சென்னை: காதல் மற்றும் ஆக்ஷன் டிராமா ஜானரில் வெளியான தசரா திரைப்படம் கடந்த ஆண்டின் மிகப் பெரிய வெற்றி படங்களில் ஒன்றாக மாறியது. மேலும் நானி நடிப்பில் வெளியாகி அதிக வசூல் செய்த படமாகவும் தசரா அமைந்தது. இந்த நிலையில், தசரா கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது.
நானி மற்றும் இயக்குநர் ஸ்ரீகாந்த் ஒடேலாவுடன் புதிய படத்தில் இணைகிறார். நானி 33 என தற்காலிக தலைப்புடன் துவங்கப்பட்டு இருக்கும் இந்த படத்தை ஸ்ரீ லக்ஷ்மி வெங்கடேஸ்வரா சினிமாஸ் (எஸ்.எல்.வி. சினிமாஸ்) சார்பில் சுதாகர் செருக்குரி தயாரிக்கிறார்.
தசரா படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான ஸ்ரீகாந்த் ஒடேலா, முதல் படத்திலேயே அதிக வசூலை குவித்து நல்ல வரவேற்பை பெற்றார். தனது முதல் படத்திலேயே நானியை இதுவரை யாரும் பார்த்திராத அளவுக்கு வித்தியாசமாக வெளிப்படுத்தி இருந்தார்.
புதிய படம் தொடர்பாக வெளியிடப்பட்ட போஸ்டரில் ரத்தம் தெறிக்க சிவப்பு நிறம் கொண்டிருக்கிறது. இதன் பின்னணியில் நானியின் முகம் மாசாக காட்சியளிக்கிறது. இத்துடன் அவர் சிகரெட் பிடிக்கும் காட்சியும் இடம்பெற்றுள்ளது. இது தொடர்பான போஸ்டரில், தலைவராக இருக்க அடையாளம் தேவையில்லை என்ற வாசகம் இடம்பெற்று இருக்கிறது.
முதல் போஸ்டரில் இருந்தே அடுத்த படம் ரத்தம் தெறிக்கும் வகையில் ஆக்ஷன் கதைக்களம் கொண்டிருக்கும் என்பதை படக்குழு தெரியப்படுத்தி இருக்கிறது. ஸ்ரீகாந்த் தனது அடுத்த படத்திலும் நானியை சக்திவாய்ந்த கதாபாத்திரத்தில் காட்சிப்படுத்துவார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இந்த படத்தை பெரும் பொருட்செலவில் எடுக்க தயாரிப்பாளர் சுதாகர் செருக்குரி முடிவு செய்திருக்கிறார். குறிப்பிட்ட ஜானரில் படமெடுக்காமல், வித்தியாசமான கதைகளை தேர்வு செய்வதில் கவனம் செலுத்துகிறார். அந்த வகையில், இவர் ஸ்ரீகாந்த் ஒடேலாவுடன் மீண்டும் இணைய இருக்கிறார்.
இன்னும் பெயரிடப்படாத இந்த படம் அடுத்த ஆண்டு கோடை காலத்தில் வெளியாகும் என்று படக்குழு அறிவித்து இருக்கிறது.
நேபாளத்தில் போராட்டக்காரர்கள் மீது போலீசார் துப்பாக்கிச்சூடு: 14 பேர் பலி
11 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு!
கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் விரிசலா.. மாவட்ட கலெக்டர் அழகு மீனாவின் விளக்கம் இதுதான்!
இலங்கை தமிழ் அகதிகளுக்கு நீண்டகால விசாவும், குடியுரிமையும் வழங்கும் சட்ட திருத்தமும் தேவை: அன்புமணி
தாய்!!!
மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயர்.. 2 தலித் கட்சிகள் எதிர்ப்பு
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்
தலைமை சொல்வதை கேட்பதே எனது பொறுப்பு: தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்!
ரஷ்யா மீது 2வது கட்ட பொருளாதார தடை விதிக்கப் போறேன்.. டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு
{{comments.comment}}