சென்னை: நடிகை இனியா ஒரே நாளில் இரண்டு கொண்டாட்டங்களை சந்தித்து இனிய மகிழ்ச்சியை அனுபவித்துள்ளார் நடிகை இனியா.
ஒரே நாளில் பிறந்தநாள் மற்றும் முதலாவது ஒர்க் ஆனிவர்சரி கொண்டாடுவதெல்லாம் எல்லோருக்கும் வாய்க்காது. அந்த வகையில் தனக்குக் கிடைத்த இந்த சந்தோஷத்தை சிறப்பாக கொண்டாடியுள்ளார் நடிகை இனியா.
தமிழ் மற்றும் மலையாள திரையுலகில் வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களில் நடித்து புகழ் பெற்றவர் நடிகை இனியா. கதையோடு ஒன்றி கதாபாத்திரமாக மாறி அசத்தலான நடிப்பாற்றல் மூலம் அதிக ரசிகர்களை கொண்டிருக்கும் இனியா திரையுலகம் மட்டுமின்றி பல்வேறு துறைகளில் கவனம் செலுத்தி வருகிறார்.
அந்த வகையில் இனியா கடந்த ஆண்டு துவங்கிய ஆடை வடிவமைப்பு நிறுவனம் தான் அனோரா ஆர்ட் ஸ்டூடியோ. பெண்களுக்கான ஆடைகள், உடை வடிவமைப்பு, மேக்கப் மற்றும் புகைப்படங்கள் எடுப்பதற்கான அரங்கம் என எல்லா வசதிகளும் ஒரே இடத்தில் வழங்குவதில் அனோரா சிறந்து விளங்குகிறது.
நடிகை இனியாவின் அனோரா ஆர்ட் ஸ்டூடியோ தனது முதலாவது ஆண்டு விழாவை சிறப்பாக கொண்டாடியது. இந்த கொண்டாட்டம் அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தும் வகையில் சிறப்பான சந்திப்பாக அமைந்தது.
இனியா கொண்டாடிய இந்த இரட்டை விழாவில் திரை பிரபலங்கள், திரைத்துறையை சேர்ந்தவர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு நடிகை இனியா மற்றும் அவரது அனோரா ஆர்ட் ஸ்டூடியோவுக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
பிறந்த நாள் வாழ்த்தும், அனோரா ஸ்டூடியோவுக்கும் சேர்த்து வாழ்த்துகள் குவிந்ததால், சிறப்பு விருந்தினர்கள் வாழ்த்து மழையில் நனைந்த இனியா தனது பிறந்த நாளை இரட்டிப்பு தித்திப்புடன் சிறப்பாக கொண்டாடி மகிழ்ந்தார்.
காப்புரிமை விவகாரம்: இளையராஜா மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்
திமுக அரசு குற்றம் நடைபெறாமல் தடுப்பதில்லை, குற்றவாளிகளை உடனடியாகக் கைது செய்வதுமில்லை: அண்ணாமலை
எந்த மாற்றமும் இன்றி இருந்து வரும் தங்கம் வெள்ளி விலை... இதோ இன்றைய விலை நிலவரம்!
BCCI.. மாத்துறோம்.. மொத்தமா மாத்துறோம்.. இங்கிலாந்து தொடருக்குப் பிறகு.. பிசிசிஐ முடிவு!
Aadi Pooram: ஆண்டாளையும், அம்பாளையும் வழிபாடு செய்ய உகந்த நாள்.. ஆடிப்பூரம்!
திருஞான சம்பந்தருக்காக.. நந்தியே விலகி நின்ற.. பட்டீஸ்வரம் தேனுபுரீஸ்வரர் திருக்கோவில்!
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் ஜூலை 28, 2025... இன்று ராஜயோகம் தேடி வரும் ராசிகள்
பஹல்காம் ரத்தம் இன்னும் காயவில்லை.. அதற்குள் பாகிஸ்தானுடன் விளையாட்டா?.. பிசிசிஐக்கு எதிர்ப்பு!
முதல்வரின் கோரிக்கை மனு... தமிழ்நாடு வரும் பிரதமர் மோடியிடம் வழங்கப் போவது யார் தெரியுமா?
{{comments.comment}}