ஆடலரசன் நடராஜ பெருமாநுக்கு உகந்த.. ஆனித் திருமஞ்சனம்

Jun 18, 2026,12:04 PM IST

- ஸ்வர்ணலட்சுமி


பராபவ வருடம் 2026 ஜூன் மாதம் 22ஆம் தேதி ஆனி மாதம் 8ஆம் நாள் ஆடலரசன் நடராஜப் பெருமானுக்கு உகந்த ஆனித் திருமஞ்சனம் கொண்டாடப்பட இருக்கிறது.


ஆனி மாதம் வளர்பிறையில் உத்திர நட்சத்திரத்தில் நடத்தப்படும் அபிஷேகம் "ஆனி உத்திர திருமஞ்சனம்" என்று அழைக்கப்படுகிறது. அனைத்து சிவன் கோவில்களில் இந்த உற்சவம் கோலாகலமாக நடத்தப்படுகிறது. 


இருப்பினும், சிதம்பரத்தில் பத்து நாட்கள் உற்சவமாக வெகு  விமர்சையாக கொண்டாடப்படுகிறது. நடராஜருக்கு நடைபெறும் ஆனி  திருமஞ்சனத்தை காண முப்பத்து முக்கோடி தேவர்களும் சிவன் கோவில்களில் எழுந்து அருள்வதாக ஐதீகம்.


அபிஷேகப் பிரியர் சிவபெருமான் :


 


சைவ சமயத்தின் முழு முதல் கடவுளான சிவபெருமான் 'அபிஷேக பிரியர் 'என்று அழைக்கப்படுகிறார்.  அக்னிஸ்வரூபமாக விளங்கும் சிவபெருமானுக்கு அபிஷேகங்கள் செய்து வழிபட்டுவதனால்,அவர் மனம் மகிழ்ந்து அருளை அள்ளித் தருவார் என்பது நம்பிக்கை. சிவாலயங்களில் நாள்தோறும் சிவபெருமான் திருமேனிக்கு அபிஷேகம் நடைபெறுகிறது. ஆனால் சிவபெருமானின் வடிவங்களில் ஒருவரான நடராஜருக்கு வருடத்தில் ஆறு முறை மட்டுமே அபிஷேகம் நடத்தப்படுகிறது.


மகா அபிஷேகம் :


ஒரு வருடத்தில் நடராஜருக்கு ஆறு முறை மட்டுமே அபிஷேகம் நடத்தப்படுகிறது.       


1. ஆனி உத்திரம்.     

2. மார்கழி திருவாதிரை.

3. சித்திரை திருவோணம். 

4. ஆவணி சதுர்த்தி. 

5. புரட்டாசி சதுர்த்தசி.

6. மாசி சதுர்த்தசி ஆகிய நாட்களில் நடராஜப் பெருமானுக்கு அபிஷேகங்கள் நடைபெறுகின்றன. இந்த அபிஷேகங்கள்

" மகா அபிஷேகம் "என்று அழைக்கப்படுகிறது.


இந்த ஆறு அபிஷேகங்களில் மார்கழி மாதம் திருவாதிரையில் நடைபெறும் ஆருத்ரா தரிசனமும்,ஆனி மாதம் உத்திரத்தில் நடைபெறும் திருமஞ்சனமும் மிகவும் சிறப்பு வாய்ந்தது ஆகும். இந்த இரு நாட்களில் நடைபெறும் அபிஷேகம் மட்டுமே அதிகாலையில் நடைபெறுகிறது.


சிதம்பர நடராஜர் :


வைகாசி மாத அக்னி நட்சத்திர வெப்பத்தில்  தகிக்கும் திருமேனிக்கு ஆனியில் திருமஞ்சனம் செய்யப்படுகிறது. ஆனித் திருமஞ்சன விழாவை தொடங்கி வைத்தவர்  பதஞ்சலி மகரிஷி ஆவார். சிதம்பரத்தில் நடராஜப்  பெருமான்  ஆடும் ஆனந்த தாண்டவம் படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் ஆகிய ஐந்து தொழில்களையும் உணர்த்துகிறது. சிதம்பரத்தில் நடராஜருக்கு வலப்பக்கத்தில் சிதம்பர ரகசியம் உள்ளது. அதுபோல திருவாரூர் தியாகராஜர் திருமேனியே ரகசியம் கொண்டது. இந்த இரண்டு பெருமான்களின் நடனத்தையும் பதஞ்சலி முனிவரும், வியாக்ரபாத முனிவரும் தரிசித்ததாக கூறப்படுகிறது.


சிதம்பரத்தில் நடைபெறும் பத்து நாள் உற்சவத்தில் சிகர விழாவான உத்தர நட்சத்திர தன்று அதாவது ஆனி மாதம் 8 ஆம் தேதி திங்கட்கிழமை அதிகாலை 3 :00மணி முதல் 6:00 மணி வரை நடராஜருக்கு ஆயிரம் கால் மண்டபத்தில் (ராஜசபை )திருநீறு, பால், தயிர், தேன், பஞ்சாமிர்தம், சந்தனம், போன்றவற்றைக் கொண்டு "மகா அபிஷேகம்" நடைபெறும். பின்னர் நடராஜருக்கு திருவாபரணங்கள் அணிவிக்கப்பட்டு சிறப்பு அலங்காரங்கள்,ரகசிய பூஜையும் நடத்தப்படுகிறது. அதைத்தொடர்ந்து நடராஜப் பெருமானும், சிவகாமி சுந்தரியும் சித் சபையில் திருக்காட்சி அருள் பாலிப்பார்கள்.


நடராஜ பெருமான் ஆடலரசன்,தில்லைக் கூத்தன்,கூத்தபிரான் என பல பெயர்களில் அழைக்கப்படுகிறார். இவர் முயலகனை வதம் செய்த கோலத்தில் சிவகாமி அம்மையாரோடு கால் தூக்கி நடனம் ஆடும் கோலத்தில் அருள் பாலிக்கிறார்.கலைகளில் சிறந்து விளங்க விரும்புபவர்கள்  ஆனி மாதம் விரதம் இருந்து, நடராஜர் தரிசனம் கண்டு களிக்க பல நன்மைகள் பெறுவார்கள்.


சிதம்பரம் சென்று நடராஜருக்கு நடைபெறும் மகா அபிஷேகத்தை தரிசிக்க அனைவராலும் இயலாது.எனவே,அருகில் இருக்கும் சிவன் கோவில்களில் நடைபெறும் நடராஜர் அபிஷேகத்தை கண்டு தரிசிக்க அனைத்து துன்பங்களிலிருந்து விடுதலை பெற்று, செல்வ வளம் பெருகும், திருமணத்தடை நீங்கும். பிரிந்த தம்பதியர் ஒன்றிணைவர். உடல் ஆரோக்கியம் மேம்படும். சிவபெருமானின் அருள் பெற்று நாம் அனைவரும் நல்வாழ்வு வாழ்வோமாக.


"ஓம் நமச்சிவாய"


மேலும் இது போன்ற சுவாரஸ்யமான தகவல்களுக்கு தொடர்ந்து இணைந்திருங்கள் தென் தமிழுடன். வரைந்து எழுதியவர் உங்கள் ஸ்வர்ணலட்சுமி பாலசுப்ரமணி.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

அன்பில் மகேஸ் பொய்யாமொழி ரெய்டு: மற்றுமொரு அரசியல் பழிவாங்கல்.. மு.க.ஸ்டாலின்

news

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் எப்போதுமே முதல் பூஜை யாருக்கு தெரியுமா?

news

ரெஸ்ட்டில் இருக்கிறேன்.. உடல்நலம் குறித்து விசாரித்த அனைவருக்கும் நன்றி.. மு.க.ஸ்டாலின்

news

ஈரான் போர் எதிரொலி: ஆசியாவுக்கான எண்ணெய் கப்பல் போக்குவரத்து செலவு புதிய உச்சம்!

news

"ஜெயா, நீ இல்லாத ஊருக்கு இலுப்பைப் பூ".. மறக்க முடியுமா? (2)

news

ஆவியைப் பத்தி சொல்லுங்க.. எங்கே நைஸா ஓடப் பாக்கறீங்க.. வாங்க இங்க..!

news

MS Subbulakshmi: மகாராணி மீனாட்சியின் மதுரையில் அவதரித்த.. கர்நாடக இசையின் ராணி!

news

இது லண்டனா இல்லை சென்னையா.. விஜய்யைப் பார்க்க கூடிய பெரும் கூட்டம்.. சந்திப்பு ரத்து!

news

வாஸந்திக்குப் பிடித்த பாஸந்தி!

அதிகம் பார்க்கும் செய்திகள்