சென்னை: பிளஸ் டூ பொதுத்தேர்வுகள் மே ஒன்பதாம் தேதி வெளியாகும் ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், ஒரு நாள் முன்கூட்டியே மே 8ஆம் தேதி வெளியாகும் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.
2024-25 ஆம் கல்வி ஆண்டுக்கான பிளஸ் டூ பொது தேர்வுகள் கடந்த, மார்ச் 3 தொடங்கி 25 ஆம் தேதி வரை நடைபெற்றன. இதில் அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகள் என மொத்தம் 8 லட்சத்து 21 ஆயிரம் மாணவ-மாணவிகள் தேர்வு எழுதியுள்ளனர்.
இதனையடுத்து ஏப்ரல் ஒன்றாம் தேதி பிளஸ் டூ பொதுத்தேர்வு விடைத்தாள்கள் திருத்தும் பணிகள் தொடங்கி தேர்வு முடிவுகள் வெளியீடு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வந்தது. இதனையடுத்து பிளஸ் டூ தேர்வு முடிவுகள் மே ஒன்பதாம் தேதி வெளியாகும் எனவும், 10 மற்றும் 11ஆம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் மே 19ஆம் தேதி வெளியிட இருப்பதாகவும் திட்டமிடப்பட்டிருந்தது.
இந்த நிலையில் தேர்வு முடிவுகள் வெளியீடு பணிகள் விரைவாக நிறைவடைந்த நிலையில் ஒரு நாள் முன்கூட்டியே தேர்வு முடிவுகள் வெளியிட தமிழக பள்ளிக்கல்வித்துறை ஏற்பாடு செய்துள்ளது. அதன்படி,
தமிழகத்தில் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் நாளை மறுநாள் அதாவது மே எட்டாம் தேதி வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் 8-ம் தேதி காலை 9 மணிக்கு + 2 ரிசல்ட் வெளியிடப்படும்- பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
மேலும் dge.tn.gov.in, dge1.tn.nic.in, dge2.tn.nic.in ஆகிய தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ இணையதளங்களில் அறிந்து கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
11 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு!
கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் விரிசலா.. மாவட்ட கலெக்டர் அழகு மீனாவின் விளக்கம் இதுதான்!
இலங்கை தமிழ் அகதிகளுக்கு நீண்டகால விசாவும், குடியுரிமையும் வழங்கும் சட்ட திருத்தமும் தேவை: அன்புமணி
மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயர்.. 2 தலித் கட்சிகள் எதிர்ப்பு
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்
தலைமை சொல்வதை கேட்பதே எனது பொறுப்பு: தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்!
ரஷ்யா மீது 2வது கட்ட பொருளாதார தடை விதிக்கப் போறேன்.. டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு
கண்மணியே உன் கா(த)ல் தடம் தேடி..1 (கவிதைத் தொடர்)
ஆசிய கோப்பை ஹாக்கி 2025.. 8 வருடங்களுக்குப் பிறகு கோப்பையை வென்று இந்தியா அசத்தல்
{{comments.comment}}