சென்னை: வெளிநாட்டு பயணம் முதல் படப்பிடிப்பு தளம் வரை ஒரே பரபரப்பாக ரெஸ்ட்டே இல்லாமல் உழைத்து கொண்டு இருக்கிறாராம் நடிகர் விஷால். எப்படிப்பா இவரால் மட்டும் இப்படியெல்லாம் முடியுது என்று பலரும் ஆச்சரியப்படுகிறார்கள்.
விஷால் இயக்குநர் ஹரி இயக்கத்தில் ரத்தினம் என்ற படத்தில் நடித்து வருகிறார். பூஜை படத்துக்குப் பிறகு இருவரும் இணைந்துள்ளனர். சமீபத்தில் நடிகர் விஷால் வெளிநாட்டில் இருந்து இந்தியா வந்தார். அப்போது மறைந்த கேப்டன் விஜயகாந்த் நினைவு இடத்திற்கு சென்று மரியாதை செலுத்தினா. இதனை தொடர்ந்து அவர் இல்லத்திற்கு சென்று அவரின் குடும்பத்தாருக்கும் ஆறுதல் கூறி இருந்தார்.
விஜயகாந்த் இல்லத்தில் இருந்து ஆறுதல் கூறி விட்டு அன்று மாலையே இயக்குனர் ஹரி இயக்கத்தில் ரத்தினம் படப்பிடிப்பிற்காக திருப்பதி சென்றார். மூன்று நாட்கள் படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டு இருந்தனர் . ஆனால் கேப்பே விடாமல் நடித்தத விஷால், மூன்று நாட்களில் நடக்க வேண்டிய படப்பிடிப்பை இரண்டே நாட்களில் முடித்துவிட்டு தயாரிப்பாளர்களுக்கு 30 லட்சம் ரூபாயை சேமித்துக் கொடுத்து விட்டாராம்.

படப்பிடிப்பு தளத்தில் விஷாலின் ஒத்துழைப்பும், ஓய்வே இல்லாமல் பணியாற்றிய அவருடைய செயல்பாடும் அனைவரின் பாராட்டுகளையும் பெற்றுள்ளது.
விஷால் நடித்த தாமிரபரணி, பூஜை படங்களை தொடர்ந்து ரத்தினம் படத்தில் விஷால் மற்றும் இயக்குனர் ஹரி ஹாட்ரிக் கூட்டணி அமைத்துள்ளனர். ஜி ஸ்டுடியோஸ் சவுத் மற்றும் ஸ்டோன் பெஞ்ச் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் ரத்தினம் படம் விஷாலின் 34 ஆவது படம். இப்படத்தில் சுகுமார் ஒளிப்பதிவு செய்ய, தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். இதில் விஷாலுடன் பிரியா பவானி சங்கர், ராமச்சந்திர ராஜு, கௌதம் மேனன், யோகி பாபு மற்றும் பலர் நடித்துள்ளனர். இப்படம் அதிரடி திரில்லர் படமாக அமைந்துள்ளது.
ரத்தினம் படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வரும் நிலையில், இன்னும் சில நாட்களில் படப்பிடிப்பு நிறைவு பெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இடஒதுக்கீடு என்பது மக்களுக்கு சேர வேண்டிய சொத்தை பிரித்துக் கொடுப்பது: ராமதாஸ்
திமுக அரசில், ஊழலும், மோசடியும் நடைபெறாத துறையே இல்லை என்பது உறுதி: அண்ணாமலை
டிசம்பர் 18ல் ஈரோட்டில் விஜய் பிரச்சாரத்திற்கு எந்தத் தடையும் இல்லை: செங்கோட்டையன் பேட்டி
டிசம்பர் 15ம் தேதி சென்னை வருகிறார் மத்திய அமைச்சர் அமித்ஷா
குடிமகன்களே அலர்ட் இருங்கப்பா..குடிச்சிட்டு வந்து மனைவிய அடிச்சா மட்டுமில்ல திட்டினாலே..இனி களி தான்
காற்றுள்ள போதே தூற்றிக்கொள்.. பழமொழியும் உண்மை பொருளும்!
தாழ்த்த நினைத்த தீமைகள்.. தடமாய் இருந்து உயர்த்தும்!
இளமையே....எதைக் கொண்டு அளவிடலாம் உன்னை?
வைக்கதஷ்டமி திருவிழா.. வைக்கம் மகாதேவர் கோவில் சிறப்புகள்.. இன்னும் தெரிஞ்சுக்கலாம் வாங்க!
{{comments.comment}}