சென்னை : நடிகர் பப்லு பிருத்விராஜ் தனது காதலியையும் விவாகரத்து செய்து விட்டதாக புதிய தகவல் ஒன்று சோஷியல் மீடியாவில் தீயாய் பரவி வருகிறது. பப்லுவின் புலம்பல், காதலியின் இன்ஸ்டா பதிவு ஆகியன ரசிகர்களிடம் பல சந்தேகங்களை ஏற்படுத்தி உள்ளது.
சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, பிறகு பல குணசித்திர வேடங்கள், ஹீரோ வேடங்களிலும் நடித்தவர் பப்லு பிருத்விராஜ். இவர் தற்போது சின்னத்திரையில் பல சீரியல்களிலும் நடித்து கலக்கி வருகிறார். 56 வயதாகும் பப்லு, 1994 ம் ஆண்டு பீனா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 26 வயதில் ஆட்டிசம் பாதித்த மகன் ஒருவர் உள்ளார். தனது மகன் குறித்து பல உருக்கமான, அன்பான பதிவுகளை பதிவிட்டு வந்த பப்லு, திடீரென தனத மனைவியை விவாகரத்து செய்வதாக சில ஆண்டுகளுக்கு முன் அறிவித்தார். அதற்கு பிறகு தனியாக வாழ்ந்து வந்தார்.
இந்நிலையில் சமீபத்தில் தன்னை விட 33 வயது இளையவரும், தனது மகனை விட வயது குறைந்தவருமான ஷீத்தல் என்பவரை தான் காதலிப்பதாகவும், விரைவில் திருமணம் செய்து கொள்ள உள்ளதாகவும் சமீபத்தில் மீடிக்களில் ஓப்பனாக அறிவித்தார் பப்லு. இவர்கள் இருவரும் ரகசியமாக சேர்ந்து வாழ்ந்ததாக சொல்லப்பட்டது. தெலுங்கானாவை சேர்ந்த ஷீத்தலுடன் வெளியில் செல்வது, டான்ஸ் ஆடுவது போன்ற பல வீடியோக்கள், போட்டோக்கள் ஆகியவற்றையும் தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டு வந்தார் பப்லு.
இந்த நிலையில் சமீபத்தில் இவருக்கு பிறந்த நாள் வந்தது. இந்த பிறந்த நாள் கொண்டாட்ட போட்டோக்களையும் இன்ஸ்டாவின் பகிர்ந்தார் பப்லு. ஆனால் அந்த போட்டோக்களில் அவரது காதலி ஷீத்தல் இல்லை. அதோடு ஷீத்தல் தொடர்பான போட்டோக்கள், வீடியோக்களையும் தனது இன்ஸ்டா பக்கத்தில் இருந்து அகற்றினார் பப்லு. இதனால் சந்தேகம் அடைந்த ரசிகர்கள், இது பற்றி கேள்வி எழுப்பினர். அவரையும் விவாகரத்து செய்து விட்டீர்களா? என்று கூட சிலர் ஓப்பனாக கேட்டனர்.
இதற்கு பதிலளிக்கும் விதமாக புலம்பி தள்ளி உள்ளார் பப்லு, கடவுள் தனது வாழ்க்கையை தொங்கலில் விட்டு விட்டார். தனிப்பட்ட விஷயங்களை பொது வெளியில் பகிர்வது தவறு என்பதை புரிந்து கொண்டேன். இதற்கு மேலும் அறிவு வரவில்லை என்றால் தன்னை விட முட்டாள் இந்த உலகில் யாரும் இல்லாமல் இருப்பார்கள் என இன்ஸ்டா பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில் பப்லுவிற்கும், அனைவருக்கும் அதிர்ச்சி கொடுக்கும் விதமாக ஷீத்தல் தனது இன்ஸ்டா பக்கத்தில் போஸ்ட் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், நாங்கள் திருமணமே செய்து கொள்ளவில்லை. அதற்குள் எப்படி பப்லுவை எனது கணவர், நான் அவரை விவாகரத்து செய்து விட்டேன் என சொல்வீர்கள் என கேட்டுள்ளார். இது பப்லுவிற்கு பேரிடியாக அமைந்துள்ளதாக பலரும் அவருக்கு ஆறுதல் கூறி வருகிறார்கள்.
அப்படி என்னதான் நடந்தது இருவருக்குள்ளும்.. இப்போது இருவரது இன்ஸ்டா பக்கங்களிலும் இருவரும் இணைந்திருந்த புகைப்படங்கள், வீடியோக்களை இருவரும் நீக்கி விட்டனர்.
பஹல்காம் தாக்குதல்: நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தை கூட்ட மல்லிகார்ஜுன் கார்கே கோரிக்கை
பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதல்.. ஜிப்லைனில் பயணித்தவரின் பரபரப்பு வீடியோ!
கனடாவில் லிபரல் கட்சி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது.. கூட்டணி ஆட்சியமைக்கும்.. பிரதமர் கார்னி
கடலில் விழுந்து மூழ்கிய.. பல கோடி ரூபாய் மதிப்பிலான அமெரிக்க போர் விமானம்.. 2 வீரர்கள் மீட்பு!
பஹல்காம் தாக்குதல் எதிரொலி.. பயணிகள் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்.. காஷ்மீரில் 48 ரிசார்ட்டுகள் மூடல்
பொறுத்தார் பூமிஆள்வார்.. விடா முயற்சியே வெற்றிக்கு வழிகாட்டி.. கலாம் சொல்வதும் அதுதான்
அட்சய திருதியை முன்னிட்டு.. தங்கத்தின் விலை மீண்டும் சற்று உயர்வு.. வாடிக்கையாளர்கள் அதிருப்தி..!
தமிழ்நாட்டில்.. இன்று வெயில் குறைந்து மழை பெய்யக்கூடும்.. தமிழ்நாடு வெதர்மேன்!
அமைச்சராகப் பதவியேற்றார் மனோ தங்கராஜ்.. மீண்டும் பால்வளத்துறையே ஒதுக்கீடு செய்யப்பட்டது!
{{comments.comment}}