சென்னை: கல்லூரி மாணவர்களிடையே போதைப்பொருள் பழக்கம் சர்வசாதாரணமாக புழங்குகிறது என எதிர்க்கட்சித் தலைவரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிச்சாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே போதைப்பொருள் விற்பனை, போதைப்பொருள் கடத்தல், பயன்படுத்துதல், என பல்வேறு குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பலரும் இந்த பழக்கத்திற்கு அடிமையாகி வருகின்றனர். இதனை தடுக்க அரசு சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இருப்பினும் இது போன்ற குற்றங்கள் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கின்றன. இதனால் அரசு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், பள்ளிகளிலும் போதைப் பொருட்கள் நிறைய புழக்கம் ஏற்படுவதாகவும் தொடர்ந்து புகார்கள் எழுந்து வந்தது. இது தவிர போதைப்பொருள் புழக்கம் குறித்து பல்வேறு அரசியல் கட்சியைச் சார்ந்தவர்களும் கடும் விமர்சனங்களை முன்வைத்து வந்தனர்.
இதன் அடிப்படையில் தமிழ்நாடு முழுவதும் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த தேடுதல் வேட்டையில் முக்கியமான கல்லூரியான எஸ்ஆர்எம் பொறியியல் கல்லூரி வளாகத்தில் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் பெருமளவில் புழக்கம் ஏற்பட்டு வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து 30க்கும் மேற்பட்ட மாணவர்களிடம் போலீசார் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இது தவிர கல்லூரி வளாகத்தில் இருந்து போதை மாத்திரைகள், கஞ்சாவுக்கு பயன்படுத்தி கூடிய போதை வஸ்துகள் உள்ளிட்ட பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் கல்லூரி மாணவர்களிடையே போதைப்பொருள் புழக்கத்திற்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், கல்லூரி மாணவர்கள் இடையே போதைப்பொருள் சர்வசாதாரணமாக புழங்குகிறது. போதைப் பொருள் புழக்கமும் குறைந்தபாடில்லை. அதேபோல் கொலை பட்டியல்கள் தொடர்கின்றன.
வெளிநாட்டு போட்டோ சூட்டுகளிலும், பகட்டு கார் ரேஸிலும் கவனம் செலுத்தும் அரசு போதைப்பொருள் புழக்கத்தை ஒழிப்பதில் கவனம் செலுத்த வேண்டும். சட்டம் ஒழுங்கு, சீர்கேடு போதைப்பொருள் புழக்கமே திமுக அரசின் உண்மை அடையாளமாக உள்ளது. எனவே சட்டம் ஒழுங்கை சீர்படுத்துவதிலும் போதைப் பொருளை ஒழிப்பதிலும் முதல்வர் மு க ஸ்டாலின் கவனம் செலுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!
கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!
இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?
உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?
விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி
கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்
Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்
ருத்ர தாண்டவம் (சிறுகதை)
உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!
{{comments.comment}}