சென்னை: பிப்., 21ம் தேதி முதல் அதிமுக சார்பில் மக்களவைத் தேர்தலில் போட்டியிட விரும்புவர்களுக்கான விண்ணப்பங்கள் விநியோகிக்கப்படும் என்று கட்சி பொதுச் செயலாளர் எடப்பாடி கே பழனிச்சாமி அறிவித்துள்ளார்.
நாடு முழுவதும் மக்களவை தேர்தலுக்கான் ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. விரைவில் தேர்தல் தேதி குறித்து அறிவிப்பு வர உள்ள நிலையில், முக்கிய கட்சிகள் கூட்டணி குறித்த பேச்சு வார்த்தை நடித்தி வருகின்றன. இதன் தொடர்ச்சியாக மக்களவை தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட விருப்பமுள்ளவர்கள் வருகின்ற 21ம் தேதி மனு தாக்கல் செய்யலாம் என அறிவிப்பு வெளியாகியுள்ளன.இது தொடர்பாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழச்சாமி அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதில் கூறப்பட்டுள்ளதாவது:
நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தல் நடைபெற உள்ளதை முன்னிட்டு, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட 40 நாடாளுமன்ற மக்களவைத் தொகுதிகளில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வேட்பாளர்களாகப் போட்டியிட விரும்புகின்ற கழக உடன்பிறப்புகள், தலைமைக் கழகத்தில் வருகின்ற 21.2.2024 புதன் கிழமை முதல் 1.3.2024 - வெள்ளிக் கிழமை வரை, தினமும் காலை 10 மணி முதல் மாலை 5 மணிவரை, உரிய கட்டணத் தொகையைச் செலுத்தி அதற்கான விண்ணப்பப் படிவங்களைப் பெற்று, அதில் கேட்கப்பட்டுள்ள அனைத்து விபரங்களையும் தெளிவாகப் பூர்த்தி செய்து மீண்டும் தலைமைக் கழகத்தில் வழங்கலாம் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.
பொது தொகுதியாக இருந்தால் 20,000மும் மற்றும் தனி தொகுதிக்கு ரூ.15,000 கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இதே போல், திமுக வேட்பாளர்கள் தேர்வுக்கான விருப்ப மனு படிவங்கள் இன்று முதல் அண்ணா அறிவாலயத்தில் வழங்கப்படுகிறது.
எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!
கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!
இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?
உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?
விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி
கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்
Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்
ருத்ர தாண்டவம் (சிறுகதை)
உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!
{{comments.comment}}