பெங்களூரு: கோச்சடையான் பட விவகாரம் தொடர்பான மோசடி வழக்கில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் மனைவி லதா ரஜினிகாந்த்துக்கு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்ட நிலையில் தற்போது பெங்களூர் மாநகர முதலாவது தலைமை மெட்ரோபாலிடன் நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.
நடிகர் ரஜினிகாந்த்தை வைத்து அவரது மகள் செளந்தர்யா ரஜினிகாந்.த் கடந்த 2014ம் ஆண்டு கோச்சடையான் என்ற படத்தை எடுத்தார். இந்தப் படம் அனிமேஷனில் உருவாக்கப்பட்டது. இந்தப் படத்தின் தயாரிப்பாளர்களில் மீடியா ஒன் என்டர்டைன்மென்ட் நிறுவனமும் ஒன்றாகும். படத் தயாரிப்புச் செலவுகளுக்காக ஆட் பீரோ நிறுவனத்திடம் மீடியா ஒன் நிறுவனம் ரூ. 6.2 கோடி கடன் வாங்கியிருந்தது.
இந்தக் கடன் தொகைக்கான உத்தரவாதத்தில் லதா ரஜினிகாந்த்தும் கையெழுத்திட்டிருந்தார். ஆனால் வாங்கிய கடனை மீடியா ஒன் நிறுவனம் திருப்பித் தரவில்லை. இதையடுத்து மீடியா ஒன் நிறுவனத்தின் முரளி மற்றும் உத்தரவாதக் கையெழுத்துப் போட்டிருந்த லதா ரஜினிகாந்த் ஆகிய இருவர் மீதும் பெங்களூரு ஹலசூர் கேட் போலீஸ் நிலையத்தில் ஆட் பீரோ நிறுவனம் புகார் அளித்தது. அதன் பேரில் போலீஸார் லதா ரஜினிகாந்த், முரளி மீது வழக்குத் தொடர்ந்தனர்.

இந்த வழக்கை தள்ளுபடி செய்யக் கோரி லதா ரஜினிகாந்த் தாக்கல் செய்த மனு சமீபத்தில் உச்சநீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டது. அவர் விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டது. இந்த நிலையில் லதா ரஜினிகாந்த் விசாரணைக்கு ஆஜராகாமல் இருந்து வந்ததால் அவருக்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டது.
இதையடுத்து இன்று லதா ரஜினிகாந்த் கோர்ட்டில் நேரில் ஆஜரானார். அப்போது ஜாமீன் வழங்கக் கோரி அவர் சார்பில் மனு செய்யப்பட்டது. அதைப் பரிசீலித்த நீதிபதி ஆனந்த் கரிம்மன்னவர், இரு நபர் உத்தரவாதத்தின் பேரில் ஜாமீன் அளித்து உத்தரவிட்டார். பின்னர் வழக்கு அடுத்த ஆண்டு ஜனவரி 4ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
SIR:முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்: திருமாவளவன்
ஆந்திராவில் பேருந்து விபத்தில் 20 பேர் பலி: விபத்திற்கான காரணமாக வெளிவந்த அதிர்ச்சி தகவல்
ஐஸ்லாந்தும் என் ஆளுகையில்.. ஒத்தக் கொசு.. மொத்த நாடும் அலறுதே.. க(ப)டிச்சுப் பாருங்க!
12 மாவட்டங்களுக்கு இன்றும், 6 மாவட்டங்களுக்கு நாளையும் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்
பாமக செயல் தலைவராக ஸ்ரீகாந்திமதி நியமனம்: பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!
Cyclone Montha... அக்.,28ல் ஆந்திரா மாநிலம் காக்கிநாடா அருகே கரையை கடக்கிறது: வானிலை மையம் அறிவிப்பு
நெல்லின் ஈரப் பதம்.. தமிழ்நாட்டில் மத்தியக் குழு.. நாமக்கல் அரிசி ஆலையில் இன்று ஆய்வு
10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை நவ., 4ம் தேதி வெளியீடு: அமைச்சர் அன்பில் மகேஸ்!
காலையில் தினமும் கண் விழித்தால் கை தொழும் தேவதை... டீ.. ஆனால் வெறும் வயிற்றில் குடித்தால்??
{{comments.comment}}