- பா.பானுமதி
ராணுவம்!
இந்தியாவை எஃகு கோட்டையாக்கி
எதிரிகளுக்கு சிம்ம சொப்பனம் ஆகி
எதிர்ப்பவர்களை சுக்குநூறாக்கி
இந்திய தாயை கண்ணின் இமைப்போல் காப்பதே ராணுவம்
ராணுவ வீரர்கள் தியாக தீபங்கள்
இரும்பு இதயம் கொண்ட இமயங்கள்
வணக்கத்திற்குரிய இறைவன்கள்
அர்ப்பணிப்பில் ஆகாயம் போல் உயர்ந்தவர்கள்
கௌரவத்தின் காந்தமான சின்னங்கள்
குடிகளை காக்கும் கொற்றங்கள்
சுற்றத்தை மறந்து சுடர் விளக்குகள்
அச்சம் என்பதே இல்லாத அற்புதங்கள்
துச்சமாக உயிரை என்னும் சுடர்கள்
ஒற்றுமையை தாங்கிப் பிடிக்கும் ஆணி வேர்கள்

பேரிடர்களை பிரித்து மேயும் பிரபுக்கள்
மனிதாபிமான மாண்புகள் காக்கும் மண்ணுயிர்கள்
நெருக்கடியிலும் நேர் நின்று கை கொடுக்கும் இணைந்த கைகள்
எல்லையை பாதுகாக்கும் இரும்பு கரங்கள்
தேசத்திற்கே முக்கியத்துவம் தரும் தேசத்தின் காதலர்கள்
நாட்டுப்பற்றுக்கு நல் உதாரணமாக விளங்கும் இந்தியாவின் நாடித் துடிப்புகள்
வாழ்க இந்திய ராணுவம்
வளர்க ராணுவ வீரர்களின் புகழ்
ஜெய்ஹிந்த்!
ஜனநாயகன் வழக்கு.. சென்னை உயர்நீதிமன்றத்தையே அணுக உச்சநீதிமன்றம் உத்தரவு
பொங்கல் மட்டுமல்ல இன்று.. இன்னொரு நாளும் இன்று கொண்டாடப்படுகிறது.. அது என்ன?
இந்தியாவை எஃகு கோட்டையாக்கி .. எதிரிகளுக்கு சிம்ம சொப்பனம் ஆகி!
வழிந்தோடும் பொங்கலுடன் இணையும் அனைத்து நற்பலன்கள்!
பொங்கலோ பொங்கல் என்றுரத்துக் கூவிட.. கிண்டிடக் கிண்டிடக்.. குலவையிட்டு!
மங்கலத் தை மலர்ந்த நாள் பொங்கல் வைத்து எங்கும் இன்பம்!
தை மாதம் பிறந்தது பொங்கலோ பொங்கல் .. பொங்கலோ பொங்கல் !
வைகைத் துயில் கலைந்து வாசலில் போட்ட கோலங்கள்!
வருக வருக.. தை மகளே வருக..!
{{comments.comment}}