கார்த்திகை விரதமும், சதுர்த்தி விரதமும் இணைந்து வரும் ஏப்ரல் 1

Apr 01, 2025,12:52 PM IST

- ஸ்வர்ணலட்சுமி


ஏப்ரல் 1 2025 பங்குனி 18 ஆம் தேதி என்னென்ன விசேஷங்கள் ?சதுர்த்தி விரதம் கார்த்திகை விரதம் சேர்ந்து வருவது மிகவும் விசேஷமான நாள்.


ஒரு நாள் விரதம் கடைப்பிடிப்பதால் இரட்டிப்பு பலன்கள் கிடைப்பதற்கு முழுமுதற் கடவுளான விநாயகர் பெருமானை வழிபட சதுர்த்தி விரதம் மேற்கொண்டும், கார்த்திகை விரதம் இருந்து முருகப்பெருமானை வழிபடும் பலன் கிட்டும். சதுர்த்தி திதி காலை 10 : 04 மணிக்கு தொடங்கியுள்ளது.


சக்தி கணபதி பூஜை செய்து வழிபடுவதற்கு உகந்த அற்புதமான நாள் இந்த சதுர்த்தி திதி. சிறப்பு வாய்ந்த சதுர்த்தி தினங்களில் மற்ற சக்திகளின் சேர்க்கை உண்டாகும் போது அந்த நாள் மேலும் சிறப்பானதாக இருக்கிறது. பங்குனி மாதம் வளர்பிறையில் வரும் சதுர்த்தி தினத்தை சக்தி சதுர்த்தி என்பார்கள். இந்த நாள் சக்தி கணபதி விரத தினமாக பூஜிக்கப்படுகிறது.


சதுர்த்தி நாளில் கோவில்களில் உள்ள கணபதிக்கு சிறப்பு அபிஷேகங்கள், பூஜைகள் நடைபெறும் .வெள்ளருக்கு மாலை ,அருகம்புல் மாலை சாற்றி விநாயகர் வழிபடுவது மிகுந்த நன்மை பயக்கும். கணபதியை கும்பிட்டு விரதம் இருந்து வழிபடுவோர் வாழ்வில் உள்ள தடைகள் நீங்கும். சகல செல்வங்களும்  கிடைக்கும் என்பது ஐதீகம்.


வீட்டில் விநாயகரை மலர்களால் அலங்கரித்து, சர்க்கரை பொங்கல், பாயாசம் ,சுண்டல் என நைவேத்தியம் வைத்து விநாயகர் அகவல், மூலமந்திரம் 108 முறை படிக்க சங்கடங்கள் அனைத்தும் தீர்த்து வைப்பார் விநாயகர் என்பது நம்பிக்கை. சக்தி கணபதி பூஜை செய்வதால் பள்ளி, கல்லூரி -மாணவ, மாணவியர் தேர்வுகளில் வெற்றி பெறவும் ,மனதில் தெளிவு பிறந்து ,தடைகள் நீங்கி அனைத்து பிரச்சினைகளில் இருந்தும் விடுபட்டு நல்ல பலன்கள் கிட்டும்.


மேலும் கார்த்திகை விரதத்தை பற்றி பார்ப்போம்




முருகப்பெருமானுக்கு முதலில் உருவான திருநாமம் கார்த்திகேயன். ஆறு கார்த்திகை பெண்களால் வளர்க்கப்பட்டதால் கார்த்திகேயன் என்ற பெயர் வந்தது .கார்த்திகை பெண்களை சிறப்பு செய்வதற்காக சிவபெருமானால் உருவாக்கப்பட்ட விரதம் கிருத்திகை அல்லது கார்த்திகை விரதமாகும்.


கிருத்திகை விரதம் இருப்பதனால் என்ன பலன்?


கிருத்திகை விரதம் (கார்த்திகை விரதம்) இருந்து முருகனை வழிபட்டால், செவ்வாய் தோஷத்தினால் ஏற்படும் திருமண தடை, மண்,  மனை பிரச்சனைகள் தீரும். குழந்தை பாக்கியம் கிட்டும் .சகோதரப் பிரச்சனைகள், உயர் பதவி, வேலை வாய்ப்பு ,சகல விதமான பிரச்சினைகள் தீரும் என்பது ஐதீகம்.


"முத்தமிழால் வைதாரையும் ஆங்கு வாழ    வைப்போன்" என்கிறார் அருணகிரிநாதர் தனது கந்தர் அலங்கார பாடலில். முருகப்பெருமானை வழிபட்டால் அனைத்திலும் வெற்றி கிடைக்கும். நினைத்தது அனைத்தும் நிறைவேறும்.  இவ்வாறு சக்தி விநாயகர் சதுர்த்தி விரதமும், முருகனுக்கு கார்த்திகை விரதமும் ,என இவ்விரண்டு விரதங்களும் ஒரே நாளில் கடைபிடிப்பதால் வாழ்க்கை மேன்மையும், செல்வ வளம் பெருகும். கடன் பிரச்சினைகள் தீர்ந்து ,வாழ்வை  வளமாக வாழலாம்.


மேலும் ஆன்மீக தகவல்களுக்கு இணைந்திருங்கள் தென் தமிழுடன் .உங்கள்  ஸ்வர்ணலட்சுமி.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

2026 குடியரசு தின விழா அணிவகுப்பில்.. தமிழ்நாட்டின் பசுமை மின் சக்தி ஊர்தி பங்கேற்பு

news

ஐசிசி மகளிர் டி20 பேட்டிங் தரவரிசையில்.. ஷெபாலி வர்மா அதிரடி உயர்வு.. 6வது இடம்!

news

புதிய வாக்காளர்களுக்கு புது டிசைனில் அடையாள அட்டைகள்: தேர்தல் ஆணையம் தகவல்

news

ஒருபுறம் புதின் வீட்டின் மீது தாக்குதல்.. மறுபுறம் சமாதான முயற்சி.. உக்ரைன் ரஷ்யா.. தொடர் பதற்றம்!

news

Cinema Nostalgia.. இன்று ஏன் இத்தகைய கருத்துப்படங்கள் அரிதாகின்றன?

news

புத்தாண்டு அதிரடி: ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் 'பேடே சேல்' (Pay Day Sale) அறிவிப்பு!

news

நகைப்பிரியர்களுக்கு குட் நியூஸ்....தங்கம் மற்றும் வெள்ளி விலை அதிரடி சரிவு

news

"பந்தயம் என்பது நடிப்பு அல்ல": அஜித் குமாரின் கார் பந்தய ஆவணப்படம் வெளியீடு

news

vaikunta Ekadashi 2025 கோவிந்தா கோஷம் முழங்க ஸ்ரீரங்கம் ரங்கநாதர் ஆலயத்தில் சொர்க்கவாசல் திறப்பு

அதிகம் பார்க்கும் செய்திகள்