சென்னை: பிளஸ்டூ தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில் அரியலூர் மாவட்டம் தேர்ச்சி விகிதத்தில் டாப்பில் உள்ளது. அடித்து நொறுக்கி 98.82 என்ற அளவிலான தேர்ச்சியை பதிவு செய்துள்ளனர் இந்த மாவட்டத்து மாணவிகளும், மாணவர்களும். வேலூர் கடைசி இடத்தில் உள்ளது.
பிளஸ்டூ தேர்வு முடிவுகள் இன்று வெளியாகின. வழக்கம் போல மாணவிகளே பட்டையைக் கிளப்பியுள்ளனர். மாணவர்களை விட அவர்களே அதிக அளவில் தேர்ச்சி அடைந்துள்ளனர். அரசுப் பள்ளிகளும் வழக்கம் போல சாதனை படைத்துள்ளன.
மாநில அளவில், மாவட்ட ரீதியாக பார்த்தால் மிகவும் பின்தங்கிய மாவட்டங்களில் ஒன்றான அரியலூர்தான் 98.82 சதவீத தேர்ச்சியுடன் முதலிடத்தைப் பிடித்து அசத்தியுள்ளது. 2வது இடத்தில் ஈரோடு (97.98), 3வது இடத்தில் திருப்பூர் (97.53) உள்ளன.

தென் மாவட்டங்களைப் பொறுத்தவரை கன்னியாகுமரி (97.01) முதலிடத்தில் உள்ளது. சிவகங்கை 96.71 சதவீத தேர்ச்சியுடன் 2வது இடத்தில் வருகிறது. விருதுநகர் 96.64 சதவீத தேர்ச்சியுடன் 3வது இடத்தில் இருக்கிறது.
மேற்கு மண்டலத்தில் ஈரோடு டாப்பில் உள்ளது. 2வது இடம் திருப்பூருக்கும், 3வது இடம் கோயம்பத்தூருக்கும் கிடைத்துள்ளது.
காவிரி டெல்டா மாவட்டங்களைப் பொறுத்தவரை நாகப்பட்டனம் மாவட்டம் 96.03 சதவீதத்துடன் முதலிடத்தைப் பிடித்துள்ளது. திருச்சி 2வது இடத்திலும், தஞ்சாவூர் 3வது இடத்திலும் வருகின்றன.
வட மாவட்டங்களைப் பொறுத்தவரை விழுப்புரம் 95.11 சதவீதத்துடன் முதலிடத்தில் உள்ளது. சென்னை 94.44 சதவீத தேர்ச்சியுடன் 2வது இடத்திலும், 94.32 தேர்ச்சியுடன் திருப்பத்தூர் 3வது இடத்திலும் உள்ளன.
மாவட்ட வாரியான தேர்ச்சி விகிதப் பட்டியல்
அரியலூர்- 98.82%
ஈரோடு- 97.98%
திருப்பூர் - 97.53%
கோயம்புத்தூர் -97.48%
கன்னியாகுமரி - 97.01%
சிவகங்கை - 96.71 %
பெரம்பலூர் -96.58%
விருதுநகர் - 96.64%
தூத்துக்குடி - 96.19%
கடலூர்- 96.06%
நாகப்பட்டினம் -96.03%
திருச்சி- 95.83%
தஞ்சாவூர் -95.80%
மதுரை- 95.74%
நாமக்கல் - 95.67%
திருநெல்வேலி - 95.53%
தர்மபுரி- 95.25%
விழுப்புரம் - 95.11%
ராமநாதபுரம்- 94.96%
திண்டுக்கல் - 94.90%
கிருஷ்ணகிரி - 94.83%
தென்காசி - 94.70%
சென்னை - 94.44%
தேனி - 94.43%
திருவாரூர்- 94.35%
சேலம் -94.32%
திருப்பத்தூர் - 94.31 %
செங்கல்பட்டு - 94.29%
நீலகிரி - 93.97%
கரூர்- 93.66%
திருவண்ணாமலை- 93.64%
காஞ்சிபுரம் - 93.27%
மயிலாடுதுறை - 93.25%
ராணிப்பேட்டை- 92.78%
புதுக்கோட்டை- 92.55%
திருவள்ளூர் - 91.49%
கள்ளக்குறிச்சி - 90.96%
வேலூர் - 90.79 %
புதுச்சேரி- 98.57
காரைக்கால் -98.12
ஐஸ்லாந்தும் என் ஆளுகையில்.. ஒத்தக் கொசு.. மொத்த நாடும் அலறுதே.. க(ப)டிச்சுப் பாருங்க!
12 மாவட்டங்களுக்கு இன்றும், 6 மாவட்டங்களுக்கு நாளையும் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்
பாமக செயல் தலைவராக ஸ்ரீகாந்திமதி நியமனம்: பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!
Cyclone Montha... அக்.,28ல் ஆந்திரா மாநிலம் காக்கிநாடா அருகே கரையை கடக்கிறது: வானிலை மையம் அறிவிப்பு
நெல்லின் ஈரப் பதம்.. தமிழ்நாட்டில் மத்தியக் குழு.. நாமக்கல் அரிசி ஆலையில் இன்று ஆய்வு
10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை நவ., 4ம் தேதி வெளியீடு: அமைச்சர் அன்பில் மகேஸ்!
காலையில் தினமும் கண் விழித்தால் கை தொழும் தேவதை... டீ.. ஆனால் வெறும் வயிற்றில் குடித்தால்??
மிரட்ட வரும் மோன்தா புயல்... யாருக்கு ஆபத்து... யாருக்கு மழை... தமிழ்நாட்டு நிலவரம் என்ன தெரியுமா?
விலை உயர்வு எதிரொலி.. பழைய தங்க நகைகளைப் போட்டு.. புது நகை வாங்க ஆர்வம் காட்டும் மக்கள்!
{{comments.comment}}