திருவனந்தபுரம்: இதுவரை இல்லாத அளவில் மிரட்டலான அவதாரத்தில் மம்முட்டி நடித்திருக்கும் பிரமயுகம் திரைப்படம் இன்று மலையாளத்தில் ரிலீஸ் ஆகி உள்ளது.
மலையாளத் திரையுலகில் ஈடு இணையற்ற நடிகராக வலம் வருபவர் நடிகர் மம்முட்டி. நீண்ட நாட்களாக சினிமாவில் தனக்கென இடத்தை அழுத்தமாக பதிய வைத்துள்ளார். இவரது ஐந்து தசாப்த கால சினிமாவில் 400 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். இவர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம், போன்ற மொழிகளில் நடித்து புகழ் பெற்றவர். தமிழ் திரையுலகிலும் இவருக்கென்றே தனி ரசிகர் பட்டாளம் உண்டு.
அந்த வகையில் இவர் நடித்து வெளியாகும் படத்திற்கு தமிழ் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவும். இதுவரை நடிகர் மம்முட்டி மூன்று தேசிய விருதுகளையும், கேரளா மாநில திரைப்பட விருதுகளையும், தென்னிந்திய ஃபிலிம் பெயர் விருதுகளையும் பெற்று பாராட்டுகளை பெற்றவர்.
மம்முட்டி நடிப்பில் உருவாகியுள்ள மிரட்டலான படம்தான் பிரமயுகம். இதுவரை இல்லாத அளவில் மிரட்டலான அவதாரத்தில் பார்வையாளர்களை கவரக்கூடிய வகையில் இப்படத்தில் நடித்து அசத்தியுள்ளார்.

நைட் சிப்ட் ஸ்டுடியோஸ் மற்றும் ஒய் நாட் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்து உள்ள திரைப்படம் பிரமயுகம். இப்படத்தை பூதகாலம் புகழ் ராகுல் சதாசிவன் இயக்கியுள்ளார். ஷெஹ்னாத் ஜலால் ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படத்திற்கு கிறிஸ்டோ சேவியர் இசையமைத்துள்ளார். இப்படத்தில் அர்ஜுன் அசோகன், சித்தார்த் பரதன் மற்றும் அமல்டா லிஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
மாயம், மாந்திரீகம் போன்ற விஷயங்கள் நிறைந்த ஒரு மிகப்பெரிய சகாப்தத்தில் கேரளாவில் கதை விரிவடையுமாம். அங்கு ஒரு நாட்டுப்புற பாடகர் அடிமை சந்தையில் இருந்து தப்பித்து, மர்மமான ஒரு மாளிகையில் சிக்குகிறார். படத்தை முழுவதுமாக பிளாக் அண்ட் ஒயிட் இல் மட்டுமே படமாக்கி வெளியிடுதல் என்ற துணிச்சலான ஆக்கப்பூர்வமான முடிவை படக்குழுவினர் எடுத்துள்ளார்களாம்.
இப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், ஆகிய மொழிகளில் ஒரே நேரத்தில் முன்பு ரிலீஸ் செய்ய திட்டமிடப் பட்டிருந்த நிலையில், இன்று மலையாளத்தில் மட்டும் ரிலீஸ் செய்துள்ளனர். இதற்கு காரணம் பிரம்மயுகம் திரைப்படத்தின் ஒரிஜினல் வெர்ஷன் ஐ முதலில் பார்வையாளர்கள் ரசிக்க வேண்டுமாம். ஒரிஜினல் வெர்ஷன் ரசிகர்களிடம் வரவேற்பு பெரும் என்ற உறுதியான நம்பிக்கை வைத்துள்ளனர் பட குழுவினர். இதனால் இப்படத்தை மலையாளத்தில் மட்டும் இன்று ரிலீஸ் செய்துள்ளனர். இப்படத்திற்கு மொழி ஒரு தடையாக இல்லாமல் பலதரப்பட்ட பார்வையாளர்களையும் சென்றடையுமாம்.
இப்படத்தில் உள்ள திர்லர் காட்சிகள், மாயக்கூறுகள், சிறந்த தொழில்நுட்ப நுக்கம், போன்றவை சிறப்பாக கொடுக்கப்பட்டுள்ளதாக படக்குழு உறுதி அளித்துள்ளது. மேலும் மற்ற மொழிகளில் பிரமயுகத்தின் டப்பிங் வெர்ஷன் விரைவில் ரிலீஸ் செய்யப்படும் எனவும் பட குழுவினர் அறிவித்துள்ளனர்.
முன்னதாக இந்த பன்மொழிப் படத்தின் டிரைலர் அபுதாபியில் கடந்த பிப்ரவரி 11ஆம் தேதி மிகப் பிரம்மாண்டமாக ரிலீஸ் செய்யப்பட்டது. இதில் மம்முட்டி மற்றும் பட குழுவினர் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர். இந்த நிகழ்வில் எந்த முன் முடிவும் இல்லாமல் இந்த படத்தைக் காண வாருங்கள். இப்படம் புதிய திரை அனுபவமாக இருக்கும் என மம்முட்டி பேசியிருந்தார் என்பது நினைவிருக்கலாம்.
ஹாரர்- திரில்லர் படங்களை தயாரிப்பதற்காகவே உருவாக்கப்பட்ட நைட்ஷிப் ஸ்டுடியோஸ் பேனர் தற்போது பிரமயுகம் படத்தை தயாரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படம் முழுக்க முழுக்க கருப்பு வெள்ளைப் படமாக உருவாகியுள்ளது முக்கியமானது.
தமிழ்நாட்டில் அடுத்த 2 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் அலர்ட்!
பசி,பட்டினியை போக்கவில்லை... தீபம் ஏற்ற வேண்டும் என கூறுகிறார்கள்: சீமான் ஆவேசம்!
வானுயர் ஜிஎஸ்டிபி வளர்ச்சி விகிதத்தில் தமிழ்நாடு சாதனை படைத்துள்ளது:முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
மெஸ்ஸியை பார்க்க முடியாமல் ரசிகர்கள் ஆவேசம்... ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட முதல்வர் மம்தா பானர்ஜி!
திமுக அரசின் துரோகத்திற்கு எதிராக தெருவுக்கு வந்த போராடும் அரசுஊழியர்கள்: அன்புமணி ராமதாஸ் வேதனை!
ஜிடிபி வளர்ச்சியில் தமிழ்நாடு புதிய சாதனை.. பெரிய மாநிலங்களில் நம்பர் 1 நாமதான்!
Flashback 2025.. தென்னிந்தியத் திரையுலகுக்கு பெரும் சோகம் தந்து விடைபெறும் 2025!
சினிமாத் துறையினரை தொடர்ந்து பாதிக்கும் மன அழுத்தம்.. உரிய கவுன்சிலிங் அவசியம்!
Amma's Pride ஆஸ்கர் விருதுக்குப் போட்டியிடும் சென்னையில் உருவான குறும்படம்!
{{comments.comment}}