என்று சிலர் கூறும் ஆபத்தான வார்த்தைகளை நம்பித்தான் நாம் மீள முடியாத ஆபத்தில் மூழ்கிப் போகிறோம்.
இன்று நமக்குத் தொடர்பற்றவை என்று தெரியும் செய்திகளைக்கூட தெரிந்துகொள்ளும் வாய்ப்புக் கிடைத்தால், தெரிந்துகொள்ளத் தயங்காதீர்கள். நம் வாழ்க்கை இதே நிலையில் பயணிக்கப் போவதில்லை.

இன்று தேவையற்றதாகத் தோன்றுபவை நாளைத் தேவையானதாகவும், இன்று தேவையானதாகத் தோன்றுபவை நாளைத் தேவையற்றதாகவும் மாறிப் போகலாம்.
அனைத்து நிலைகளையும் அறிந்திருத்தல் அழகானது; அதே மமதையில் மிதந்திருத்தல் அதீத ஆபத்தானது. எனவே, தெரியாது என்ற நிலையைத் தகர்க்கத் தேவையானவற்றைத் தெரிந்து தெளிந்திடுங்கள். அனைத்தையும் ஐயம் களைந்து, அறிந்து, தெரிந்து, தெளிந்து செய்யும்பொழுதுதான் நாம் ஏமாற்றங்கள் இல்லாத ஏற்றம் காண முடியும்.
(அ.தாமஸ் MSc, Bed, MPhil, MSc(psycho), Fscp(psycho), ஆசிரியர், வாணி கிராமம், சிவகங்கை மாவட்டம்)
அவள் யாரென்று தெரியுமா? - புத்தம் புதிய தொடர் கதை - அத்தியாயம் 1
சிந்தனைச் சிதறல்.. ஆபத்திலிருந்து நம்மைக் காக்கும் ஆயுதமே ஐயம்!
வெள்ளிக்கிழமை நவராத்திரி!
வழிகாட்டி
வெயிலே, வா வா.!
எல்லோருக்கும் புரியும் நான்… எனக்குப் புரிவேனா? - ரம்யாவின் கவிதைத் தோட்டம் (3)
விருந்துக்கு வாங்க .. ஒரு நிமிடக் கதை (38)
குந்திதேவி.. சோதனைகளையும் தியாகங்களையும் தாங்கி நின்ற தாயின் கதை!
இளையராஜா -தேவா சந்திப்பு கடைசி வரை நடக்காமலேயே போய் விட்டதே!
{{comments.comment}}