மும்பை : நடிகை ஐஸ்வர்யா ராய், தனது கணவர் அபிஷேக் பச்சனை விவாகரத்து செய்ய உள்ளதாக வெளியான வதந்திகளுக்கு தனது செயலாலேயே பதிலளித்து, மீடியாக்களின் வாயை அடைத்துள்ளார் ஐஸ்வர்யா ராய்.
உலக அழகி பட்டம் வாங்கிய பிறகு சினிமாவிற்கு வந்த சிறிது காலத்திலேயே ஐஸ்வர்யா ராய் காதல், ஐஸ்வர்யா ராய் திருமணம் என பல வதந்திகள் வெளி வந்து கொண்டிருந்தன. ஐஸ்வர்யா பற்றி வதந்திகள் வருவது ஒன்றும் புதிய விஷயம் அல்ல. பல வதந்திகளுக்கு மத்தியில் அமிதாப் பச்சனின் மகன் அபிஷேக் பச்சனை 2007 ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார் ஐஸ்வர்யா ராய். இது தனிப்பட்ட ஒரு நிகழ்ச்சியாகவே நடத்தப்பட்டது. அதற்கு பிறகு இவர்களுக்கு 2011 ம் ஆண்டு ஆரத்யா என்ற மகள் பிறந்தாள். அதற்கு பிறகு ஐஸ்வர்யா ராய் பற்றிய வதந்திகள் குறைந்தாலும், அவரை பற்றிய ஏதாவது ஒரு செய்தி வெளி வந்த வண்ணம் இருந்தது.
ஐஸ்வர்யா ராய் கடைசியாக மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் 2 படத்தில் நடித்தார். இந்த படத்தில் அவர் நடித்துக் கொண்டிருந்த போதும் பல ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் கர்ப்பமாக உள்ளதாக மீண்டும் வதந்தி கிளம்பியது. அதற்கு பிறகு சிறித நாட்களில் அது ஓய்ந்தது. இந்நிலையில் கடந்த நாட்களாக ஐஸ்வர்யா ராய், தனது கணவர் அபிஷேக் பச்சனை பிரிய போவதாகவும், அவர்கள் விவாகரத்து செய்ய முடிவு செய்திருப்பதாக மீடியாக்களில் வதந்தி பரவியது. இதனால் பாலிவுட்டே ஆடிப்போனது.
ஒட்டு மொத்த பாலிவுட்டையே அதிர வைத்த இந்த தகவல் குறித்து ஐஸ்வர்யா ராய் மற்றும் அவரது குடும்பத்தின் தரப்பில் எந்த ரியாக்ஷனும் காட்டவில்லை. அதனால் இது உண்மை தான் என்று கூட சிலர் கூறி வந்தனர். இந்நிலையில், நேற்று தனது மகள் படிக்கும் திரிபாய் அம்பானி இன்டர்நேஷனல் பள்ளியில் நடந்த ஆண்டு விழா நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக ஐஸ்வர்யா ராயும், அவரது கணவர் அபிஷேக் பச்சனும் ஒன்றாக ஒரே காரில் வந்து இறங்கினர். இந்த விழாவில் அவர்கள் மட்டுமல்ல அமிதாப் பச்சன், ஜெயா பச்சன் என ஒட்டுமொத்த குடும்பமே சந்தோஷமாக கலந்து கொண்டு மகள் ஆரத்யா பங்கேற்ற மேடை நிகழ்ச்சியை ரசித்தனர்.
விவாகரத்து என பரவிய வதந்திக்கு ஒரே காரில் தனது கணவர் மற்றும் குடும்பத்துடன் வந்து முற்றுப்புள்ளி வைத்து விட்டார் ஐஸ்வர்யா ராய். இந்த போட்டோக்கள் சோஷியல் மீடியாவில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது. இதை பார்த்த ஐஸ்வர்யாவின் தீவிர ரசிகர்கள் பலர், நன்றி கடவுளே வதந்திகள் எதுவும் நிஜமாகவில்லை என சந்தோஷமாக கமெண்ட் செய்து வருகின்றனர்.
திருஞான சம்பந்தருக்காக.. நந்தியே விலகி நின்ற.. பட்டீஸ்வரம் தேனுபுரீஸ்வரர் திருக்கோவில்!
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் ஜூலை 28, 2025... இன்று ராஜயோகம் தேடி வரும் ராசிகள்
பஹல்காம் ரத்தம் இன்னும் காயவில்லை.. அதற்குள் பாகிஸ்தானுடன் விளையாட்டா?.. பிசிசிஐக்கு எதிர்ப்பு!
முதல்வரின் கோரிக்கை மனு... தமிழ்நாடு வரும் பிரதமர் மோடியிடம் வழங்கப் போவது யார் தெரியுமா?
தமிழ்நாட்டுக்கு வரும் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்திக்க எடப்பாடி பழனிச்சாமி திட்டம்!
நான் வெற்றி பெற்றவன்.. இமயம் தொட்டு விட்டவன்.. பகையை முட்டி விட்டவன்.. கமலுக்கு வைரமுத்து வாழ்த்து!
திமுக ஆட்சியின் போலீசுக்கே பாதுகாப்பு இல்லை... சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது: எடப்பாடி பழனிச்சாமி
கோவை, நீலகிரிக்கு இன்று ஆரஞ்ச் அலர்ட் - வானிலை ஆய்வு மையம் தகவல்!
வைகோவால் மனஉளைச்சல்.. ஆகஸ்ட் 2ம் தேதி உண்ணாவிரதம்.. அறிவித்தார் மல்லை சத்யா
{{comments.comment}}