பாஜகவிலிருந்து விலகினார் அமர் பிரசாத் ரெட்டி...தலைமை மீது பகீர் குற்றச்சாட்டு

Jun 10, 2026,05:50 PM IST

சென்னை: தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில், தமிழக பாரதிய ஜனதா கட்சியின் முக்கிய நிர்வாகியாக இருந்த அமர் பிரசாத் ரெட்டி தனது கட்சிப் பொறுப்புகளிலிருந்தும், அடிப்படை உறுப்பினரிலிருந்தும் விலகுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். மேலும், தமிழக பாஜகவின் முன்னாள் தலைவர் அண்ணாமலையின் புதிய இயக்கத்தில் தாம் இணையவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.


பாஜக மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள்:


கட்சியிலிருந்து விலகியது குறித்துப் பேசிய அமர் பிரசாத் ரெட்டி, தமிழக பாஜகவின் தற்போதைய செயல்பாடுகள் குறித்து கடுமையான விமர்சனங்களை முன் வைத்துள்ளார். "திமுக ஒரு குடும்பத்தின் கட்டுப்பாட்டில் இருக்கிறது என்று நாம் கூறி வருகிறோம் என்றால், தமிழக பாஜகவோ வெறும் 4 முதல் 5 நபர்களின் முழு கட்டுப்பாட்டில் முடங்கிக் கிடக்கிறது." என்று அவர் மிகக் கடுமையான குற்றச்சாட்டைப் பதிவு செய்துள்ளார். மேலும் தொடர்ந்து பேசிய அவர், "தேர்தல்களில் தொடர்ந்து தோல்வியடைந்தாலும், அதே நபர்கள் தான் மீண்டும் மீண்டும் தேர்தலில் போட்டியிட வேண்டும் என்று அவர்கள் நினைக்கிறார்கள். தகுதியான மற்றவர்களுக்கோ அல்லது உழைப்பவர்களுக்கோ அங்கு முக்கியத்துவம் அளிக்கப்படுவதில்லை" என்று கட்சியின் உட்கட்சி அரசியல் குறித்தும், தற்போதைய தலைமைச் செயல்பாடுகள் குறித்தும் தனது அத்திருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.


அண்ணாமலையின் இயக்கத்தில் இணைவு:




பாஜகவில் இருந்து விலகிய அமர் பிரசாத் ரெட்டி, அடுத்தகட்டமாக அண்ணாமலையின் இயக்கத்தில் இணைந்து பணியாற்ற உள்ளதாகத் திட்டவட்டமாக அறிவித்துள்ளார். அண்ணாமலையுடன் நெருங்கிய நட்பு மற்றும் அரசியல் பிணைப்பில் இருந்தவர் என்பதால், இந்த முடிவு தமிழக அரசியல் களத்தில் மிக முக்கியமான நகர்வாகப் பார்க்கப்படுகிறது.


அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு:

கடந்த சில காலங்களாகவே தமிழக பாஜகவிற்குள் பல்வேறு உட்கட்சிப் பூசல்களும், கருத்து வேறுபாடுகளும் நிலவி வருவதாகத் தகவல்கள் வெளியாகி வந்த நிலையில், அமர் பிரசாத் ரெட்டியின் இந்த விலகல் மற்றும் குற்றச்சாட்டுகள் அதனை உறுதிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளன. குறிப்பாக, "தோல்வியடைந்தவர்களுக்கே மீண்டும் மீண்டும் வாய்ப்பு" என்ற அவரது விமர்சனம் கட்சியின் மூத்த நிர்வாகிகள் பலரைக் குறிவைத்துத் தாக்கும் விதமாக இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.


அமர் பிரசாத் ரெட்டியின் இந்த அதிரடி முடிவு, தமிழக பாஜகவிற்குப் பின்னடைவாகக் கருதப்படும் அதே வேளையில், அண்ணாமலையின் புதிய இயக்கத்திற்கு இது எந்த மாதிரியான பலத்தைத் தரும் என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். இவருடைய விலகலைத் தொடர்ந்து மேலும் சில நிர்வாகிகள் பாஜகவிலிருந்து விலகக்கூடும் என்றும் அரசியல் வட்டாரங்களில் முணுமுணுக்கப்படுகிறது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

அன்பில் மகேஸ் பொய்யாமொழி ரெய்டு: மற்றுமொரு அரசியல் பழிவாங்கல்.. மு.க.ஸ்டாலின்

news

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் எப்போதுமே முதல் பூஜை யாருக்கு தெரியுமா?

news

ரெஸ்ட்டில் இருக்கிறேன்.. உடல்நலம் குறித்து விசாரித்த அனைவருக்கும் நன்றி.. மு.க.ஸ்டாலின்

news

ஈரான் போர் எதிரொலி: ஆசியாவுக்கான எண்ணெய் கப்பல் போக்குவரத்து செலவு புதிய உச்சம்!

news

"ஜெயா, நீ இல்லாத ஊருக்கு இலுப்பைப் பூ".. மறக்க முடியுமா? (2)

news

ஆவியைப் பத்தி சொல்லுங்க.. எங்கே நைஸா ஓடப் பாக்கறீங்க.. வாங்க இங்க..!

news

MS Subbulakshmi: மகாராணி மீனாட்சியின் மதுரையில் அவதரித்த.. கர்நாடக இசையின் ராணி!

news

இது லண்டனா இல்லை சென்னையா.. விஜய்யைப் பார்க்க கூடிய பெரும் கூட்டம்.. சந்திப்பு ரத்து!

news

வாஸந்திக்குப் பிடித்த பாஸந்தி!

அதிகம் பார்க்கும் செய்திகள்