சாய்ஸ்ரீயின்‌ கேக்கு.. அஞ்சாப்பு அட்டகாசங்கள்

Jun 10, 2026,12:04 PM IST

- பன்முகக் கவிஞர் க.முருகேஸ்வரி


அன்று தமிழ் பயிற்சிப் புத்தகத்தில்  பிடித்ததை வரைவேன் அதைப் பற்றி எழுதுவேன் பகுதியை மாணவர்கள் செய்து கொண்டு இருந்தார்கள்.


பட்டம், வண்ணத்துப்பூச்சி, முயல்,சரக்குந்து,வானவில்,மிதிவண்டி,மீன்,மாதுளை என வரைந்து அதைப் பற்றி எழுதி என்னிடம் கொண்டு வந்தார்கள்.


சாய்ஸ்ரீ மட்டும் கேக் வரைந்திருந்தாள். எனக்கு கேக்கு மிகவும் பிடிக்கும் என்றும், இன்னும் சில வரிகள் கேக்கு கேக்கு என்று எழுதியிருந்தாள்.


நான் அவளிடம் கேக்கு னு எழுதக் கூடாதுமா என்று கூறினேன்.




உடனே அவளுடன் வந்த அவள் தோழிகளில் சிலர் நாங்க சொன்னோம் மிஸ். அவள் கேக்கு தான் கரெக்ட் என்று சொல்லிவிட்டாள் என்றனர். 


உடனே  டீச்சர் கேக்குக்கு தமிழில் என்ன பெயர் என்று கேட்டாள் வசுமிதா. நீங்களே கண்டுபிடிங்க என்று சொல்லி விட்டேன்.


ஏய் தர்னுக்குத் தெரியும்டி என்று தர்ஷா தர்ஷா என்று ஓடினார்கள். அவனும் தெரியலை என்று சொல்லிவிட்டான்.


கம்ப்யூட்டர் மிஸ்ஸைக் கேட்டுட்டு வர்றோம் என்று ஒரு சிலர் ஓடினார்கள்.... கண்டறிந்தும் வந்தார்கள்...


ஒருவழியாக  கேக்கின் தமிழ்ப் பெயரைக் கண்டுபிடித்து விட்டார்கள் என் செல்லங்கள்....


அணிச்சல் 


அணிச்சல்* என்பது தான் கேக்கின் தமிழ் பெயர்!


நன்றி விக்கிப்பீடியா!


அட்டகாசம் தொடரும்...


(கவிஞர் க.முருகேஸ்வரி, இடைநிலை ஆசிரியர், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வயலாநல்லூர், பூவிருந்தவல்லி திருவள்ளூர் . 25 வருட பணி அனுபவம் உள்ளவர். கவிதை, கட்டுரை, சிறுகதை, வகுப்பறை அனுபவம், சினிமா  போன்ற தலைப்புகளில் தொடர்ந்து எழுதி வருகிறார். you tube Channel களில் பட்டிமன்றம் பேசியுள்ளார். சிங்கப்பூர் பொழில் பண்பலையில் கவிதைகள் எழுதுகிறார்.. சிங்கப்பெண், அருந்தமிழ் தாரகை விருதுகள் பெற்றுள்ளார்).

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

போராளிகளின் வரலாற்றை சற்றுப் படியுங்கள் தம்பி.. முதல்வர் விஜய்க்கு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்

news

அத்தனை நீளமாகப் பேசியும் detention copy பற்றி மூச்சுவிடவில்லையே.. ஸ்டாலினுக்கு தவெக கேள்வி

news

தாராபுரம்: அமராவதி ஆற்றின் கரையில்… மாறிக்கொண்டே இருக்கும் அரசியல் களம்!

news

மதுராந்தகம்.. ஏரிகாத்த ராமர் முதல் தேர்தல் களம் வரை… தனித்துவம் கொண்ட தொகுதி!

news

தமிழகத்தில் 17 மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் எச்சரிக்கை

news

இளையராஜாவுக்கு டெல்லி உயர் நீதிமன்றம் நோட்டீஸ்: நீதிமன்ற அவமதிப்பு வழக்கின் பின்னணி!

news

தாய்மாமன் தங்க மோதிர திட்ட டெண்டரை எதிர்த்த வழக்கு தள்ளுபடி

news

மடப்புரம் அஜித்குமார் வழக்கு: 4 போலீசார் மீது கொலை வழக்கு பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவு!

news

தவெக.,விற்கு மாநிலக் கட்சி அங்கீகாரம்: 'விசில்' சின்னத்தை உறுதி செய்தது தேர்தல் ஆணையம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்