தீபாவளி 2024 ஸ்பெஷல்.. அமுதம் அங்காடிகளில்.. ரூ. 499க்கு 15 பொருட்கள்.. அப்படியே செட்டா வாங்கலாம்!

Oct 22, 2024,06:24 PM IST

சென்னை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 15 மளிகை பொருட்கள் அடங்கிய அமுதம் பிளஸ் தொகுப்பை குறைந்த விலையில் விற்பனை செய்ய அறிமுகம் செய்துள்ளது தமிழ்நாடு அரசு.


இதை மாநில உணவு மற்றும் உணவு வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி தொடங்கி வைத்துள்ளார். அமுதம் அங்காடிகள் தமிழ்நாடு நுகர்வு பொருள் வாணிப கழகத்தின் கீழ் செயல்பட்டு வருகிறது. மக்கள் பயன்படுத்தும் அத்தியாவசிய பொருள்களின் விலை உயர்வை கட்டுப்படுத்துவதே இதன் நோக்கமாக உள்ளது. அதன்படி அரிசி, பருப்பு, எண்ணெய், உள்ளிட்ட மளிகை பொருட்களை குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுகிறது.




குறிப்பாக தமிழகத்தில் நியாய விலை கடைகள் எப்படி இயங்குகிறதோ அதே போன்று அமுதம் அங்காடிகளும் இயங்குகின்றன. இந்த அங்காடிகளை தமிழக அரசு நடத்தி வருகிறது. சுய சேவை முறையில் இயங்கும் இந்த  அங்காடிகள் சென்னையில் மட்டும் 22 இடங்களில் உள்ளன. அதேபோல் கடலூரிலும் ஐந்து முக்கிய பகுதிகளில் இயங்கி வருகிறது.


திமுக ஆட்சிப் பொறுப்பேற்றதில் இருந்து மக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும், திட்டங்களையும் அரசு சார்பில் பார்த்துப் பார்த்து செய்து வருகிறது. குறிப்பாக மகளிர் இலவச பேருந்து, சுய உதவிக் குழுக்கள், பெண்களுக்கான மானிய விலையில் பிங்க் ஆட்டோக்கள், கல்வி கட்டணத்தில் சலுகை உள்ளிட்ட பல்வேறு திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறது. இவை மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளன.


இதனைத் தொடர்ந்து தற்போது தீபாவளி பண்டிகையை வருவதற்கு இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில், தற்போது அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த முதல்வர் மு க ஸ்டாலின் ஆணைக்கிணங்க தீபாவளி பண்டிகையை யொட்டி 15 மளிகை பொருட்கள் அடங்கிய அமுதம் பிளஸ் என்ற தொகுப்பை அறிமுகம் செய்துள்ளோம் என உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். 


இது குறித்து அவர் கூறியதாவது, தற்போது அமுதம் அங்காடிகளில் 2லட்சம்  முதல் 4 லட்ச ரூபாய் வரை தினசரி வியாபாரம் நடைபெற்று வருகிறது. வெளிச்சந்தையை விட குறைவான விலையில் இங்கு பொருட்கள் விற்கப்படுவதால் பொதுமக்களுக்கு 1,000 முதல் 1,500 ரூபாய் வரை மிச்சமாகிறது. இதனால் பொதுமக்களின் நலன் கருதி தீபாவளி பண்டிகையை ஒட்டி 15 மல்லிகை பொருட்கள் அடங்கிய அமுதம் பிளஸ் என்ற தொகுப்பை அறிமுகம் செய்துள்ளோம். இதன் உண்மையான விலை 600 முதல் 650 வரை இருக்கும். ஆனால் இங்கு சுமார் 3.8 கிலோ எடையில் 15 பொருட்கள் கொண்ட தொகுப்பு ரூபாய் 499க்கு விற்பனை செய்கிறோம்.


இந்த பொருட்கள் தமிழ்நாடு அரசின் அமுதம் அங்காடி, அமுதம் ரேஷன் கடைகளில் இன்று முதல் விற்பனை  செய்யப்படுகிறது. மேலும் தமிழக சட்டப்பேரவையில் அறிவித்தபடி விரைவில் நாடு முழுவதும் 100 இடங்களில் அமுதம் அங்காடிகள் திறக்கப்படும் என கூறினார்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!

news

கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!

news

இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?

news

உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?

news

விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி

news

கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்

news

Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்

news

ருத்ர தாண்டவம் (சிறுகதை)

news

உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!

அதிகம் பார்க்கும் செய்திகள்