சென்னை: கமல்ஹாசன் தயாரிப்பில், சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிப்பில் வெளியான 'அமரன்' திரைப்படம், புகழ்பெற்ற கோல்டன் பீகாக் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இந்தத் திரைப்படம், 56வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் (IFFI) கோவாவில், இந்தியன் பனோரமா பிரிவின் தொடக்கப் படமாகவும் திரையிடப்பட உள்ளது. இந்த அறிவிப்பால் படக்குழுவினர் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.
கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் இதைத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், "இந்தியாவின் ஆன்மாவை உலுக்கிய அழியாத மேஜர் முகுந்த் வரதராஜனின் கதை இப்போது உலகம் முழுவதும் எதிரொலிக்கும் என்பதைப் பகிர்வதில் பெருமிதம் கொள்கிறேன். அமரன், சர்வதேசப் போட்டியில் கோல்டன் பீகாக் விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது என்பதையும், 56வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில், கோவாவில் இந்தியன் பனோரமா பிரிவின் தொடக்கப் படமாக இது திரையிடப்பட உள்ளது என்பதையும் பகிர்வதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். நடுவர் குழுவுக்கு நன்றி மற்றும் சக பரிந்துரைக்கப்பட்ட அனைவருக்கும் வாழ்த்துக்கள்" என்று பதிவிட்டுள்ளார். மேலும், சிவகார்த்திகேயன், சாய் பல்லவி, ஜி.வி. பிரகாஷ் மற்றும் படக்குழுவில் உள்ள மற்றவர்களுக்கும் அவர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ரசிகர்களும் இந்த அறிவிப்பால் உற்சாகமடைந்துள்ளனர். அமரன்' திரைப்படம் கடந்த ஆண்டு அக்டோபர் 31 அன்று திரையரங்குகளில் வெளியானது. இது ஷிவ் அரூர் மற்றும் ராகுல் சிங் எழுதிய 'India’s Most Fearless: True Stories of Modern Military Heroes' என்ற புத்தகத் தொடரை அடிப்படையாகக் கொண்டது. இந்தப் புத்தகத்தில் மேஜர் முகுந்த் வரதராஜன் பற்றிய ஒரு அத்தியாயம் உள்ளது. இந்தப் படம், அவருக்கு மரணத்திற்குப் பின் வழங்கப்பட்ட அசோக சக்கரத்தைப் பெறுவதற்காக தலைநகருக்குச் செல்லும் போது, அவரது மனைவி இந்து ரெபேக்கா வர்கீஸ், முகுந்தின் பயணத்தை விவரிக்கும் கதையை மையமாகக் கொண்டுள்ளது. ராகுல் போஸ் மற்றும் புவன் அரோரா ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.
இளைஞர்களை ரவுடிகளாக்க எதிர்க்கட்சிகள் முயற்சி...பிரதமர் கடும் குற்றச்சாட்டு
பார்லிமென்ட் குளிர்கால கூட்டத்தொடர் டிசம்பர் 1 முதல் ஆரம்பம்
ஒரே சூரியன் .. ஒரே சந்திரன்.. ஒரே திமுக... பாட்ஷா ஸ்டைலில் அதிரடி காட்டிய முதல்வர் மு.க.ஸ்டாலின்
மனித நேயமும் மாற்றுத்திறனாளிகளும்.. தன்னம்பிக்கையும், தைரியமும் அவர்களை வழி நடத்தும்!
வாரத்தின் இறுதி நாளான இன்று தங்கம் விலை எவ்வளவு தெரியுமா? இதோ முழு விலை நிலவரம்!
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிலிருந்து.. வெளியேறுகிறாரா சஞ்சு சாம்சன்.. சிஎஸ்கேவுக்கு வருவாரா?
தமிழ்நாட்டில் இன்று 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு... சென்னை வானிலை மையம் தகவல்!
தாத்தா (கவிதை)
கோல்டன் பீகாக் விருது போட்டியில் சிவகார்த்திகேயனின் அமரன்.. கமல்ஹாசன் பெருமிதம்
{{comments.comment}}