எஞ்சாத வாட்டாயின் அடியார்க்கும் அடியேன்.. அரிவட்ட நாயனார்!

May 07, 2026,01:27 PM IST

- கலைவாணி கோபால் 


"எஞ்சாத வாட்டாயின் அடியார்க்கும் அடியேன்" -சுந்தரமூர்த்தி நாயனார். 


சோழ நாட்டில் திருவாரூக்கும் திருத்துறைப்பூண்டிக்கும் இடைப்பட்ட இடத்தில் இருக்கும் ஊரான கண்ணமங்கலத்தில் பிறந்தவர் நம் அரிவட்ட நாயனார்.


இவர் மிகவும் அன்பான சிவ பக்தர் ஆவார். பெரும் விவசாயியும் கூட.....


கண்ணமங்கலம் அருகில் இருந்த "தண்டலைச்சேரி" ஊரில் இருக்கும்' நீள் நெறி நாதர் 'ஆலயம் எனும் சிவாலயத்தில் அமர்ந்திருக்கும் சிவபெருமானுக்கு அனுதினமும் சிவாலயத்தில் அமுது படைப்பது அவரின் முதல் கடமை.


எந்நாளும் குளித்து திருநீறு பூசி, செந்நெல் அமுது, படைத்து செங்கீரை குழம்பு , வைத்து மாவடுவும், சிவனுக்கு வைத்து படைத்து வருவது இவரின் முதல் வேலையாகும்.


இந்த நீள் நெறி நாதர் ஆலயம் சாதாரணமான ஆலயம் கிடையாது. மிகவும் சக்தி வாய்ந்த சிவாலயம். 




சோழ மன்னனின் குஷ்டம் நோய் தீர்த்தது முதல் 'படிக்காசு புலவர்' "தண்டலை சதகம்" பாடியது. திருஞானசம்பந்தர்' 'பாடியது என பல அதிசயங்கள்...... நிகழ்ந்துள்ள மிகவும் பிரசித்தி பெற்ற சிவாலயம் ஆகும்.


இங்கு செந்நெல், கார் நெல் .... என்ன பல நெல் வகைகள் இருந்தாலும். (சிவனுக்காக செந்நெல்லும், தனக்காக சாதாரண கார் நெல்லும்) பயன்படுத்தி வாழ்ந்து வந்தவர். அதுமட்டுமல்லாமல் பெரும் விவசாயியாக இருந்தாலும் , உயர்ந்த நெல் வகையான செந்நெல்லை சிவபெருமானுக்காக மட்டுமே பயன்படுத்தி, தன்னை தாழ்த்தி சிவனை மேல் நோக்கி மனதில் வைத்து வழிபட்டு வந்தார் .


இப்படியே தொடர்ந்தால் தயானர் சாதாரண பக்தர் ஆகிவிடுவாரே?.. பின் எப்படி நாயன்மாராவது? தன் திருவிளையாடலை தொடங்கினார் சிவபெருமான்.


அவரிடம் உள்ள செல்வம் கொஞ்சம் கொஞ்சமாக குறையத் தொடங்கியது. அந்நிலையிலும் தன் கடமை உணர்ந்து பணி மாறாது .. நீள் நெறி நாதருக்கு அனுதினமும் அமுது படைத்து வந்தார். அப்போது' விடேல் விடேல் என்ற சத்தம் எழும் இந்த ஒலியினை கேட்டு சிவபெருமான் தன் படைகளை ஏற்றுக் கொண்டார்.... என அவர் உள்ளுக்குள் மகிழ்ந்து அனுதினமும் தன் கடமையை செய்து வந்தார். 


சில காலம் கடந்தது. வறுமை மிகவும் வாட்டியது. அந்நிலையில் பெரும் விவசாயியாக இருந்த இவர் கூலி வேலைக்கும் சென்றார். 


அப்போது ,கூலியில் வரும் செந்நெல்  சிவபெருமானுக்காக  அமுது படைப்பதற்காக வைத்துவிட்டு  தான் பட்டினி கிடப்பது தன் மனைவியும் உடன் பட்டினி கிடப்பார். 


நாயன்மார்களில் மிகவும் முக்கியத்துவமாக கருதப்படுவது, நாயன்மார்களின் மனைவிமார்களே ஆவர். ஏனென்றால்.. எந்நிலையிலும் தன் கணவனின் பக்தி சேவைக்காக, தங்களையும் அவர்கள் ஈடுபடுத்திக் கொண்டு முழு மனதுடன் நேர்த்தியாக குடும்பம் நடத்தி வந்தனர்.


ஒரு நாள் சிவபெருமானுக்கு அமுதப் படைக்க வேண்டி செந்நெல் அமுது+செங்கீரை குழம்பு+மாவடு அனைத்தையும் எடுத்துக்கொண்டு தன் மனைவியுடன் நெல் அறுவடை செய்த வயலின் வரப்புகளின்  மீது நீள் நெறி நாதர் ஆலயம் நோக்கி நடந்து சென்றார்.


அவர் ஒருவேளை உண்பதும் ஒருவேளை பட்டினி கிடப்பதுமாக இருந்ததால், அவருக்கு மயக்கம் ஏற்பட்டது.


கையிலிருந்த உணவு பொருட்கள் கீழே சிந்தியது. அவரும் கீழே விழுந்தார். அவர் மனைவி அவரை வந்து தாங்கி பிடித்தார். 


இறைவனுக்கு கொண்டு செல்லும் உணவு பொருட்கள் கீழே சிந்தியதை பார்த்தவுடன், தயானருக்கு உயிரே போய்விட்டது போல ஆகிவிட்டது.


ஊரார்கள் தன்னை தூற்றிய போதும், சிவனுக்கு சேவை செய்வது மட்டுமே உயிர் மூச்சு. ஆன்ம நிலையின் படிநிலை என்ற உணர்ந்தவர். இன்று ,இருந்த நெல்லை கொண்டு பெருமானுக்கு அமுது செய்து வந்தும் அது பயன்படாமல் கீழே சிந்தியதை நினைத்து மிகவும் வருந்தினார். தான் செய்த சேவையில் ஏதோ தவறு நிகழ்ந்ததாக எண்ணி பெரும் குற்ற உணர்ச்சியில் தலையில் அடித்துக் கொண்டு அழுதார்.


அவர் மனைவிக்கும் என்ன செய்வது? என்று தெரியாமல் அவரை எப்படி சமாதானப்படுத்துவது? என்று தெரியாமல் மனதில் கலங்கி கொண்டு நின்றார்...


தன்னால் சிவபெருமானுக்கு இன்று அமுது படைக்க முடியவில்லை .என்று வருந்தி. இனியும் இந்த உயிர் இருந்து என்ன ஆகப்போகிறது? என்ற, கோபத்தில் அங்கிருந்து அரிவாளை எடுத்து தன் கழுத்தை அறுக்க நோக்கினார்..


அப்போது மண்ணில் இருந்து ஒரு கை வந்து அவரின் கையை தடுத்து நிறுத்தியது. மேலும், இன்னொரு கை வந்து அங்கு விழுந்து சிதறி இருந்த உணவுப் பொருட்களை அதிலும் குறிப்பாக ( மாவடு வை எடுத்தது) அப்போது 'விடேல்' என்ற சத்தம் மீண்டும் ஒலித்தது. அப்போதே நாயனாருக்கு புரிந்தது. சிவபெருமான் தனது சிந்திய அமுதையும் ஏற்றுக் கொண்டார் என்று!


அப்போது இன்னிசை ஒலித்தது. அவரின் கண்களில் ஆனந்த கண்ணீர் நிறைந்து காணப்பட்டது. சிவபெருமான் ரிஷப வாகனத்தில் பார்வதி தேவியுடன் தயானருக்கு காட்சி கொடுத்தார்.


"மிகக் கொடிய வறுமையிலும் நீ என்மேல் கொண்ட அன்பினை விடாமல் பிடித்ததாலும்"  எனக்காக உயிர் விட துணிந்ததாலும் உன் அன்பில் நாம் கரைந்தோம். இனி கைலாயத்தில் எம்மோடு இருக்கக் கடவாய்' என அவர்கள் இருவரையும் அழைத்துச் சென்றார் சிவன்.


இன்றும் திருவாரூர் திருத்துறைப்பூண்டி பகுதியில் "அரிவட்ட நாயனார் வரலாறு"  மிகவும் பிரசித்தம்.  தை மாதம் திருவாதிரை நாள் அவருக்கான குருபூஜை ஆகும். அன்று ,அப்பகுதி மக்கள் செந்நெல் அமுது படைத்து அரிவட்ட நாயனார் நினைவாக அதே தண்டலை நீள்நெறிஆலயத்தில் அமுது படைத்து மகிழ்வார்கள்.


தண்டலை (கண்ணந்தக்குடி கிராமத்தில் மண்ணிலிருந்து பெருமானின் கரம் தோன்றிய இடத்தில் நினைவு லிங்கம் உண்டு. அங்கேயும் அரிவட்ட நாயனாருக்கு சிலை உண்டு.) அவர் கருத்தை அறுத்த பொழுது சிவன் வந்து காத்த அந்த காட்சியும் கல்லில் வடிக்கப்பட்டுள்ளது. 


ஒரு குழந்தை மேல் தாய் வைத்த அன்பினைப் போல் அரிவட்ட நாயனார் சிவன் மேல் அன்பு வைத்து  அமுது படைத்து கைலாயம் ஏகினார் .அன்பு மட்டுமே, சிவபெருமானிடம் கொண்டு செல்லும் ஆயுதம் என்பதை ஒவ்வொரு நாயன்மாரும் நினைவுறுத்தி செயல்படுத்தி கைலாயம் சென்றுள்ளனர்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

Joseph Vijay Vs Udayanidhi Stalin: சட்டசபை திமுக தலைவராக உதயநிதி ஸ்டாலின் தேர்வு!

news

Vijay Record: 828 நாட்களில்.. இதுவே முதல் முறை...தமிழக அரசியல் வரலாற்றை மாற்றி எழுதிய விஜய்!

news

CM Vijay: எல்லாமே 10.. விஜய்யின் பதவியேற்பு விழா சென்டிமென்ட்டை கவனிச்சீங்களா?

news

கறுப்பு நிற கோட்டில்.. வித்தியாசமான கெட்டப்பில் பதவியேற்பு விழாவில் விஜய்!

news

CM Joseph Vijay: "C ஜோசப் விஜய் எனும் நான்"... தமிழக முதல்வராக பதவியேற்றார் விஜய்!

news

Vijay Sarkar: இது தான் விஜய் சர்க்கார்.. 9 அமைச்சர்களுடன் உற்சாக பதவியேற்பு.. உற்சாகத்தில் தவெக!

news

Assembly Protem Speaker: தற்காலிக சபாநாயகராக சோழவந்தான் எம்எல்ஏ கருப்பையா பதவியேற்றார்!

news

MK Stalin Attacks: எடுத்த எடுப்பிலேயே பணம் இல்லைன்னு பேச ஆரம்பிக்காதீங்க விஜய்.. மு.க.ஸ்டாலின்

news

CM Vijay Speech: கஜானாவில் என்ன இருக்கோ.. முதல்ல வெள்ளை அறிக்கை.. பிறகுதான் வேலையே.. விஜய்

அதிகம் பார்க்கும் செய்திகள்