அதிர்ஷ்டம் தரும் அட்சய திருதியை 2024 : தங்கத்திற்கு பதில் என்ன பொருள் வாங்கினால் செல்வம் பெருகும்?

May 10, 2024,08:41 AM IST

சென்னை : அதிர்ஷ்டம், புண்ணியம், லட்சுமி கடாட்சம் ஆகிய அனைத்தையும் குறைவின்றி அள்ளி தரக் கூடிய மிக முக்கியமான நாள் அட்சய திருதியை திருநாளாகும். வருடந்தோறும் சித்திரை மாதம் வளர்பிறையில், அமாவாசைக்கு பிறகு வரும் மூன்றாவது திதியை அட்சய திருதியை நாளாக நாம் கொண்டாடுகிறோம். இந்த நாளில் எதை செய்தாலும் அதன் பலன் பெருகிக் கொண்டே போகும் என்பது ஐதீகம். அட்சய என்ற வடமொழி சொல்லுக்கு குறைவின்றி பெருகுதல் என்று பொருள். அள்ள அள்ள குறையாமல் பெருகிக் கொண்டே இருக்கும் தினம் என்பதால் எந்த நாளில் தங்கம் வாங்குவது அதிர்ஷ்டம் என கருதப்படுகிறது.


ஆன்மிக ரீதியாக பல வகைகளிலும் சிறப்பு வாய்ந்தது தான் இந்த அட்சய திருதியை தினம். திரேதா யுகம் தோன்றியது, உணவுகளின் தெய்வமான அன்னபூரணி அவதரித்தது, மகாவிஷ்ணுவின் 6வது அவதாரமான பரசுராமர் அவதாரம் எடுத்தது, சிவ பெருமானை வேண்டி குபேரர் செல்வத்திற்கும் வட திசைக்கும் அதிபதியானது, குசேலருக்கு கிருஷ்ணன் செல்வ வளத்தை கொடுத்தது, மகாபாரதத்தில் பாண்டவர்களின் பசியை போக்க கிருஷ்ணர் அட்சய பாத்திரத்தை அளித்தது, பிட்சாடனராக வந்த சிவ பெருமானுக்கு அன்னபூரணி தேவி உணவளித்தது, பகீரதனின் தவத்தால் கங்கை நதி பூமிக்கு வந்தது, ஆதிசங்கரர் மகாலட்சுமியை வேண்டி கனகதாரா ஸ்தோத்திரம் பாடி தங்க நெல்லிக்கனியை மழையாக பெற்றது, வியாசர் மகாபாரதத்தை எழுத துவங்கியது உள்ளிட்ட பல சிறப்புகளை பெற்ற நாள் இந்த அட்சய திருதியை திருநாளாகும்.




அட்சய திருதியை அன்று புதிய வியாபாரம், தொழில் துவங்குவதல், தங்கம்-வெள்ளி போன்ற பொருட்கள் வாங்குதல், புதிய முதலீடுகள் செய்தல், வீடு, வாகனம் போன்ற புதிய சொத்துக்கள் வாங்குவது, புது வீடு குடிபோவது, திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் செய்வது உள்ளிட்டவற்றை செய்வது மகிழ்ச்சியையும், வெற்றியையும் தரும். அட்சய திருதி நாள் முழுவதும் மங்கலகரமான, புண்ணிய நாள் என்பதால் இந்த நாளில் எந்த நல்ல காரியம் செய்வதற்கும் நல்ல நேரம் என்பதே பார்க்க வேண்டியதில்லை என்பார்கள். 


இப்படிப்பட்ட அட்சய திருதியை நன்னாள் இந்த ஆண்டு மே 10ம் தேதி வெள்ளிக்கிழமையில் அமைந்துள்ளது. அதுவும் ரோகிணி நட்சத்திரத்துடன் இணைந்த வருவதும், நாள் முழுவதும் திருதியை திதி இருப்பதும் கூடுதல் சிறப்பானதாகும். மே 10ம் தேதி காலை 06.33 மணி துவங்கி, மே 11ம் தேதி காலை 04.57 வரை திருதியை திதி உள்ளது. இந்த நாளில் தங்கம், வெள்ளி போன்ற ஆபரணங்கள் வாங்குவது சிறப்பானது.


தங்கம் குரு பகவானுக்கும், வெள்ளி சுக்கிரனுக்கும் உரியது என்பதால் இவர்களின் அருளை குறைவில்லாமல் பெருவதற்கு இந்த பொருட்களை வாங்குவதை பலரும் வழக்கமாக வைத்துள்ளனர்.


அட்சய திருதியையில் இது தவிர, காலை 9 மணி முதல் முதல் 10 மணி வரை, பகல் 1 மணி முதல் 01.30 மணி வரை, மாலை 6 மணி முதல் 9 மணி வரையிலான நல்ல நேரத்தில் மகாலட்சுமியை வழிபடலாம். அன்றைய தினம் மகாலட்சுமிக்கு வெள்ளை நிறம் பூக்கள் அல்லது செந்தாமரை பூ சூட்டி வழிபடலாம். சுக்கிர ஓரை மற்றும் நல்ல நேரத்தில் பூஜை செய்வதும், மங்கல பொருட்கள் வாங்குவது மிகவும் விசேஷமானதாகும். அட்சய திருதியை அன்று சுக்கிர ஓரை, காலை 6 மணி முதல் 7 மணி வரை உள்ளது. ஆனால் திருதியை திதி 06.33 மணிக்கு தான் துவங்குகிறது என்பதால் 06.30 மணிக்கு மேல் 7 மணிக்குள் அட்சய திருதியை வழிபாட்டினை செய்யலாம். 


ஆனால் இன்றைய தங்கம் விற்கும் விலைக்கும் அனைவராலும் தங்கம் வாங்க முடியாது. அப்படி தங்கம் வாங்க முடியாதவர்கள் இந்த நாளில் மகாலட்சுமியின் அருளை பெறுவதற்கு பச்சரிசி, கல் உப்பு, மஞ்சள், பருப்பு போன்ற வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கலாம். மல்லிகைப்பூ வாங்கி மகாலட்சுமிக்கு சூட்டலாம். குத்து விளக்கு, காமாட்சி விளக்கு போன்றவற்றை வாங்குபவர்கள் இந்த நாளில் வாங்கலாம். மகாலட்சிக்கு பால் பாயசம், அவல் பாயசம் ஆகியவற்றை செய்து படைக்கலாம். ஒரு குடத்தில் தண்ணீர் நிரப்பு அதில் சிறிது மஞ்சள், பூ, இரண்ட நாணயங்கள் போட்டு பூஜை அறையில் வைத்து இதே போல் குடம் குடமாக வீட்டில் செல்வம் பெருக வேண்டும் என வேண்டிக் கொள்ளலாம். இதனால் மகாலட்சியின் அருளால் அள்ள அள்ள குறையாத செல்வம், பணம் சேர்ந்து கொண்டே இருக்கும். 


பணம் சேமிக்க துவங்குபவர்கள் அட்சய திருதியை நாளில் உண்டியல் வாங்கி வைத்து, பணம் சேர்க்க துவங்கலாம். விரதம் துவங்குபவர்கள் அட்சய திருதியை நாளில் துவங்கலாம். மந்திர ஜெபம் செய்வதும், யாகம், அபிஷேகம் போன்றவை இந்த நாளில் செய்வதும் சிறப்பானதாகும். முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபடுவது சிறப்பானதும். அட்சய திருதியை நாள் துவங்கி தினமும் 108 முறை ஓம் நம சிவாய மந்திரத்தை சொல்ல துவங்கலாம். அம்மனுக்கு குங்கும அர்ச்சனை செய்து வழிபடலாம்.

சமீபத்திய செய்திகள்

news

டிசம்பராக மாறும் மே.. நாளை மறுநாள்.. வங்க கடலில்.. புதிய "லோ" உருவாகிறது.. வானிலை ஆய்வு மையம் தகவல்

news

போதை பொருள் பயன்பாடு... விஜய், தனுஷ், த்ரிஷா மீது நடவடிக்கை எடுங்க.. வீரலட்சுமி சொல்கிறார்!

news

சென்னை ஐடி பெண்ணின் விபரீத முடிவு.. சமூக வலைதள டிரோல்கள்தான் காரணமா?

news

கிளியோ மயிலோ.. அனுமதி இல்லாமல் வளர்த்தால்.. ரூ. 10,000 அபராதம்.. அதுக்கும் லைசன்ஸ் வாங்கணும்!

news

ஓய்வு பெறுவது குறித்து.. இன்னும் முடிவெடுக்கவில்லை தோனி.. வெளியான தகவல்.. ரசிகர்கள் செம ஹேப்பி!

news

பாஜகவுக்கு 8 முறை ஓட்டு போட்டு அதிர வைத்த உ.பி. சிறுவன்.. புகாருக்குப் பிறகு கைது!

news

அடுத்த 5 ஆண்டுக்கு அல்ல.. 1000 வருடத்துக்கு திட்டம் தீட்டுகிறோம்.. பிரதமர் நரேந்திர மோடி பேச்சு!

news

ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய.. ஈரான் அதிபர் இப்ராகிம் ரைசி மரணமடைந்தார்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு

news

அறுதப் பழசான ஹெலிகாப்டரில் பயணித்த ஈரான் அதிபர் இப்ராகிம் ரைசி.. அதிர வைக்கும் தகவல்கள்!

அதிகம் பார்க்கும் செய்திகள்