தங்கம் விலை.. நேத்து ஏறுச்சு.. இன்னிக்கு இறங்கிருச்சே!

Oct 06, 2023,01:12 PM IST

சென்னை: தங்கத்தின் விலை நிலையற்ற நிலையிலேயே உள்ளது. அக்டோபர் 4ம் தேதி குறைந்திருந்த தங்கம்  அக்டோபர் 5ம் தேதி சற்று அதிகரித்து இருந்தது. ஆனால் இன்று மீண்டும் குறையத் தொடங்கியுள்ளது.


தங்கத்தின் விலை ஏற்ற இறக்க நிலையில்உள்ளதால்  தங்கத்தில் முதலீடு செய்பவர்கள் சற்று தயக்கம் காண்பித்து வருகின்றனர். கடந்த சில நாட்களாகவே தங்கத்தின் விலையில் மாற்றங்கள் வந்தபடி உள்ளது.




தொடர்ந்து இறங்கி வந்த தங்கத்தின் விலை நேற்று விலை உயர்ந்து காணப்பட்டது. இதனால் மீண்டும் தங்கம் விலை உயருமோ என்று பொதுமக்கள் குழப்பத்தில் ஆழ்ந்தனர். ஆனால் இன்று மீண்டும் தங்கம் விலை குறைந்துள்ளது.


தங்கத்தின் இன்றைய விலை நிலவரம் , இன்று (06-10-23) தங்கம் விலை 1 கிராம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை 5285 ரூபாயாகும். இது நேற்றைய விலையில் இருந்து 10 ரூபாய் குறைந்துள்ளது. 8 கிராம் ஆபரண தங்கத்தின் விலை 42280 ரூபாயாக உள்ளது.  1 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 5765 ரூபாயாக உள்ளது. இது நேற்றைய விலையில் இருந்து11 ரூபாய் குறைவாகும். 


தங்கம் விலை தான்  இப்படி என்றால், வெள்ளியின் விலையும் குறைந்தே உள்ளது. இன்றைய வெள்ளி 1 கிராம் விலை 70.60 ரூபாயாகும்.  இது நேற்றைய விலையை விட 50 காசுகள் குறைந்துள்ளது. 8 கிராம் வெள்ளியின் விலை 564.80 ரூபாயாக உள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

இடஒதுக்கீடு என்பது மக்களுக்கு சேர வேண்டிய சொத்தை பிரித்துக் கொடுப்பது: ராமதாஸ்

news

திமுக அரசில், ஊழலும், மோசடியும் நடைபெறாத துறையே இல்லை என்பது உறுதி: அண்ணாமலை

news

டிசம்பர் 18ல் ஈரோட்டில் விஜய் பிரச்சாரத்திற்கு எந்தத் தடையும் இல்லை: செங்கோட்டையன் பேட்டி

news

டிசம்பர் 15ம் தேதி சென்னை வருகிறார் மத்திய அமைச்சர் அமித்ஷா

news

குடிமகன்களே அலர்ட் இருங்கப்பா..குடிச்சிட்டு வந்து மனைவிய அடிச்சா மட்டுமில்ல திட்டினாலே..இனி களி தான்

news

காற்றுள்ள போதே தூற்றிக்கொள்.. பழமொழியும் உண்மை பொருளும்!

news

தாழ்த்த நினைத்த தீமைகள்.. தடமாய் இருந்து உயர்த்தும்!

news

இளமையே....எதைக் கொண்டு அளவிடலாம் உன்னை?

news

வைக்கதஷ்டமி திருவிழா.. வைக்கம் மகாதேவர் கோவில் சிறப்புகள்.. இன்னும் தெரிஞ்சுக்கலாம் வாங்க!

அதிகம் பார்க்கும் செய்திகள்