சென்னை : ஆடி மாதத்தில் வரக் கூடிய மிக முக்கியமான விழாக்களில் ஒன்று ஆடிப்பூரம். ஆடி மாத வளர்பிறையில் பூசம் நட்சத்திரம் உச்சமடையும் நாளையும் ஆடிப்பூரமாக நாம் ஆண்டுதோறும் கொண்டாடுகிறோம். பன்னிரு ஆழ்வார்களில் ஒருவரான ஆண்டாள் அவதரித்த திருநாள் என்பதால் ஆடிப்பூரம், ஆண்டாள் ஜெயந்தி என்ற பெயரிலும் கொண்டாடப்படுகிறது. அன்னை உமா தேவி அவதரித்தது, உலகம் சிருஷ்டிக்கப்பட்டதும் இந்த ஆடிப்பூர தினத்தில் தான் என சொல்லப்படுகிறது.
உலகிற்கே அன்னையாக விளங்கும் பராசக்தி, உலகை தோற்றுவித்த நாள் என்பதால் ஆடிப்பூரத்தன்று அம்மனுக்கு வளையல் அலங்காரம் செய்து, வளைகாப்பு திருவிழா நடத்தும் வழக்கம் உள்ளது. ரிஷிகளும், முனிவர்களும் தங்களின் தவத்தை துவங்கும் சிறப்புக்குரிய நாளாகவும் ஆடிப்பூரம் உள்ளது. இந்த ஆண்டு ஆடிப்பூரம் ஆகஸ்ட் 07ம் தேதி புதன்கிழமை வருகிறது. ஆகஸ்ட் 06ம் தேதி மாலை 06.42 மணி துவங்கி, ஆகஸ்ட் 07ம் தேதி இரவு 09. 03 வரை பூரம் நட்சத்திரம் உள்ளது.
பெருமாளின் பரமபக்தரான பெரியாழ்வாருக்கு அருள் செய்வதற்காக அன்னை மகாலட்சுமியே, ஆண்டாளாக அவதரித்ததாகவும், பூமாதேவியின் மறு அவதாரம் தான் ஆண்டாள் என்றும் புராணங்கள் சொல்கின்றன. சிறு வயது முதல் திருமாலை மட்டுமே தன்னுடைய கணவனாக நினைத்து வாழ்ந்து வந்த கோதையாகிய ஆண்டாள், தான் சூடி அழகு பார்த்த மாலையையே பெருமாளுக்கு அணிவித்து வந்தாள். இதனால் சூடிக்கொடுத்த சுடர்கொடி என்ற பெயர் ஆண்டாளுக்கு ஏற்பட்டது. இறுதியாக, பெருமாளையே கணவனாக அடைந்து, ஸ்ரீரங்கத்தில் அரங்கநாதனுடன் சென்று ஐக்கியமானாள். அரங்கனுடன் ஆண்டாள் ஐக்கியமான தினமே ஆடிப்பூரம் என்றும் சொல்லப்படுகிறது.

ஆடிப்பூம் 10 நாட்கள் உற்சவமாக ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் ஸ்ரீரங்கத்தில் வெகு விமர்சையாக நடைபெறும். இதில் 10வது நாளில் ஆண்டாள், ரங்கநாதரின் திருக்கல்யாண வைபவம் நடைபெறும். இந்த திருக்கல்யாண வைபவத்தை தரிசித்தால் திருமணத்திற்காக காத்திருப்பவர்களுக்கு நிச்சயம் திருமணம் வரம் கைகூடும். அதே போல் ஆடிப்பூரத்தன்று ஆண்டாளுக்கும், அன்னை பராசக்தியும் வளையல் வாங்கி பக்தர்கள் தருவாள்கள். அம்மனுக்கு அணிவிக்கப்படும் இந்த வளையல்கள், கோவிலுக்கு வருபவர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும். இந்த வளையல்களை வாங்கி பெண்கள் அணிந்து கொண்டால் விரைவில் திருமண பாக்கியமும், குழந்தை பாக்கியமும் கிடைக்கும் என்பது ஐதீகம்.
வீட்டில் ஆண்டாளை வழிபடுபவர்கள் அம்மன் படத்திற்கு வளையலில் மாலை கட்டி அணிவிக்கலாம். இந்த நாளில் ஆண்டாளுக்கு கற்கண்டு சாதம் நைவேத்தியமாக படைத்து, துளசி மற்றும் தாமரை படைத்து வழிபடுவதால் ஆண்டாள், மகாலட்சுமி மற்றும் திருமாலின் அருள் கிடைக்கும்.
பெண்கள் ஆடிப்பூரத்தன்று விரதம் இருந்து வழிபட்டால் அவர்கள் வேண்டும் வரங்களை ஆண்டாள் வழங்குவாள் என்பது நம்பிக்கை. ஆடிப்பூரம் அன்று ஆண்டாள் நாச்சியார் அருளிய திருப்பாவை, வாரணம் ஆயிரம் ஆகியவற்றையும், லலிதா சகஸ்ரநாமமும் படிப்பது சிறப்பானதாகும்.
அன்பில் மகேஸ் பொய்யாமொழி ரெய்டு: மற்றுமொரு அரசியல் பழிவாங்கல்.. மு.க.ஸ்டாலின்
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் எப்போதுமே முதல் பூஜை யாருக்கு தெரியுமா?
ரெஸ்ட்டில் இருக்கிறேன்.. உடல்நலம் குறித்து விசாரித்த அனைவருக்கும் நன்றி.. மு.க.ஸ்டாலின்
ஈரான் போர் எதிரொலி: ஆசியாவுக்கான எண்ணெய் கப்பல் போக்குவரத்து செலவு புதிய உச்சம்!
"ஜெயா, நீ இல்லாத ஊருக்கு இலுப்பைப் பூ".. மறக்க முடியுமா? (2)
ஆவியைப் பத்தி சொல்லுங்க.. எங்கே நைஸா ஓடப் பாக்கறீங்க.. வாங்க இங்க..!
MS Subbulakshmi: மகாராணி மீனாட்சியின் மதுரையில் அவதரித்த.. கர்நாடக இசையின் ராணி!
இது லண்டனா இல்லை சென்னையா.. விஜய்யைப் பார்க்க கூடிய பெரும் கூட்டம்.. சந்திப்பு ரத்து!
வாஸந்திக்குப் பிடித்த பாஸந்தி!
{{comments.comment}}