- பாரதிராஜன்
வரதன் வேலூரிலுள்ள வருவாய்த்துறையில் வட்டாட்சியராகப் பணிபுரிந்து வந்தார்.
அவர் அலுவலக வேலையாக அடிக்கடி சென்னைக்கு உயர்நீதிமன்றத்தில் நடைபெறும் வழக்குகளில் கலந்து கொள்வார்.
அவருடைய மகன் ராஜன் பட்டபடிப்பு முடித்த பின் தற்காலிக வேலையாக சென்னையில் பணிபுரிந்து வந்தான். ராஜன் அவன் மாமா வீட்டில் தங்கி வேலைக்கு போய் வந்தான்.
வரதன் தன் அலுவலக வேலையாக சென்னைக்கு வரும்போது ராஜனைப்பார்த்து விட்டு அலுவலக வேலை முடித்து வேலூர் சென்றுவிடுவார்.
நீதிமன்ற வழக்கு தொடர்பாக, வக்கீலிடம் பேசிவிட்டு போகலாம் என்ற படியே, ராஜனிடம் சொல்ல அந்த சமயங்களில் யார்வீட்டிலும் தொலைபேசி கிடையாது. மளிகைகடைகளில் 3 நிமிடத்திற்கு கட்டணம், அதுவும் ஞாயிறு என்பதால் கடை மூடி இருந்தது.

ராஜன் தன் நண்பன் வீட்டில் பேச எண்ணி அங்கே சென்று, அவன் தந்தையிடமிருந்து நம்பர் வாங்கி டயல் செய்ய, கிடைக்கவே இல்லை.
ராஜன் அவன் அப்பாவிடமிருந்து அஞ்சல் அட்டை வாங்கி, நம்பரை பார்க்க, வக்கீல் அவரின் விலாசம், தொலைபேசி எண் இருந்தது, அதற்கு டயல் செய்ய வக்கீல் உடனே எடுக்க, வரதன் வக்கீலிடம் பேசினார்.
அதன்பிறகு ராஜனிடம் கேட்க, அப்பா, வக்கீல் இருப்பது மயிலையில்,அங்கே முதல் எண் நீங்க கொடுத்தது தப்பாக இருக்கவே, அவரின் வீட்டு அட்ரஸ் மூலமாக நம்பர் எடுத்து டயல் செய்தேன்.
நீங்கள் தபால் வந்ததும், வந்த தேதி எழுதி அதனைச்சுற்றி ஒரு வட்டம் போடுவீங்க, அதேமாதிரி இந்த அஞ்சல்அட்டையில் 28/06/76, ஆனால் வக்கீல் வீட்டு தொலைபேசி எண் 443256. உங்களுடைய செயல் எனக்கு தெரியும் என்பதால் தான் அஞ்சல் அட்டை வாங்கிப்பார்த்தேன் என்றான் ராஜன்.ஆமாம் நீ சொன்னது சரி என்ற படியே தந்தையும் மகனும், ராஜனின் நண்பனுடைய வீட்டில் இருந்து கிளம்பினார்கள்.
(எழுத்தாளர் பாரதிராஜனின் இயற்பெயர் ரங்கராஜன் , பாரதியார் பாடல்கள் மேல் உள்ள காதலால் பாரதிராஜன் என்கிற புனைப்பெயரில் கதை கட்டுரை மற்றும் கவிதை எழுதி வருகிறார். சென்னை அம்பத்தூரில் வசித்து வருகிறார்)
மனிதன் எப்போது மாமனிதன் ஆகிறான்?
PUNCTUATE YOUR PUNCTUALITY!
Social media & it's impact
தப்பாக நினைப்பார்கள்!!!
எனக்கு ஆசை.. உனக்கு ஆசை.. உன்னை நான் நேசிப்பதும்.. என்னை நீ நேசிப்பதும்!
Short Story: "மே...மே"
பேசும் தெய்வம்
மறவோம் பெருந்தலைவரை.. விருதுநகரின் வீர நாயகனை!
When anyone lies they will face the consequences
{{comments.comment}}