சென்னை: லோக்சபா தேர்தலுக்கான 16 வேட்பாளர்கள் கொண்ட முதல் பட்டியலை இன்று அறிவித்தார் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி.
தமிழ்நாட்டில் லோக்சபா தேர்தல் வரும் 19ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்க உள்ள நிலையில், விறுவிறுப்பான தேர்தல் வேட்பாளர்கள் பட்டியல்கள் வெளியாக ஆரம்பித்துள்ளது.
இன்று அதிமுக கூட்டணி தெளிவாகி விட்டது. தேமுதிகவுக்கு 5 தொகுதிகளும், புதிய தமிழகம் மற்றும் எஸ்டிபிக்கு தலா ஒரு தொகுதியும் ஒதுக்கீடு செய்துள்ளதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார். மேலும் 16 வேட்பாளர்கள் கொண்ட முதல் பட்டியலையும் அவர் வெளியிட்டார்.
வடசென்னை - ராயபுரம் மனோ , தென் சென்னை- ஜெயவர்தன், காஞ்சிபுரம் (தனி) - ராஜசேகர், அரக்கோணம் - விஜயன், கிருஷ்ணகிரி - ஜெயபிரகாஷ், விழுப்புரம் (தனி) - பாக்யராஜ், சேலம்- விக்னேஷ், நாமக்கல் -தமிழ்மணி, ஈரோடு - ஆற்றல் அசோக், கரூர் -கே.ஆர்.என்.தங்கவேல், சிதம்பரம் (தனி) - சந்திரகாசன், மதுரை - டாக்டர் சரவணன் தேனி- நாராயணசாமி, ஆரணி - ஜி.வி.கஜேந்திரன், நாகப்பட்டனம் (தனி) - டாக்டர் கர்சித் சங்கர், ராமநாதபுரம் - ஜெயபெருமாள்
India Vs Pakistan: இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே முழு அளவிலான போர் மூண்டால் என்னாகும்?
ஸ்டெர்லைட்டுக்கு ஒரு நீதி என்.எல்.சிக்கு ஒரு நீதியா? உடனடியாக ஆலையை மூட வேண்டும்: டாக்டர் அன்புமணி
கல்வி தான் நமக்கான ஆயுதம்...கல்வியை மட்டும் விட்டுவிடவே கூடாது: முதல்வர் மு.க.ஸ்டாலின்!
நடுநிலையான விசாரணைக்கு பாகிஸ்தான் தயாராக உள்ளது: பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அறிவிப்பு!
வலுக்கட்டாயமாக கடன் வசூலித்தால் 3ஆண்டு வரை சிறை.. சட்டசபையில் புதிய மசோதா தாக்கல்..!
மக்களின் வாழ்வாதாரமாக இருக்கும்.. சிந்து நதியை தடுத்து நிறுத்தும் முடிவை மாற்றுங்கள்.. சீமான்
வீடு கட்டும் ஜல்லி, எம் சாண்ட் விலை உயர்வால் கட்டுமான செலவு 30% அதிகரிப்பு!
கோவை வந்த விஜய்க்கு பிரம்மாண்ட வரவேற்பு... தொண்டர்களின் ஆரவாரத்தால் ஸ்தம்பித்தது கோவை!
ஆம்... மகளிருக்கு உரிமை வேண்டும்..!!
{{comments.comment}}