சென்னை: பூலோக அதிசயங்களில் ஒன்றுதான் நம்ம பிரேம்ஜி அமரன்.. அவர் செய்யாத ரொமான்ஸ் இல்லை.. பண்ணாத ஜாலி இல்லை.. ஆனால் கல்யாணம் மட்டும் பண்ணவே மாட்டேங்குறார்.. கேட்டால், நானா மாட்டேன்னு சொல்றேன்.. பொண்ணு அமையணும் பாஸ் என்று நழுவி ஓடி விடுகிறார்.
ஆனால் இன்று திடீரென ஒரு டிவீட் போட்டுள்ளார். அதில், "அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்.. இந்த வருஷம் நான் கல்யாணம் பண்ணப் போறேன்.. டாட்" என்று போட்டு விட்டுப் போயுள்ளார்.
இது சும்மானாச்சுக்கும் போட்ட டிவீட்டா, இல்லை சீரியஸாகவே போட்ட டிவீட்டா என்று தெரியவில்லை. ஆனால் இந்த டிவீட்டை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். வா தல வா தல.. இப்பவாச்சும் ஆகப் போகுதே என்று பலர் ஜாலியாக கலாய்த்துள்ளனர். இன்னும் சிலரோ, சார் கல்யாணம் பண்ணிக்காதீங்க.. அப்பத்தான் ஜாலியா இருக்க முடியும் என்று வார்னிங் கொடுத்துள்ளனர்.
சிலரது கல்யாணங்கள் பல காலமாக பேசப்படும்.. ஆனால் பிரேம்ஜியைப் பொறுத்தவரை ஏன் கல்யாணம் ஆகலை என்பதுதான் அதீதமாக பேசப்பட்டு வருகிறது. கல்யாணம்தான் ஆகலையே தவிர பிரேம்ஜியின் ஜாலி, சந்தோஷம் ஒரு அவுன்ஸ் கூட குறைந்ததில்லை. நண்பர்கள் புடை சூழ சூப்பர் ஜாலியாக இருக்கக் கூடியவர் பிரேம்ஜி.
மனதில் எதையும் வைத்துக் கொள்ள மாட்டார். பொட்டென்று போட்டு உடைத்து விட்டு போய் விடுவார். குறிப்பாக இவருக்கு ஹேட்டர்ஸே இல்லை என்பது மிகப் பெரிய விஷயம்.. அந்த அளவுக்கு ஜாலியான நட்பான மனிதர்தான் பிரேம்ஜி.
புது வருஷத்தன்று சொன்ன வார்த்தையில் பொய் இருக்க வாய்ப்பில்லை. எனவே சீரியஸாகவே பிரேம்ஜி அமரனுக்கு கல்யாணம் நடக்கப் போவதாகவே பலரும் நம்புகின்றனர்.. ஆச்சுன்னா சந்தோஷம்தான்..!
11 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு!
கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் விரிசலா.. மாவட்ட கலெக்டர் அழகு மீனாவின் விளக்கம் இதுதான்!
இலங்கை தமிழ் அகதிகளுக்கு நீண்டகால விசாவும், குடியுரிமையும் வழங்கும் சட்ட திருத்தமும் தேவை: அன்புமணி
மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயர்.. 2 தலித் கட்சிகள் எதிர்ப்பு
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்
தலைமை சொல்வதை கேட்பதே எனது பொறுப்பு: தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்!
ரஷ்யா மீது 2வது கட்ட பொருளாதார தடை விதிக்கப் போறேன்.. டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு
கண்மணியே உன் கா(த)ல் தடம் தேடி..1 (கவிதைத் தொடர்)
ஆசிய கோப்பை ஹாக்கி 2025.. 8 வருடங்களுக்குப் பிறகு கோப்பையை வென்று இந்தியா அசத்தல்
{{comments.comment}}